வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, October 15, 2011

கேள்வி என்னிடம் பதில் உங்களிடம்

நண்பர்களே இன்று உங்களிடம் ஒரு கேள்வி 






ஒரு எலுமிச்சை தோட்டம் .அந்த ஊரிலேயே அந்த ஒரு 
எலுமிச்சை தோட்டம் தான் .


அதனுள்ளே யாரும் அத்து மீறி உள்ளே செல்லக் கூடாதுன்னு
அதற்கு கடுமையாக பாதுகாப்பு போட்டுள்ளார்கள் .



அதனுள்ளே போக வேண்டும் என்றால் ஏழு கேட் (வாசல் )
தாண்டி தான் போக வேண்டும்.


ஏழு வாசலுக்கும் ஏழு காவல் காரன் (ஒரு கேட்டிற்கு ஒரு 
காவல் காரன் )


நம்ம ஹீரோவுக்கு எலுமிச்சம் பழம் தேவைப்பட்டது .கையில் 
காசும் இல்லை .எப்பிடியாவது வீட்டுக்கு எலுமிச்சம் பழம் 
எடுத்துக்கொண்டு போகவேண்டும் .மிகவும் அத்தியாவசியம் .


சரி காவல்காரனிடம் பேசி பார்ப்போம் என்று முதல் காவல் 
காரனிடம் சென்று கேட்கிறான் .ஐயா எனக்கு எலுமிச்சம் 
பழம் தேவைப்படுகிறது .எப்பிடியாவது உதவி பண்ணுங்கள் 
என்று பரிதாபமாக கேட்கிறான் .


காவல் காரனும் பரிதாபப் பட்டு சரி பறித்துக் கொள் .ஆனால் 
ஒரு கண்டிசன் என்கிறான் .


ஹீரோவும் என்னவென்று கேட்க ....


காவல் காரன் ஹீரோவிடம் நீ எலுமிச்சம் பழம் எத்தனை 
வேண்டும் என்றாலும் பறித்துக் கொள் .ஆனால் நீ கொண்டு 
செல்லும் பழங்களில் பாதி எனக்கு தந்து விட வேண்டும் 
என்று சொல்கிறான் .


அதற்கு ஹீரோவும் 
சரி ஐயா , நான் கொண்டு போகும் பழங்களில் பாதி உங்களுக்கு 
தந்து விடுகிறேன் ,அதிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எனக்கு 
திருப்பி தந்து விடுங்கள் .
என்று சொல்கிறான் .


காவல்காரனும் ஒத்துக் கொள்கிறான் .


இதே போல் ஏழு காவல் காரநிடமும் பேரம் பேசிக்கொண்டு 
தோட்டத்தில் சென்று பழம் பறித்துக்கொண்டு வீட்டுக்கு 
எடுத்து செல்கிறான் .

கேள்வி :- அவன் தோட்டத்தில் எத்தனை பழங்கள் பறித்தான் .
வீட்டுக்கு எத்தனை பழங்கள் எடுத்து சென்றான் .

கண்டிசன் :- எந்த ஒரு பழத்தையும் அரிய கூடாது .முழுசாக 
தான் இருக்க வேண்டும்.



எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம் இந்த சிம்பிளான கேள்விக்கான
பதிலை .


சரி அடுத்து



மனதில் தோன்றிய கிறுக்கல் 


எங்க ஊரிலும் 
ஆறு இருக்கு 
ஆற்றில....
மணல் இல்லை 
மணல் எல்லாம் 
ஊருக்குள்ள வீடாச்சு
அதை ...
வித்தவன் கல்லாவில 
காசாச்சு 
அதனால 
எங்க ஊரிலும் 
ஆறிருக்கு
ஆற்றுல 
மணல் இல்லை 









நன்றி நண்பர்களே 




டிஸ்கி :- அனைவரும் பதில் சொன்ன பிறகு விடை சொல்கிறேன் நண்பர்களே

36 comments:

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலமா?
14 பழங்கள் பறித்திருப்பானோ?

நிரூபன் said...

ஆற்று மணலை அகழ்வதன் விளைவுதனைச் சொல்லி நிற்கிறது அழகிய கவிதை.

• » мσнαη « • said...

மொத்தம் 128 பழங்கள் !!!


அவர் எடுத்து செல்வது ஒன்று!!!

