சிகரெட்
தனக்கு தானே
வைத்துக்கொள்ளும்
கொள்ளி
வெள்ளை சீலைகாரியின்
(விதவை )
நெற்றியில் சிகப்பு போட்டு
தன்னை பொசுக்கும்
ஜீவனின் நெஞ்சை
பொசுக்கும் வஞ்சகன்
எமனுக்கு நண்பன்
உபயோகிப்பவர்க்கு
எமன்
==========================================================
ஹைக்கூ
சோறு இல்லாமல் செத்தவன்
வாயில் யாரோ போட்ட
வாய்க்கரிசி
====================================================
காதல்
தினந்தோறும் நான் இரவு
படுக்கும் போது
உனது பெயரை உச்சரித்து
விட்டுதான் படுப்பேன்
எனது கடைசி தூக்கம்
அதுவாக இருந்தால்
நான்.........
கடைசீயாக உச்சரித்ததும்
உனது பெயராக இருக்கட்டுமே
==================================================
ரோட்டோர மரங்கள் என்ன
சிறைக்கைதிகளா
அவைகள் முதுகிலும்
எண்கள் இருக்கிறதே
================================================
ஓட்டை
ஊருக்கு போகையிலே மழை
நனையாமல் இருக்க
ஓடிச்சென்று பேருந்தில்
ஏறினேன்...
ஐயஹோ .....
அதனுள்ளும் மழை
===================================
ஹி ..ஹி.. நானும் கவிதை எழுதி பார்த்தேன் நண்பர்களே
நல்லா இருக்கான்னு பார்த்து (படிச்சு )
சொல்லுங்க நண்பர்களே .
உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று சொன்னாலும்
ஏற்றுக்கொள்கிறேன் நண்பர்களே
விமர்சனம் செய்யுங்களேன் எழுதுபவர்களுக்கு ஒரு எனெர்ஜி டானிக்காக ..
உங்கள்
நண்பன்
நண்பன்
அருமை சகோ தொடருங்கள்
ReplyDeleteநிமிடங்கள் (கவிதை)
கிருபா said...
ReplyDeleteஅருமை சகோ தொடருங்கள்
நன்றி கிருபா தோழரே
super pangali arumaya eruku negathaadutha kaathasan
ReplyDelete