தன்னம்பிக்கை தொடர்
பாகம் -2
துவண்டு போகக் கூடாது
நண்பர்களே வணக்கம் ,கடந்த பதிவில்
மனம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும்
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடங்கினேன்
.
அதில் ,
திட்டவட்டமான குறிக்கோளை மனதில் பதிய வைத்து அது நிறைவேறும் வரை அதில் விடாப்பிடியாக இருந்தால் எப்பிடிப்பட்ட வெற்றிகளையும் அடையலாம் என்று பார்த்தோம் .
இந்த பதிவில் நாம் பார்க்க போவது எதிலேயும் துவண்டு போகக்கூடாது
.அதாவது நாம் எந்த செயலில் இறங்கினாலும் தற்காலிக தோல்விகளைக் கண்டு துவண்டு போய் பின்வாங்கி விடுவது தான் தோல்விக்கான முக்கிய காரணம் ஆகும் .
இத ஒரு சின்ன கதையின் மூலம் உங்களுக்கு விளக்குகிறேன் .
(இது ஒரு உண்மை கதையும் கூட )
ஒரு காலத்தில் அமெரிக்காவில் கொலரோடா என்ற இடத்தில்
தங்கம் கிடைக்கிறது என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டிருன்தனர் .
அப்பொழுது டாற்பி என்பவருடைய மாமா அந்த இடத்தில் போய் தங்கம் தோண்டி பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அங்கு போய் மண்ணை தோண்ட ஆரம்பித்தார் .
பல வாரங்கள் தோண்டிய பிறகு தக தகக்கும் தாது பொருளை கண்டார் .
அதனை குழிக்குள்ளிருந்து மேலே கொண்டு வர அவருக்கு இயந்திரம் (பொக்லைன் )தேவைப்பட்டது .
இப்ப உள்ளது போல் அப்பொழுது வாடகைக்கு எல்லாம் அதிகம் கிடைப்பதில்லை .
தான் தோண்டிய குழியை மண் கொண்டு மூடி விட்டு ,திரும்ப ஊருக்கு வந்து உறவினர்களிடமும் , அக்கம் பக்கம் உள்ளவர்களில் சில பேரிடமும்
தான் கண்ட புதையலை சொல்லி உதவி கேட்டார்
.அனைவரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்த இயந்திரத்தை வாங்கி அனுப்பி வைத்தார்கள் .இம்முறை டார்பியும் கூட போனார் .அங்கு சென்று வேலையை தொடங்கினார்கள் .
வெட்டி எடுத்த தாதுவிளிருந்து தங்கத்தை பிரித்து எடுக்க அதை கப்பலில் அனுப்பி வைத்தார்கள் .
கொலோரோடாவில் ஒரு தங்க சுரங்கத்திற்கு முதலாளி ஆகிவிடலாம் என்று எண்ணினார்கள்
இன்னும் சில வண்டி தாது மட்டும் தோண்டி எடுத்தால் அவர்கள் வாங்கி வந்த கடன் அடைந்து ,அதன் பிறகு தோண்டுவது எல்லாம் லாபம் என்ற நிலையில் ...
திடீர் என்று ஒரு குழப்பம் , ஆம் அதுவரை வந்து கொண்டிருந்த தாது பொருள் நின்று போய் அதன் பிறகு தோண்ட தோண்ட வெறும் மணல்,
மணல் தான் .
அவர்களும் இதோ வந்துவிடும் என்று நாள் கணக்கில் தொண்டிக்கொண்டே
இருந்தார்கள் .எங்கே தோன்றி மறையும் வானவில்லைப்போல தங்க தாதும் அவர்கள் கண்ணில் படவே இல்லை .
தங்கத்தை வாரலாம் என்று எண்ணி வந்த எண்ணத்தில் மண் விழுந்தது .