நல்ல காவல்காரர்கள்!! விளங்கீரும்!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இங்கும் லஞ்ச ஊழலா ? .பாவம் தோட்டக்காரர்.

K.s.s.Rajh said...

128 பழம் பறிச்சு இருப்பார்

1வது காவல் காரனுக்கு
64 கொடுப்பார்

எஞ்சிய 64 ல்
2வது காவல் காரனுக்கு
32 கொடுப்பார்

எஞ்சிய 32ல்
3வது காவல் காரனுக்கு
16 கொடுப்பார்

எஞ்சிய 16ல்
4வது காவல்காரனுக்கு
8 கொடுப்பார்

எங்சிய 8 ல்
5வது காவல் காரனுக்கு 4 கொடுப்பார்

எஞ்சிய 4ல்
6வது காவல் காரனுக்கு 2 கொடுப்பார்

பின் எஞ்சிய 2ல்
7வது காவல் காரனுக்கு
1 பழத்தை கொடுத்துவிட்டு தான் ஒன்றை வீட்டிற்கு கொண்டு செல்லாவார்

என்ன பாஸ் விடை சரிதானே..


இதுக்கு டாகுத்தர் கிட்ட சொல்லியிருந்தா சும்மா கில்லி மாதிரி அத்தனை பழத்தையும் பறிச்சிட்டு வந்திருப்பார்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

ஆமா இப்ப என்ன கேள்வி கேட்கும் வாரமா?ஹி.ஹி.ஹி.ஹி.........

K.s.s.Rajh said...

இங்கு நான் முதல் காவல் காரன் என்று குறிப்பிட்டது பழம் பறிச்சு கிட்டு வரும் போது முதல் நிற்கும் காவல் காரனில் இருந்து ஆரம்பிப்பார்..போகும் போது அவர் 7வது காவல் காரனாக இருந்திருப்பார் வரும் போது அவர்தானே முதலாவதாக இருப்பார் அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்

Unknown said...

என்ன பாஸ் இப்படி ஒரு கேள்வி கேட்டு மண்டைய பிச்சி எடுத்துட்டீங்களே பாஸ்

எனக்கு தெரியல

M.R said...

K.s.s.Rajh said...

என்ன பாஸ் விடை சரிதானே..

நண்பரே நம்ம ஹீரொ காவல்காரனிடமிருந்து திரும்ப பெரும் ஒரு பழத்தை கணக்கில் விட்டுட்டீங்களே

M.R said...

நிரூபன் said...
வணக்கம் நண்பா,
நலமா?
14 பழங்கள் பறித்திருப்பானோ?

வணக்கம் ந்ண்பா .....நலமே.

உங்களுக்கே சந்தேகமா பதிலில் ...

விடை அனைவரும் வந்து சென்ற பிறகு

M.R said...

நிரூபன் said...
ஆற்று மணலை அகழ்வதன் விளைவுதனைச் சொல்லி நிற்கிறது அழகிய கவிதை.//

ஆமாம் நண்பா ,சுத்தமாக சுறண்டி விட்டார்கள்

M.R said...

• » мσнαη « • said...
மொத்தம் 128 பழங்கள் !!!


அவர் எடுத்து செல்வது ஒன்று!!!

நல்ல காவல்காரர்கள்!! விளங்கீரும்!!

ஹா ஹா இப்பொழுது எங்கும் கைக்கூலி வலுத்து விட்டது நண்பா.

விடை பிறகு

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.
இங்கும் லஞ்ச ஊழலா ? .பாவம் தோட்டக்காரர்.//

ஹா ஹா சைடு பிசினஸ் அவர்களுக்கு

M.R said...

K.s.s.Rajh said...
ஆமா இப்ப என்ன கேள்வி கேட்கும் வாரமா?ஹி.ஹி.ஹி.ஹி.........

சும்மா கேட்டு பார்க்கிலாமே என்று ஹி ஹி ஹி

M.R said...

வைரை சதிஷ் said...
என்ன பாஸ் இப்படி ஒரு கேள்வி கேட்டு மண்டைய பிச்சி எடுத்துட்டீங்களே பாஸ்

எனக்கு தெரியல

ஹா ஹா பிறகு விடையை பார்க்க வாருங்கள் நண்பா

K.s.s.Rajh said...

///M.R said...
K.s.s.Rajh said...

என்ன பாஸ் விடை சரிதானே..

நண்பரே நம்ம ஹீரொ காவல்காரனிடமிருந்து திரும்ப பெரும் ஒரு பழத்தை கணக்கில் விட்டுட்டீங்களே////

அட ஆமால்ல..

அப்ப இதுக்கு டாகுத்தர் தளபதிதான் ஹீரோவா இருக்கனும்..ஹி.ஹி.ஹி.ஹி....

கோகுல் said...

ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!

கோகுல் said...

என்னங்க அரசியல் பதிவு தான இது?
ஆமா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக எல்லா மட்டத்துக்கும் கொடுக்க வேண்டியத கொடுக்க வேண்டிருப்பத மறைமுகமா சுட்டி காட்டிருக்கே?

M.R said...

K.s.s.Rajh said...
///M.R said...
K.s.s.Rajh said...

என்ன பாஸ் விடை சரிதானே..

நண்பரே நம்ம ஹீரொ காவல்காரனிடமிருந்து திரும்ப பெரும் ஒரு பழத்தை கணக்கில் விட்டுட்டீங்களே////

அட ஆமால்ல..

அப்ப இதுக்கு டாகுத்தர் தளபதிதான் ஹீரோவா இருக்கனும்..ஹி.ஹி.ஹி.ஹி....//

ஹா ஹா ஹா

M.R said...

கோகுல் said...
ஒரு பழம் எடுத்துட்டு போவாரு!

சரியா தவறா என்று பிறகு நண்பா

M.R said...

கோகுல் said...
என்னங்க அரசியல் பதிவு தான இது?
ஆமா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக எல்லா மட்டத்துக்கும் கொடுக்க வேண்டியத கொடுக்க வேண்டிருப்பத மறைமுகமா சுட்டி காட்டிருக்கே?//

கோத்து விடரீங்களோ ,நாங்க ஒத்துக்க மாட்டோம்ல...

சென்னை பித்தன் said...

இதுக்குப் பதில் சொல்ல யோசிக்க ஆரம்பிச்சா,நிச்சயம் நமக்குத்தான் எலுமிச்சம்பழம் தேவை!

அம்பலத்தார் said...

அவன் பறித்தது இரண்டு பழங்கள் ஒவ்வொரு காவலாளியிடமும் ஒன்ற கொடுது மீண்டும் திரும்ப 1 பெற்று கடைசியில் 2 பழங்களுடன் வீடு சென்றான்

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்ன...? டாக்டர் மருந்து சொல்வார்னு பார்த்தா நம்மளையே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சிருவாரோ...???

கூடல் பாலா said...

தோட்டத்துக்கு ஓனர் நீங்களா ?

rajamelaiyur said...

கிறுக்கல் அருமை

rajamelaiyur said...

விடை தெரியும் .. ( ) சரியா ? ( உஷ் ரகசியம் )

RAMA RAVI (RAMVI) said...

ஒரே நிமிடத்தில் 128 என கண்டு பிடித்துவிட்டேன்.விடை சரியா?

மனதில் தொன்றியது கிறுக்கல் இல்லை,உண்மை. கவிதை வடிவில் அழகாக கொடுத்து இருக்கீங்க.

சக்தி கல்வி மையம் said...

கிறுக்கலாக சொல்லப்பட்ட உண்மை..

குறையொன்றுமில்லை. said...

ஆற்றுமணல் பற்றிய கவிதை நல்லா இருக்கு. எலுமிச்சம்பழம் உங்க பதிலுக்காக வெயிட்டிங்க். பலரும் பலவிதமா யோசிச்சு இருக்காங்க.

vetha (kovaikkavi) said...

இரண்டு பழம் பறித்தார், இரண்டுடன் வீடு சென்றார். மணல் நல்ல வரி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

கேள்வியெல்லாம் புரியுது
பதில் தான் தெரியல...
மண்டைய குழப்ப வைசுடீன்களே
நண்பரே...

மகேந்திரன் said...

14 பழங்கள் னு நினைக்கிறேன் சரியா??

M.R said...

நண்பர் அம்பலத்தார் மற்றும் சகோதரி
இலங்கா திலகம் இருவரும் சரியான பதில் தந்துள்ளார்கள்

Unknown said...

மணல் கவிதை-படிப்போர்
மனதில் கொள்ளும் கவிதை!
அருமை!
ஓட்டுப் போடத்தெரியும்
கணக்குப் கோடத் தெரியாது

புலவர் சா இராமாநுசம்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out