வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, August 30, 2011

சாப்பிடும் சாப்பாட்டில் காய்கறியா-பாகம் -2 | அன்பு உலகம்

கொத்தவரங்காய் :


குடலுக்கு வலு ஊட்டும் . மலச்சிக்கலை நீக்கும்.

ஆனால் வாத நோய் ,மூட்டு வலி இவற்றுக்கு ஆகாது .


சுண்டைக்காய் :-


இரத்தத்தை சுத்தகரிக்கும்,பித்தம் தணிக்கும்,குடல் 
புழுவை கொல்லும் .நீரிழிவை போக்கும் .

ஆனால் வாதநோயாளிக்கு ஆகாது .

சுரைக்காய் :-


உடல் வெப்பம் குறையும் .மேனி பொலிவு பெரும்.
சிறுநீரை பெருக்கும் .

ஆனால் மூட்டு வலி, வாத நோய்க்கு ஆகாது .

பூசணிக்காய் :-

வெண்பூசணி தங்கச்சத்துடையது .இளைத்த உடலைத்
தேற்றும்.சூடு தணியும் .மலத்தை இளக்கும் .குடலுக்கு
வலுவூட்டும் .மூலச்சூட்டை தணிக்கும் .

பூசணிக்காய் வாத நோயாளிக்கு ஆகாது .

பாகற்காய் :-

வயிற்றுப் பூச்சியை கொல்லும் .நீரிழிவை குறைக்கும்.
உடலைக் குறைக்கும் .விந்து,மலம் கட்டும் .பிற மருந்தை
முறிக்கும் .

அதிகமாக சாப்பிட்டால் வாதம் வரும் .வாத 
நோயாளிக்காவாது .

பச்சை மிளகாய் :-

பசியைத் தூண்டும் .உமிழ் நீர் சுரக்கும் .ஜீரணத்தை அதிகரிக்க
செய்யும் .மூட்டு வலி,மார்பு வலி போக்கும். 

ஆனால் நீர்த்தாரை எரியும் .மூலத்தை உண்டாக்கும் .

வாழைக்காய் :-


வாழைப் பிஞ்சு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது ,புண்ணை 
ஆற்றும் .பித்தம் தணியும் ,வாந்தியை போக்கும் .உடல்
எடையை கூட வைக்கும் .

வாழைத்தண்டு :-

கொழுப்பை கரைக்கும் , உடலை இளைக்க வைக்கும்.
நீரிழிவை போக்கும்,நீர் எரிச்சலை போக்கும் ,சிறு நீரகக் 
கல்லை கரைக்கும்.வயிற்றுப் பூச்சியை கொல்லும்.உடலில்
கலந்த விஷத்தை முறிக்கும்,மூலத்தை குணமாக்கும் .

வெங்காயம் :-


உடல் வெப்பத்தை போக்கும்.ஜீரணத்தை தூண்டும்.
விந்துவை உண்டாக்கும் .
ஆண்மையை தூண்டும் .வயிற்றுப் புண் ஆற்றும்.
சளியை குறைக்கும்.
உடலுக்கு வலுவையும் வனப்பையும் தரும்.உமிழ்
நீர் சுரக்க வைக்கும்.
தேள் கடி விஷத்தை முறிக்கும் .

24 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைந்திருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி உண்டாகும்.....

கோகுல் said...

உண்ணும உணவிலுள்ள நன்மை தீமைகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்!நன்றி!

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பயனுள்ள பதிவு.
கொத்தவரங்காய் நார் சத்து உள்ள காய் அதனால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான உடல் நலக் குறி்ப்புகள்.

அருமை.

தொடர்க.

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பரே,,

சென்னை பித்தன் said...

காய்களின் பயன் பற்றிப் பயனுள்ள பதிவு.

மாய உலகம் said...

தமிழ் மணம் 5

மாய உலகம் said...

சத்தான பதிவுக்கு முத்தான நன்றிகள் வாழ்த்துக்களுடன்

மகேந்திரன் said...

தமிழ்மணம் 6

காய்கறிகள் மகத்துவம்
தொகுப்பு நல்லா இருக்கு நண்பரே..
பயனுள்ள பதிவுக்கு நன்றி.

http://ilavenirkaalam.blogspot.com/2011/08/blog-post_28.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் ...

செங்கோவி said...

அன்பு உலகம் ஆரோக்கிய உலகத்தை உருவாக்குகிறதே..

rajamelaiyur said...

Very useful information

Unknown said...

super information's thank you maapla!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சூப்பர் பதிவு... தொடருங்க.

இன்று ஏன், பின் இணைப்புப் படமேதும் போடவில்லை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

Yaathoramani.blogspot.com said...

கய்கறிகளின் நன்மை தீமைகள்குறித்து
மிகத் தெளிவாக பதிவிட்டுள்ளமைக்கு
நன்றி வாழ்த்துக்கள்
த.ம 11

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

கூடல் பாலா said...

Well explained ...Great!

Anonymous said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பரே...

Chitra said...

informative and useful

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல பதிவு ங்கோ

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
கொத்தவரங்காய்,
சுண்டைக்காய்,
வாழைக்காய்,
சுரைக்காய்,
பூசணிக்காய்,
வாழைத்தண்டும்
வெங்காயம் முதலியவற்றினை உண்பதன் மூலம் எம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் அழகாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க,.

மிக்க நன்றி,

வழமையான ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியாச்சு.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

M.R said...

வாழ்த்தும் வாக்கும் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நட்புகளே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out