Wednesday, July 13, 2011

ஐயோ ஆள விடு சாமி

ஒருவர் :- உங்களுக்கு குழந்தை பிறந்திருக்காமே
மற்றொருவர் :- ஆமாங்க , ஆண்குழந்தை 
ஒருவர் :- என்ன பேர் வச்சிருக்கீங்க 
மற்றொருவர் :-லோராண்டி
ஒருவர் :- என்ன பேர்யா இது 
மற்றொருவர் ;-என்ன இப்பிடி கேட்டுபுட்டிங்க , சித்தர் பாடல்களிலேயே வந்திருக்கே 
ஒருவர் :- என்னது?
மற்றொருவர் :- நந்தவனத்தி  " லோராண்டி  "
===============================================
கோர்ட்டில் ஒரு வித்தியாசமான விவாகரத்து வந்தது .
அதை விசாரிக்க கோர்ட் கூடியது '


வாதி கணவன் , பிரதிவாதி மனைவி .
கணவன் விவாகரத்து கேட்டிருந்தான் ,
மனைவி தன கணவன் மீது புகார் கூரியிருந்தாள் தன் கணவன் தன் மீது அபாண்டமாக பழி போட்டு விவாகரத்து கேட்கிறார் என்று .

நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க அரசாங்க வக்கீலை குறுக்கு விசாரணை செய்ய சொன்னார்.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்மணியிடம் ஆரம்பித்தார்  .

வக்கீல் :-" அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை "

பெண் :- " அடுப்படியில் பிரச்சனை எதுவும் இல்லைங்கோ "

வக்கீல் :- " ப்ச் , உங்களுக்கிடையில் என்ன தகராறு "

பெண் ;-" எங்க கடையில தகராறு எதுவும் இல்லைங்களே ,நல்லாத்தானே ஓடுது 

வக்கீல் :- " அடடா , உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று கோர்டில் சொல்லுங்க "

பெண் :- தாம்பரத்திலே எங்களுக்கு உறவுக்காரங்க யாரும் இல்லீங்க , இருந்தாத்தானே சங்கடம் "

வக்கீல் :- சரி அத விடு , கருத்து வேறுபாடு உண்டா ,"

பெண் :- நானும் கருப்பு தான் , அவரும் கருப்பு தான்  .வேறுபாடு ஏதும் இல்லீங்க "

வக்கீல் :- "(முறைத்தபடியே )..வீட்டுக்காரரோட என்ன சண்ட "

                                                                  

பெண் :- " வீட்டு காரரோட எதுக்குங்க  சண்டை,மாசமான ஒண்ணாந்தேதி அவரு வாடகையை வாங்கிட்டு அவுரு போயடுவாருங்களே"

வக்கீல் :- " அய்யோ ,உன் புருஷன் எதுக்கு விவாகரத்து கேட்கிறார் 

பெண் :- " அதுங்களா அவரு என்கிட்டே பேசரப்பெல்லாம்  ரத்தகொதிப்பு வந்திடுதாம் " . இப்ப இவ்வளவு நேரம் நீங்க என்னிடம் பேசினீங்களே , உங்களுக்கு இரத்த கொதிப்பா வந்துடுச்சு , இது அபாண்டந்தானே "

நீங்களே சொல்லுங்க வக்கீல் ஐயா என்று கேட்டாள் , பிரசர்க்கு மாத்திரை முழுங்கி கொண்டிருந்த வக்கீலைப்பார்த்து .

 வக்கீல் :-ஐயோ ஆள விடு சாமி ( வக்கீல் தலை தெறிக்க ஓடுகிறார் )

====================================================
சிரிச்சீங்களா நண்பர்களே 

சிரிச்சவங்க சொல்லிட்டு போங்களேன் 

சிரிப்பு வரலேன்னாலும் சொல்லிட்டு போங்களேன் நண்பர்களே 

M.R


11 comments:

  1. சிரித்தோம். பிரசர் மாத்திரை முழுங்கிய வக்கீலுக்கு அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...
    சிரித்தோம். பிரசர் மாத்திரை முழுங்கிய வக்கீலுக்கு அனுதாபங்கள்.

    தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் மேடம்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே,

    இந்த மாதிரி மனைவி அமைஞ்சா ?
    சூப்பர் காமெடி..

    ரத்தக் கொதிப்பு...
    அருமை..


    வாழ்த்துக்கள்..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  4. வணக்கம் தோழரே,

    ஒரு வேண்டுகோள்

    கருத்துரைக்க வருபவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இந்த WORD VERIFICATION OPTION ஐ BLOGGER SETTINGS லிருந்து நீக்கிவிடுங்களேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் நண்பரே,

    இந்த மாதிரி மனைவி அமைஞ்சா ?
    சூப்பர் காமெடி..

    ரத்தக் கொதிப்பு...
    அருமை..


    வாழ்த்துக்கள்..
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. வணக்கம் தோழரே,

    ஒரு வேண்டுகோள்

    கருத்துரைக்க வருபவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இந்த WORD VERIFICATION OPTION ஐ BLOGGER SETTINGS லிருந்து நீக்கிவிடுங்களேன்.
    நீக்கி விட்டேன் நண்பரே

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    ஹா ஹா ஹா 2 செம


    வாருங்கள் வரவேற்கிறோம் ,வாழ்த்துங்கள் வளர்கிறோம்

    ReplyDelete
  8. சிரிப்ப வரவைக்கறது பெரிய விஷயமுங்க..உங்க பதிவு அருமை நன்றி!

    ReplyDelete
  9. விக்கியுலகம் said...
    சிரிப்ப வரவைக்கறது பெரிய விஷயமுங்க..உங்க பதிவு அருமை நன்றி! நன்றி நண்பரே

    ReplyDelete
  10. அட நல்லாருக்கே... படத்துல use பண்ணிட போறாங்க

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே