இயற்கை மருத்துவம்
நண்பர்களே வணக்கம்
தங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி
இன்று.............
வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வீட்டு வைத்தியம்
வயிற்று வலிக்கு
கிராம்பை நீரிலிட்டு கஷாயமாக்கி வேளைக்கு 30 மில்லி
வீதம் அருந்திவர வயிற்று வலி குணமாகும் .
உஷ்ணத்தால் வந்த வயிற்று வலிக்கு
ஆமணக்கு செடியின் இளந்தளிர் இலைகளை விளக்கெண்ணெய்
விட்டு வதக்கி தொப்புளின் மீது வைத்து கட்ட உஷ்ணத்தால் வந்த வயிற்றுவலி குணமாகும்
அஜீரணம் காரணமாக வயிற்று வலி வந்தால் பெருஞ்சீரகம் ,
கருஞ்சீரகம் இரண்டையும் கஷாயமாக்கி குடித்தால் அஜீரணம்
நீங்கி வயிற்று வலி குணமாகும் .
சோறு வடித்த நீரில் சிறிது உப்பிட்டு அருந்துவோருக்கு நன்கு
ஜீரண சக்தி உண்டாகும் .
ஆலமரத்து இளம் மொட்டுகளை கொண்டு வந்து ,அம்மியில்
வைத்து மைபோல் அரைத்து ,சிறிது எலுமிச்சை காயளவு
ஒரு தம்ளர் பசும்பாலில் கலந்து காலை ,மாலை இருவேளை
கொடுக்க சகல வயிற்று கோளாறும் தீரும் .
வயிறு உப்புசத்திற்கு
சாதம் வடித்த கஞ்சி நீரில் சிறிது மஞ்சள் தூளை கலந்து ,
தெளிய வைத்து அந்நீரை அருந்த வயிறு உப்புசம் தணியும்.
கடுகு கீரையை கறி செய்து சாப்பிட்டால் வயிறு உப்புசம்
தீரும் அத்துடன் வயிற்று பொருமல் ,மந்தம் தீரும் .
பிரண்டையை கணு நீக்கி வதக்கி அத்துடன் உளுத்தம் பருப்பு .
,சிறிது வெந்தயம் ,மிளகாய் வற்றல் ,சிறிது உப்பு சேர்த்து
துவையல் அரைத்து உணவுடன் உண்ண வயிற்று உப்புசம் தீரும்.
மற்றும் வயிற்று வலி ,வயிற்று கடுப்பு ,வயிற்று தொல்லை ,
மூலக் கடுப்பு ,மலச்சிக்கல் யாவும் தீரும்.
அஜீரனத்துக்கு மருந்து
அரைத் தேக்கரண்டி ஓமத்தையும் ,கால் தேக்கரண்டி
உப்பையும்,அரைத்து தூளாக்கி வாயிலுட்டு வெந்நீர் அருந்த
அஜீரணம் நீங்கும். சிறிது நேரத்தில் நல்ல பசியெடுக்கும் .
ஜீரண சக்திக்கு பூண்டு குழம்பு :-20 பூண்டு பற்களை எண்ணையில்
வதக்கி ,சிறிதளவு மிளகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,கொத்துமல்லி ,
வெந்தயம் ,மஞ்சள்,பெருங்காயம் இவற்றை நன்றாக அரைத்து
குழம்பாக்கி தாளித்து மதியம் ,இரவு உணவுடன் சாப்பிட்டு வர
நல்ல பசியை தூண்டும் .நாவில் உள்ள கசப்பு சுவை மாறும் .
நல்ல பசியெடுக்க
இலந்தளிராக உள்ள கொய்யா இலைகளை கொண்டு வந்து ,
தண்ணீரில் கழுவிவிட்டு காலை வேளை மட்டும் ஐந்து
இலைகளை வாயில் போட்டு மென்று தின்று விட்டால் நல்ல
பசி உண்டாகும் .
மிளகு ,சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள் செய்து
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர பசி மந்தம் நீங்கும் .
இலந்தை வேரை கஷாயமாக்கி அருந்த நல்ல பசி உண்டாகும் .
அத்துடன் மலச்சிக்கல் ,கீழ் வாதம் தீரும் .
காரா கருணைக்கிழங்கு, அகத்திக் கீரை ,இஞ்சி ,செவ்வாழைப்
பழம் ,வெள்ளரிக்காய் ,பசு தயிர் ,பேரீச்சம் பழம் ,பெருங்காயம்
,பனை நுங்கு ,நாரத்தங்க்காய் ஊறுகாய் ,சுண்டைக் காய் வற்றல் ,வெள்ளாட்டுப் பால் ,ஆகியவை சாப்பிட நல்லபசி உண்டாகும் .
இஞ்சி சாரும் ,எலுமிச்சை சாரும் கலந்து சிறிது உப்பிட்டு
அருந்தினால் சகல வயிற்றுக் கோளாறும் தீரும் .
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து தூளாக்கி மூன்று விரலால்
எடுக்கும்அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் பருக வேண்டும் .
இவாறு காலை மாலைசாப்பிட நன்கு பசி எடுக்கும்
இத்துடன் பூண்டு ,மிளகு சீரகம் சேர்த்து சீரக ரசம் வைத்து
உணவுடன் உண்ண பசி மந்தம் தீரும் ,ஜீரண சக்தி உண்டாகும் .
ஏப்பம் வருவதைத் தடுக்க
பாகல் இளைச்சாற்றை எடுத்து ,ஒரு கரண்டி மஞ்சள் தூளை
கலந்து அருந்த ஏப்பம் வருவது நிற்கும் .
வாயுத் தொல்லையும் தீரும் .
கொத்துமல்லியை வறுத்து ஒன்றிரண்டாக இடித்து கஷாயம்
செய்துசெய்து காலை மாலை அருந்த அஜீரணக்
கோளாறுகள் அகலும் .