அவர்களுக்கான செலவு தான் கூடிக்கொண்டே போனது .கடனும் அடையவில்லை
செலவும் கூடுகிறதே என்று வேதனைப்பட்ட டார்பின் மாமா தங்க தோண்டும் முயற்ச்சியை கை விட்டு அந்த இயந்திரத்தை ஒரு கைலாங்கடை காரரிடம் விற்று விட்டு ஊர்போய் சேர்ந்தார் .
அந்த இயந்திரத்தை வாங்கிய கயலாங்கடைகாரர் ஒரு சுரங்க இன்ஜினியரை வர வழைத்து , அவர்கள் தோண்டிய சுரங்கத்தை நோட்டம் விட சொன்னார்
.
இன்ஜீநியரும் அதை சர்வே எடுத்து ஒரு உண்மையை சொன்னார்
.
என்ன சொல்லியிருப்பார் நண்பர்களே ?
உங்களால் யூகிக்க முடிகிறதா .?
அவர் என்ன சொல்லியிருப்பார் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை நண்பர்களே ,வடிவேல் சொல்வது போல்
பிளான் பண்ணனும்
நன்றி.
ReplyDeleteஅருமையான தொடர் ...தொடரட்டும்.....
ReplyDeleteஅருமை/// தொடருங்கள்.
ReplyDeleteஅருமை ...சஸ்பென்ஸ் வேறு பேஷ் பேஷ்
ReplyDeleteசெயல்திட்டம் தீட்டி வாழவேண்டும் என
ReplyDeleteஅருமையான தலைப்புடன்
இன்றைய தன்னம்பிக்கை தொடர்
அற்புதம் நண்பரே.
என்ன சொன்னார்?என்ன சொன்னார்?
ReplyDeleteஅடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கனமா?
ReplyDeleteஎன்ன இப்படி ஆயிடுச்சு............
ReplyDeleteவாங்க கீதா வருகைக்கு நன்றி சகோதரி
ReplyDeleteவாங்க பாலா வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க பிரகாஷ் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க ரியாஸ் அஹமது வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க மகேந்திரன் நண்பரே ,
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சென்னை பித்தன் ஐயா
ReplyDeleteஎன்ன சொன்னார்னு நாளை சொல்லிடுவோம்
வாங்க கருன் வருகைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteகாத்திருப்பே ஒரு சுகம் தானே நண்பரே
வாங்க கார்த்தி ,ஒன்னும் ஆகாம பாத்துக்கலாம் வாங்க நண்பரே
ReplyDeleteஒரு வேளை அந்த மணலில் தங்க தாது கலந்திருக்கலாம்..அல்லது இன்னும் சில அடிகளில் தங்க தாது இருப்பதற்கான அறிகுறி இருக்கிறது என்ற விசயத்தை என்ஜினியர் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்....(ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொருக்கலையே என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது)
ReplyDeleteஇறுதியில் வடிவேலை கொர்த்துவிட்டீங்க பாருங்க...அங்க நிக்கிறீங்க!
ReplyDeleteஅருமையான பதிவு...தொடர்கிறேன்...ரமேஷ்..
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteஒரு வேளை, அந்த இஞ்ஜினியர், விடா முயற்சியுடன், இன்னும் ஆழகாமக்த் தோண்டினால் தங்கம் கிடைக்கும் என்று சொல்லியிருப்பாரோ.
நம்பிக்கை, விடா முயற்சிக்கு உதாரணமாக, உங்களின் தொடரின் விளக்கத்திற்குச் சான்றாக- அருமையான கதையோடு பதிவினை நகர்த்துறீங்க.
வாங்க மாய உலகம் ,
ReplyDeleteவாங்க நிருபன்
தங்கள் இருவரின் கருத்தும் கிட்டத்தட்ட சரியே .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பர்களே
வாங்க reverie தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.தொடருங்கள் சகோ வரவேற்கிறேன் நன்றி .
ReplyDeleteவாங்க சிவா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..
ReplyDeleteவாங்க நந்தனா வருகைக்கு நன்றி சகோ...
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள்