வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, October 25, 2011

நான் சிரித்தால் தீபாவளி

அப்ப நீங்க சிரித்தா ? அப்பிடின்னு கேள்வியெல்லாம் 
கேட்க கூடாது .









பட்டாசு பார்த்து வெடிங்க


அதிகமா வெடிச்சு காற்றில் நச்சுத்தன்மையை அதிகம்
கலக்காதீர்கள்


பிறந்த குழந்தையோ ,மிகவும் வயதானவர்களோ ,இருதயம்
பலஹீனமானவர்களோ பக்கத்து வீடுகளில் இருந்தால்
அதிக டெசிபலில் (சத்தத்தில்) வெடிக்கும் வெடிகளை உபயோகப்
படுத்தாதீர்கள்.


வெடியை கைகளால் தொட்டபின் கைகளை நன்கு கழுவ மறக்காதீர்கள்


எச்சரிக்கையுடன் வெடியுங்கள்


மற்றபடி.....அனைவருக்கும் .....


தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்


மகிழ்வோடு கொண்டாடுங்கள் ,இந்த நகைச்சுவையோடு





எத்தனை தடவை கொழுத்தினாலும் இது வெடிக்கவே 
மாட்டேங்குதே அப்பா !

மூதேவி , நீ கொழுத்தறது மெழுகுவர்த்திடா



என் மனைவி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறவ !

நிஜம்மாவா !

ஆமாம் , இப்ப நீங்க குடிக்கிற காபி கூட , சுண்ணாம்பு 
தண்ணியில போட்டது தான் .



 நேத்து என் மனைவியின் கன்னத்தில பளார்னு ஒரு அறை விட்டேன்

ஐய்யையோ , அதுக்கு உங்க மனைவியோட ரீயாக் ஷன் என்னாச்சு ?

அதுக்குள்ள கனவு கலைஞ்சிடுச்சி



ராமு :- எனக்கு முப்பது வயசு ஆகிறது , நான் ஒரு பெண்ணை 
கட்டிக்கிறது தப்பா?

சோமு :- இல்லையே , எவன் சொன்னான்

ராமு :- பின்ன ஏன் ,நேத்து பஸ்ல எல்லாறும் என்னை அடிச்சாங்க !!


சோமு :- @#$%^#$%



கடன் கேட்க வரும்பொழுது , எதுக்கு உங்க மனைவியையும் 
கூட்டிட்டு வந்தீங்க ?

கஷ்டத்தோட வந்தா நீங்க உதவி செய்வீங்கன்னு எல்லோரும் 
சொன்னாங்க

                           இத படிச்சுட்டு சிரிச்சீங்க தானே
                     
குதிரை ஓட்டத்திப் பார்த்து , இதெல்லாம் ஒரு ஓட்டமான்னு 
சொல்றாரே , யார் அவர் ?

பைனான்ஸ் கம்பெனி ஓனர் 





பொண்டாட்டிக்கு ஆசையாய் ஒரு புடவை வாங்கி தர 
முடியலை !

ஏண்டா , காசு இல்லையா ?

பொண்டாட்டி இல்லைடா !





பொண்ணுக்கிட்ட அஞ்சு நிமிசம் தனியா பேசனும்னு சொல்லிட்டு ,
ஒரு மணி நேரம் கழிச்சு வர்ரீங்களே மாப்பிள்ளை !

சத்தியமா நான் அஞ்சு நிமிசம் தான் பேசினேன் மாமா , மீதி 
ஐம்பத்தைந்து நிமிசம் உங்க பொண்ணு தான் பேசினா 







“ என்னடா இது , வெற்றியின் முதல் படியில் ஏறிவிட்டதாக சொல்றே!
 ஆனால் எல்லா பாடத்திலேயும் பெயில் ஆகியிருக்கே !! ‘’

நீங்க தானேப்பா சொன்னீங்க , தோல்விதான் வெற்றியின் முதல் படிக்கட்டுன்னு !







 

33 comments:

Mahan.Thamesh said...

Good post .happy deepavali sago

M.R said...

Mahan.Thamesh said...
Good post .happy deepavali sago

thankyou ,happy diwali brother

Yaathoramani.blogspot.com said...

அருமையான நகைச்சுவைப் பதிவைக் கொடுத்து
அனைவரையும் அசத்தியமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
த.ம 2

r.v.saravanan said...

தீபாவளி நேரத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் தந்தமைக்கு நன்றி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

செங்கோவி said...

நல்ல நகைச்சுவைத் துணுக்குகள்..நன்றி.

மீண்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Kousalya Raj said...

மிக ரசித்தேன். தீபாவளி வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Unknown said...

அருமை நகைச்சுவைகள்

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

நிரூபன் said...

பாஸ்..
பட்டாசு கொளுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு விடயங்களோடு,
மனசிற்கு விருந்தளிக்கும் நகைச்சுவைகளையும் தந்திருக்கிறீங்க.

நீ கொழுத்துறது மெழுது திரிடா..

ஹேஏஏஏஏஏஏஏஏஏஏ

rajamelaiyur said...

அருமையான ஜோக் ..

rajamelaiyur said...

இணய தீபாவளி நல்வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்றுஎன் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

முனைவர் இரா.குணசீலன் said...

விழிப்புணர்வளிக்கும் தகவல்களும்
நகைச்சுவைகளும் அருமை நண்பரே..

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

Unknown said...

வாய் விட்டுச் சிரித்தேன்
நோய் விட்டுப் போயிற்று
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...


அனைத்தும் அசத்தல்..

தீபாவளி வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

நகைச்சுவைகள் சூப்பரா இருக்கு ரசிச்சு சிரிச்சேன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Learn said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் ஜோக்ஸ்....... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

middleclassmadhavi said...

சூப்பர் ஜோக்ஸ்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

சென்னை பித்தன் said...

நல்ல நகைச்சுவை.
தீபாவளி வாழ்த்துகள்.

Unknown said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கோகுல் said...

மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாட நல்ல நகைச்சுவைகள்!

தீபாவளி வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா..ஹா..ஹா.... கலக்கல்... அனைத்துமே கலக்கல்... கொப்பி பேஸ்ட் பண்ணமுடியாமையால, எடுத்துக்காட்டிச் சொல்ல முடியேல்லை...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out