Saturday, October 29, 2011

உபயோக டிப்ஸ் மற்றும் நகைச்சுவை

மழைக்காலம் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும்.


கொசு கடித்தால் நோய் வரும் . வீட்டில் கொசு விரட்ட 
காயில் போன்றவைகளை கொழுத்திவைப்போம்.


மாற்றாக இதனை செய்து பாருங்களேன்.







கொசுத்தொல்லை அகல :


ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு மூன்று சூடத்தை 
போட்டால் அதிலிருந்து வரும் ஆவி வீட்டிலுள்ள 
கொசுக்களை விரட்டி விடும்.


வீட்டில் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் 
மாம்பூக்களைப் போட்டால் ,அதிலிருந்து வரும் 
புகை கொசுக்களை விரட்டி விடும்.


வேப்பிலை , நொச்சியிலை ஆகியவற்றை உலர்த்தி 
நெருப்பில் போட்டு புகைக்க கொசுத் தொல்லை 
ஒழியும்.


நாய்த்துளசிப்பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன்
புகைக்க வீட்டிலுள்ள கொசுத்தொல்லை தீரும்.


மாவிலையின் மணம் துர்நாற்றத்தையும் தொற்றும் 
நோய்கிருமிகளையும் நீக்கும்.






மூட்டைப் பூச்சிகள் ஒழிக்க :




நாய்த்துளசி இலையைக் கசக்கி வீட்டில் ஆங்காங்கு போட்டு
வைத்தால் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை மாறும்.


எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி அத்துடன் கந்தக 
தூளை கலந்து நெருப்பிலிட்டுப் புகையூட்ட , மூட்டைப் 
பூச்சிகள் அழியும்


டிப்ஸ்:


புகைபிடித்தலால் உண்டாகும் நஞ்சுக்கு வெள்ளரிப் பிஞ்சை 
தொடர்ந்து உண்டு வர வேண்டும்.


உருளை கிழங்கை உப்பு போடாமல் வேகவைத்துக் கொடுக்க 
குடிபோதை தெளியும்.









சிரிக்க :


எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே , அப்புறம்
என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?

ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி ,இல்லைன்னு
சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்




என் டேபிளுக்கு வந்தவன் மகா கஞ்சனாக இருப்பான் 
போலிருக்கு எப்பிடி சொல்றே?

தட்டில் டிப்ஸிற்கு பணத்திற்கு பதிலாக பாதி இட்லிய வச்சுட்டு
டிப்ஸா வச்சுக்கன்னு சொல்லிட்டு போறான்



சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா ,பில் போடலாமா

வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க






இந்த ஹோட்டல் காஸ்ட்லி ஹோட்டல்னு எப்பிடி சொல்றே?

காசில்லாமல் ஒரு தோசை சாப்பிட்டால் பத்தி கிலோ அரிசி
மாவாட்டி தரணுமாம்


30 comments:

  1. நல்ல பகிர்வு நன்றி...

    ReplyDelete
  2. கொசுவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நீங்க கொடுத்த குறிப்புகள் நல்ல உதவியாக இருக்கும் நண்பரே. நன்றி

    ReplyDelete
  3. வார கடைசியில் என்னங்க இப்படி கலக்குறீங்க...

    ReplyDelete
  4. கொசு, மூட்டைப்பூச்சி விரட்ட நல்லதொரு டிப்ஸ்.. கண்டிப்பாக கிராமப்பகுதியில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்...

    ReplyDelete
  5. கொசு விரட்டல் டிப்ஸ் உபயோகமுள்ளது !

    ReplyDelete
  6. இயற்கைக் கொசு விரட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.மிக அவசியமான தகவல்.
    த.ம.3

    ரொம்பப் பிஸியோ?நேற்று என் கடைப்பக்கம் காணோமே!

    ReplyDelete
  7. நாய்த்துளசி என்னும் பெயரை இன்று தான் கேள்விபடுகிறேன்!
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கொசுவை விரட்ட இயற்கை முறையில் வழிகள் நிச்சயம் உடலுக்கு தீங்கு இழைக்கும் ரசாயன விரட்டிகளுக்கு நிச்சயம் நல்ல மாற்று.

    நகைச்சுவைகள் கலக்கல்!

    ReplyDelete
  9. அருமையான தகவல் மறம் நகைசுவை

    ReplyDelete
  10. உபயோகமான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. நிச்சயம் உபயோகமான டிப்ஸ் ..

    ReplyDelete
  12. டிப்ஸ், ஜோக்ஸ் எல்லாமே அருமையா இருக்கு.

    ReplyDelete
  13. கொசு பற்றிய தகவலுக்கு நன்றிங்க அன்பரே ..

    ReplyDelete
  14. டிப்ஸ், ஜோக்ஸ் எல்லாமே அருமையா இருக்கு.

    ReplyDelete
  15. உபயோகமான டிப்ஸ் ...நகைச்சுவை கலக்கல்...

    ReplyDelete
  16. கொசு டிப்ஸ் நன்றி

    ReplyDelete
  17. மாய உலகம் said...
    நல்ல பகிர்வு நன்றி...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    -------------------------------


    காந்தி பனங்கூர் said...
    கொசுவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நீங்க கொடுத்த குறிப்புகள் நல்ல உதவியாக இருக்கும் நண்பரே. நன்றி//

    அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

    ----------------------------

    கவிதை வீதி... // சௌந்தர் // said...
    வார கடைசியில் என்னங்க இப்படி கலக்குறீங்க...
    கொசு, மூட்டைப்பூச்சி விரட்ட நல்லதொரு டிப்ஸ்.. கண்டிப்பாக கிராமப்பகுதியில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்...//

    தங்களின் அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. koodal bala said...
    கொசு விரட்டல் டிப்ஸ் உபயோகமுள்ளது !

    நன்றி நண்பரே

    -----------------------------


    சென்னை பித்தன் said...
    இயற்கைக் கொசு விரட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.மிக அவசியமான தகவல்.
    த.ம.3

    ரொம்பப் பிஸியோ?நேற்று என் கடைப்பக்கம் காணோமே!

    இல்லை ஐயா நெட் வேலை செய்யவில்லை அதனால் தான்

    ---------------------------


    middleclassmadhavi said...
    நாய்த்துளசி என்னும் பெயரை இன்று தான் கேள்விபடுகிறேன்!
    பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  19. கோகுல் said...
    கொசுவை விரட்ட இயற்கை முறையில் வழிகள் நிச்சயம் உடலுக்கு தீங்கு இழைக்கும் ரசாயன விரட்டிகளுக்கு நிச்சயம் நல்ல மாற்று.

    நகைச்சுவைகள் கலக்கல்!

    அழகான கருத்துக்கு நன்றி நண்பரே

    -------------------------


    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான தகவல் மறம் நகைசுவை

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. ஸாதிகா said...
    உபயோகமான பகிர்வுக்கு நன்றி!

    நன்றி சகோதரி

    --------------------------


    தமிழ்வாசி - Prakash said...
    கொசு ஓடி போச்சு....

    கருத்துக்கு நன்றி நண்பா

    -----------------------------


    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நிச்சயம் உபயோகமான டிப்ஸ் ..//

    நன்றி நண்பா

    ReplyDelete
  21. RAMVI said...
    டிப்ஸ், ஜோக்ஸ் எல்லாமே அருமையா இருக்கு.

    நன்றி சகோதரி

    ------------------------------


    அரசன் said...
    கொசு பற்றிய தகவலுக்கு நன்றிங்க அன்பரே ..

    நன்றி நண்பரே

    -----------------------------


    Lakshmi said...
    டிப்ஸ், ஜோக்ஸ் எல்லாமே அருமையா இருக்கு.

    நன்றி அம்மா

    ----------------------------


    ரெவெரி said...
    உபயோகமான டிப்ஸ் ...நகைச்சுவை கலக்கல்...

    நன்றி நண்பா

    -----------------------------------


    r.v.saravanan said...
    கொசு டிப்ஸ் நன்றி

    நன்றி நண்பரே

    ReplyDelete
  22. உபயோகமான பயனுள்ள
    தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  23. மகேந்திரன் said...
    உபயோகமான பயனுள்ள
    தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.//

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  24. நல்ல தகவல்.. நல்ல சிரிப்பு. (அந்த அக்காட சிரிப்பும் நல்லாயிருக்கு:)).

    ReplyDelete
  25. athira said...
    நல்ல தகவல்.. நல்ல சிரிப்பு. (அந்த அக்காட சிரிப்பும் நல்லாயிருக்கு:)).//

    நன்றி தோழி

    ReplyDelete
  26. மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டிய
    பயனுள்ள டிப்ஸ்
    ரசித்து மனம் மகிழ்ந்து சிரிக்க வைத்த
    நகைச்சுவைத் துணுக்குகள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. சிறிப்பையும் சிந்தனையையும் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்....
    எல்லாம் அருமை.

    ReplyDelete
  28. எமது சுற்றுப் புறச் சூழலைச் சுகாதாரமாக வைத்திருப்பதற்கேற்ற அருமையான டிப்ஸ் .

    நகைச்சுவைகளும் கலக்கல்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே