Saturday, July 30, 2011

நல்லா சிரிங்க... கவலைய மறங்க


குறிப்பு : இதிலுள்ள நகைச்சுவை சிரிப்பதற்காக மட்டுமே .யாரையும் புண்படுத்த இல்லை .

ஆசிரியர் மாணவர்களை பார்த்து 

மாணவர்களே நீங்கள் எழுத போகும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விசயங்களை சொல்கிறேன் கேளுங்கள் .


தேர்வெழுதும் மூன்று மணி நேரத்தில் முதல் ஒரு மணி நேரம் பத்து மார்க் கேள்வி எழுத வேண்டும் .

இரண்டாவது மணியில் ஐந்து மார்க் கேள்வி எழுத வேண்டும் .
அப்புறம் அரை மணி நேரத்தில் இரண்டு மார்க் கேள்வியும் ,
கடைசி அரை மணி நேரத்தில் ஒரு மார்க் கேள்வியும் எழுத வேண்டும் .

மாணவன் :- " டீச்சர் அப்ப பதில் எதுவும் எழுத வேண்டாமா டீச்சர் ".வெறும் கேள்வி மட்டும் எழுதினால் போதுமா ?

டீச்சர் :-!!!!!!!!!!!!!!!
===============================================================


வீட்டிற்கு வந்த விருந்தாளி அங்குள்ள பையனப்பார்த்து கேட்கிறார்

விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :-என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம்  20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் ;- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :- அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின்  பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா ... நீ  நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :- சராசரியாக ஒரு சாமியாரின் பத்து வருட  வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்

பையன் :-நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு .
===========================================================================
குழந்தைகளை தனியாக விளையாட விடாதீர்கள் 


விட்டால் என்ன?


விட்டால் இது போல் தான் நடக்கும்


19 comments:

  1. நாள் பூராவும் உள்ள கவலையை மறக்க இந்த மழலைகளின் காணொளி போதும் ........போனசா இரண்டு பல்பும் !

    ReplyDelete
  2. அப்ப சாமியாராயிட வேண்டியதான் .. ஹா ஹா.
    child video super ... பகிர்வு கலக்கல்

    ReplyDelete
  3. கேள்வி பதில் சிரிப்பு சூப்பர்..


    காணொளி செம!

    ReplyDelete
  4. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

    ReplyDelete
  5. மனம் வீட்டு சிரித்தேன்....

    ReplyDelete
  6. வாங்க பாலா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  7. வாங்க மாய உலகம் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  8. வாங்க ஷீ நிசி வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  9. வாங்க கருன் நண்பரே .தங்கள் சந்தோசத்திற்கு நன்றி

    ReplyDelete
  10. வாங்க ரியாஸ் அகமது நண்பரே வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே .

    ReplyDelete
  11. நல்லா சிரிச்சேன் நண்பரே!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. வாருங்கள் abdul basith நண்பரே ,தங்களை வரவேற்கிறேன் .தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

    தொடர்ந்து வாருங்கள் நண்பரே .

    ReplyDelete
  13. wow ! super jokes. I enjoyed the 2nd one. Videos are super too.

    ReplyDelete
  14. வாங்க வானதி சகோ..

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ.

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  15. சிரித்தேன் மகிழ்ந்தேன்
    நண்பரே.

    ReplyDelete
  16. வாங்க மகேந்திரன் நண்பரே

    சிரித்து மகிழ்ந்ததர்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  17. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே