புளிச்ச கீரை
தேகம் வலுக்கும் போகமிகக் கொடுக்கும்
தீராத பித்தம் இரத்தபேதி யோட்டுங்காண்
சுவாசம் சீராகும் வேல்விழிமாதே உண்ணத்தகுந்த
புளிச்ச கீரை குணத்தை கூறு .
புளிச்ச கீரை தேகத்திற்கு மிக்க வலுவை தரும் .போகத்தில் நாட்டத்தையும் ஏற்படுத்தும் . தீராத பித்தத்தை போக்கும் . இரத்த பேதியை நிறுத்தும் .நுரையீரலை வலுப்படுத்தும் .சுவாசத்தை சீர் செய்யும் .
புளிச்ச கீரையின் எல்லாப் பகுதியும் உணவுக்கு ஏற்றதே . புளிச்ச கீரையுடன் பருப்பு ,நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட உரிய பலன்களை தரும் .
குறிப்பு :- பெண்களுக்கு வரும் மார்புப் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு உண்டு .
No comments:
Post a Comment
இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே