முந்தய பதிவில் மனதால் ஏற்படும் பிரச்னைகள் பார்த்தோம் .அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பார்க்க போவது ..
நம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் உண்டு .மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே குறிக்கிட்டு எதையாவது சொல்வோம் .அல்லது ஒருவர் ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன்பே , நாம் குறிக்கிட்டு அந்த வாக்கியத்தை முடித்து விடுவோம் .இது எப்படி பார்த்தாலும் நல்ல பழக்கமல்ல .
மற்றவர்களின் பேச்சில் குரிக்கிடுகின்றபோது இரண்டு காரியங்கள் நாம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம் .
ஒன்று பேசுகின்றவரின் எண்ணங்களை தொடர்வது .இரண்டாவது நம்முடைய எண்ணங்களை தொடர்வது .
இதன் விளைவாக சம்பந்தப்பட்ட இருவருமே பேச்சையும் , சிந்தனையும் வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . இருவருமே பதட்டத்துக்கு ஆளாகின்ற நிலையம் ஏற்படுகிறது .
ஒருவர் சொல்வதை இன்னொருவர் கவனித்து பதில் சொல்வதை விட , இருவரும் தாங்கள் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையும் ஏற்படுகிறது .
ஒருவர் பேசுவதை இன்னொருவர் இடைமறிக்கும் போது அவர் சொல்வதை கவனிப்பதற்கு பொறுமையும் , நேரமும் எங்கே இருக்க போகிறது ?
மற்றவர்கள் பேச்சில் குறுக்கிடுவது நம்மை அறியாமலே நிகழ்கின்ற நிகழ்ச்சி .தவறான நோக்கம் எதுவும் கூட இல்லாமல் இருக்கலாம் .
அதனால் விளைகின்ற தீமை கண்ணுக்குப் புலனாவதும் இல்லை . நம்மால் உணர முடிவதும் இல்லை .ஆனால் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டு ,இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டுமென எண்ணினால் தவிர்த்து விடலாம் .
ஒருவருடன் பேச ஆரம்பிக்கும் போதே அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் .
குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள் .அவர் சொல்வதை நீங்கள் முழுமையாக கேட்ட பிறகு , நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து தெளிவாக பேச முடியும் .
இதை கடைபிடிக்க ஆரம்பித்தால் எவருடனும் சலனமற்ற முறையில் நிதானமாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது சாத்தியமாகிறது .மற்றவர்களின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள்.தியானம் என்பது ஒரு வேள்வி
.கோபம் குறைக்கும் ,அன்பை வளர்க்கும் .
அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் .
நண்பர்களே மனம்போல் வாழ்க்கை தொடர் பற்றிய உங்களுடைய கருத்து சொல்லவும் .தங்களுக்கு இத்தொடர் பிடித்திருக்கிறதா ,இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை .
பாகம் ஒன்றில் தாங்கள் கருத்து ஒன்றும் சொல்லவில்லை .தயவு செய்து தங்கள் கருத்தை பதிவிடுங்கள் நண்பர்களே.அது எழுதும் எங்களுக்கு ஊக்கப்படுத்தும் .
உங்கள் நண்பன்
அருமை. தொடருங்கள்,இது போன்ற மனவள கட்டுரைகளை.
ReplyDeleter.elan said...
ReplyDeleteஅருமை. தொடருங்கள்,இது போன்ற மனவள கட்டுரைகளை.
நன்றி r.elan நண்பரே