வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, July 17, 2011

பற்களால் அழகாகும் சொற்கள்

தெரிஞ்சிக்கோங்க

பல் போனால் சொல் போச்சு

என்ற பழமொழியை கேள்வி பட்டிருப்பீர்கள் . பல் இருந்தால்
சொல் அழகு . சொல் மட்டுமல்ல உணவு மென்று உண்பதற்கும்
முக அழகிற்கும் பல் முக்கியமானது


ஒரு முகத்திற்கு அழகு கொடுப்பது பல்
( அதற்காக போக்கை வாய் சிரிப்பு அழகில்லையா 
என்று கேட்கபடாது )





முக்கியமான ஒரு விஷயம் மண்ணில் பலகாலம் 
புதையுண்டு கிடந்தாலும் அழியாத பற்களை நம்
 மக்கள் சரியாக பராமிக்காமல் அழித்துவிடுகின்றனர் .

ஜவ்வு மிட்டாய் வேண்டாம்பா என்று நீங்கள் 
சொல்வது ஏன் காதில் விழுகிறது .எனவே சுருக்கமாக ,

பற்களை பராமரிக்க:

தினந்தோறும் பல் விளக்குங்கள் .

ஆகாரத்திர்க்கு பின் வாய் கொப்பளிக்கவேண்டும்
.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை பல் துலக்கும் 
ப்ருஷ் மாற்றவேண்டும்

புகையிலை ,பாக்கு பயன்படுத்தாதீர்கள்

 .பல் துலக்கிய பின் ஈறுகளை மசாஜ் செய்ய மறக்காதீர்கள்
இனிப்புகளை அதிகம்  தின்னாதீர்கள்

கற்களின் துகள்களை பல் துலக்க பயன்படுத்தாதீர்கள்

ஒருபல்லில் சிறிது சொத்தை அல்லது புழு வெட்டு 
ஏதேனும் வந்தால் உடனே பல்மருத்துவரை பார்க்க வேண்டும்
 அடுத்த பல்லில் பரவாமல் இருக்க .

பல்லில் வரும் நோய்கள்


பல்சொத்தை ,
பல் வலி
பல்லில் கரை படித்தல் ,
பல்லை தாங்கியிருக்கும் ஈறுகள் சேதாரமடைதல் ,
பல்லின் வேர்கள் அழுகுதல்
கிருமி தொற்று
மற்றும் பல ......

பல்வலியோ ,மற்ற பல் சம்பந்தமான பிரச்சனையோ 
வந்தால் பல் மருத்துவரை பாருங்கள் .
ஆங்கில மருத்துவம் அல்லாது நாம் வீட்டிலேயே 
சில முன் பாதுகாப்பு தர சில இயற்கை  வைத்திய 
முறைகளை பற்றி நாளை பார்க்கலாம் நண்பர்களே .
தொடரும்...........

 சரி நண்பர்களே தங்களின் கருத்துகளை கூறுங்கள் .
தங்கள் ஆதரவிற்கு நன்றி
உங்கள் 






8 comments:

கிராமத்து காக்கை said...

பயனுள்ள பதிவு நண்பரே

M.R said...

கிராமத்து காக்கை said...
பயனுள்ள பதிவு நண்பரே

நன்றி நண்பரே

மகேந்திரன் said...

பல்போனால் சொல்போச்சு

பற்களை பேணிக்காத்தல் அவசியம்.
தேவையான பதிவு.
பர்களுக்கான இயற்கை வைத்தியமுரைகளை
தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.

M.R said...

நன்றி மகேந்திரன் .தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே .

RAMA RAVI (RAMVI) said...

உபயோகமான பதிவு, நன்றி ரமேஷ்...

M.R said...

நன்றிக்கு நன்றி ராம்வி

மாய உலகம் said...

பல் போச்சுன்னா சொல் போச்சுன்னு சொல்வாங்க....எனவே பற்களை பேண்வோம்..
ஆரோக்கிய பதிவு

M.R said...

நன்றி மாய உலகம் நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out