வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, November 27, 2011

நீடித்த இல்லற இன்பம் அனுபவிக்க -தேன் மருத்துவம்

மகிழ மரத்துப் பூவை தேவையான அளவு கொண்டு வந்து
ஒரு சட்டியில் இட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அரை
டம்ளராகச் சுண்டக் காய்ச்சி கொள்ள வேண்டும்.



காய்ச்சிய பசும் பாளுடன் இதை கலந்து இரண்டு தேக்கரண்டி
தேன் சேர்த்து இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உட்கொள்ள
வேண்டும்.


தொடர்ந்து 21 நாட்கள் உட்கொள்ள தாது புஷ்டி ஏற்படும்.




நமது தளத்தில் இது சம்பந்தப் பட்ட பழைய இடுக்கைகள் 
படிக்காதவர்களுக்காக 




ஆண்மை குறைவு தீர அழகிய வழிமுறைகள் (வயாகரா )




ஆண்மை கிடைக்க அழகிய வழிகள் 


ஆண்மை பெருக சந்தோசம் கிடைக்க பாகம் -2

மலட்டுத் தன்மையும் அதன் காரணங்களும் 


தாது விருத்தி ஏற்பட 


விந்துக் கசிவு


கனவின் காரணமாக விந்துக் கசிவு இருந்தால் அதனை
கட்டுப் படுத்த துளசி வேரைக் கொண்டு வந்து சுத்தமாக
கழுவி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து வெய்யிலில்
காய விடவேண்டும்.


நன்றாகக் காய்ந்ததும் உரலில் இட்டு இடித்துத் தூளாக்கி சலித்து 
எடுத்து வாய் அகன்ற கண்ணாடி புட்டியில் பத்திரப் படுத்திக் 
கொள்ள வேண்டும்.


வேளைக்கு ஒரு தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி 
தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.


இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள 
வேண்டும்.


ஒரு நாள் விட்டு ஒரு நாளாக பதினைந்து நாட்கள் உட்கொள்ள 
கனவு காரணமாக இந்திரிய கசிவு நின்று விடும்.




தாது புஷ்டி உண்டாக 


சீந்தில் கொடி : 10 கிராம் 


முருங்கை விதை : 10 கிராம் 


மதன காம்பு : 5 கிராம் 


ஓமம் : 5 கிராம் 


பரங்கிச் சக்கை : 5 கிராம் 


இந்த சரக்குகளை சேகரித்துக் கொள்ள வேண்டும்.


சீந்தில் கொடியைப் பொடிபொடிப் பொடியாக வெட்டி 
வெயிலில் போட்டு சருகாக காயவைத்து எடுத்துக் 
கொள்ள வேண்டும்.


இதனையும் ,மற்ற சரக்குகளையும் தனித்தனியாக இடித்து 
சலித்து எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.


வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு பத்திரப் 
படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


அன்றாடம் காய்ச்சிய ஒருடம்ளர் பசும் பாலில் தேன் 
ஒரு கரண்டி போட்டு ,ஒரு தேக்கரண்டி தூளையும் 
சேர்த்து நன்றாகக் கலக்கி குடித்து விட வேண்டும்.


இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் 
உட்கொள்ள வேண்டும்.


தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி 
உண்டாகும் .
உடல் வலிமையும் வனப்பும் பெறும்.




நன்றி 

11 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

M.R said...

விரைவு வரவிற்கும் ,அன்பு கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே

மகேந்திரன் said...

தேனின் மருத்துவ பயன்களை அழகுபட
சொல்லிவரும் தங்களுக்கு பலமான கைத்தட்டல்கள் நண்பரே....

Yaathoramani.blogspot.com said...

தேனுக்கு இத்தனை மகத்துவமா என
மலைக்க வைக்கிறது
பயனுள்ளஅருமையான
பதிவு வாழ்த்துக்கள்
த.ம 4

தமிழ்வாசி பிரகாஷ் said...

தேனின் பயன்களை பகிர்ந்தமைக்கு நன்றி...

நம்ம தளத்தில்:
"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

M.R said...

மகேந்திரன் said...
தேனின் மருத்துவ பயன்களை அழகுபட
சொல்லிவரும் தங்களுக்கு பலமான கைத்தட்டல்கள் நண்பரே....//

அன்பு பாராட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே

M.R said...

Ramani said...
தேனுக்கு இத்தனை மகத்துவமா என
மலைக்க வைக்கிறது
பயனுள்ளஅருமையான
பதிவு வாழ்த்துக்கள்
த.ம 4//


அழகான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

M.R said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
தேனின் பயன்களை பகிர்ந்தமைக்கு நன்றி...//


நன்றி நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா தேனில்தான் என்னெல்லாம் மருந்து இருக்குய்யா ஆச்சர்யமா இருக்கு...!

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
யப்பா தேனில்தான் என்னெல்லாம் மருந்து இருக்குய்யா ஆச்சர்யமா இருக்கு...//


ஆமாம் நண்பரே

Unknown said...

தேனோ இனிமை!அதை
தினமும் குழைத்துப்
பதிவாய்தருகிறீர்
த ம ஓ 5

புலவர் சா இராமாநுசம்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out