வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, October 23, 2011

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்

வாயுப் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது ,அதன் வகைகள்
என்னென்ன என்று பார்த்தோம்.


படிக்காதவங்க அதனை ஒரு முறை படித்து விடுங்கள்
முகவரி இங்கே




இன்று வாயுப் பிரச்சனை தீர ...



சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .


சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் 
கொண்டால் வாயு சேராது.


பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி 
குடித்தால் வாயு சேராது .


இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித 
வாயுக் கோளாறும் தீரும்.


புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு 
வர வாயு அகலும்.


வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான் 
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.


ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு , 
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும் 
வாயுவைப் போக்கும்.


மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது , 
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு 
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத் 
தடுத்திட முடியும்,


வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :


காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும் 
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன் 
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.


திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால் 


ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் 
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.


ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு 
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,


முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால் 
உண்டான உடல் அசதித் தீரும்.


இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை 
அறவே நீங்கும்.






புளியேப்பம் தீர :


இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம் 
ஆகியவை தீரும்.


சூதக வாய்வுக்கு :


கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி 
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.


சூலைவாய்வு தீர :


சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி 
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து 
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு 
குணமாகும்.


கபால வாய்வுக்கு :


வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து.....


250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன் 
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.


                                            குப்பை மேனி இலை


வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :


தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி 
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு 
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல் 
கலகலப்பாகும்.


வாய்வு ,வயிற்று வலி தீர :


பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்


வாய்வு தீர :


வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.


எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால் 
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்


வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு 
தொல்லைத் தீரும்.


நன்றி 

33 comments:

விச்சு said...

நல்லதொரு மருத்துவ பகிர்வு..நன்றி

Admin said...

பயனுள்ள தகவல்கள் நண்பா! இயற்கையிலேயே மருந்துகளை வைத்துக் கொண்டு செயற்கை மருந்துகளை நாடிச் செல்கிறோம்.

கூடல் பாலா said...

பயனுள்ள வீட்டு மருத்துவ தகவல்களைத் தந்துள்ளீர்கள் ...நன்றி!

M.R said...

விச்சு said...
நல்லதொரு மருத்துவ பகிர்வு..நன்றி//

வாங்க நண்பரே ,கருத்துக்கு நன்றி நண்பரே ,தொடர்ந்து வாருங்கள்

M.R said...

Abdul Basith said...
பயனுள்ள தகவல்கள் நண்பா! இயற்கையிலேயே மருந்துகளை வைத்துக் கொண்டு செயற்கை மருந்துகளை நாடிச் செல்கிறோம்.//

ஆமாம் நண்பா ,எதற்கு எடுத்தாலும் செயற்கை மருந்து எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் தான் அதிகம் .

கருத்துக்கு நன்றி நண்பா

M.R said...

koodal bala said...
பயனுள்ள வீட்டு மருத்துவ தகவல்களைத் தந்துள்ளீர்கள் ...நன்றி!//

நன்றி நண்பரே

Unknown said...

தங்கள் பதிவுகள் உடலோம்ப
பயன் தருவதால் தவறாமல்
படிக்கிறேன்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said...

பயனுள்ள தவல்கள்.வீட்டில் இருக்கும் சில பொருட்களே மருந்துகளாக இருப்பது வியப்பளிக்கிறது!

பகிர்வுக்கு நன்றி!

சென்னை பித்தன் said...

த.ம.4
பயனுள்ள பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

பயனுள்ள குறிப்புகள் நன்றி டாக்டர்...!!!!

RAMA RAVI (RAMVI) said...

வாயுப்பிரச்சனை தீர நல்ல கைவைத்தியங்கள்.அருமை.நன்றி பகிர்வுக்கு.

Karthikeyan Rajendran said...

இத்தனை தகவல்களை எங்கிருந்து திரட்டிநீங்க, நீங்கள்சொன்ன விதம் அருமை மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

Unknown said...

அருமையான பயனுள்ள தகவல் இதை சென்ற வாரமே எதிர்பார்த்தேன் நண்பரே

ஹேமா said...

சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகள்.அருமையான உபயோகமான பதிவு !

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அழகான அருமையான தகவல்கள்.

குப்பைமேனிக்கு இன்னொரு பெயர் இருக்காமே... “பூனை விரட்டி”.

அதனால்தான் நான் இப்பக்கம் வரத் தாமதமாகிவிட்டது:)).

Yaathoramani.blogspot.com said...

அருமையான பயனுள்ள எளிதான
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
மருத்துவக் குறிப்புகள்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
த.ம 5

மகேந்திரன் said...

பூண்டு நாம் இயல்பாக
வாயுத் தொல்லைக்காக
பயன்படுத்தும் ஒரு பொருள்.
மற்றவைகள் பற்றியும்
அறிந்துகொண்டேன் நண்பரே.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

கறுக் புறூக் சவுண்டை இல்லாமற் செய்ய அசத்தலான குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க.

மிக்க நன்றி.

Unknown said...

நல்ல மருத்துவ பதிவு நண்பரே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு பதிவு....
வாழ்த்துக்கள்...

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
தங்கள் பதிவுகள் உடலோம்ப
பயன் தருவதால் தவறாமல்
படிக்கிறேன்
நன்றி!//

அன்பு கருத்துக்கு நன்றி ஐயா

M.R said...

கோகுல் said...
பயனுள்ள தவல்கள்.வீட்டில் இருக்கும் சில பொருட்களே மருந்துகளாக இருப்பது வியப்பளிக்கிறது!

பகிர்வுக்கு நன்றி!//

ஆமாம் நண்பா ,நன்றி

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.4
பயனுள்ள பதிவு.//

நன்றி ஐயா

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
பயனுள்ள குறிப்புகள் நன்றி டாக்டர்...!!!!

நன்றி நண்பரே

M.R said...

RAMVI said...
வாயுப்பிரச்சனை தீர நல்ல கைவைத்தியங்கள்.அருமை.நன்றி பகிர்வுக்கு.

நன்றி சகோதரி

தனிமரம் said...

வாயுத்தொல்லையை நீக்க நல்ல ஒரு  மருத்துவப்பதிவு  .

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_24.html

Unknown said...

தீராத வாயுத்தொல்லை உள்ளது .இரத்த அழுத்த மாத்திரை உண்டுவருகிறேன். அடிகடி வாயுவால் நெஞ்சில் வலி ஏற்படுகிறது.டாக்டரிடம் சென்றால் வாயுத்தொலை என்ரு மாத்திரை எழுதுகிறார்.வாயுவை நிற்ந்தரமாக விரட்ட வழி சொல்லுங்கள்.

Unknown said...

மகிழ்ச்சி

silambarasan said...

மூன்று வேளை தயிர் சாதம். கஞ்சி. இஞ்சி டீ

Unknown said...

Thanks brother


Unknown said...

Super nanba mikka nandri

Unknown said...

Super nandri

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out