வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, November 8, 2011

தலைமுடியின் ஆரோக்கியம் அறிந்து கொள்ள வாங்க

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்று கேள்விப் 
பட்டிருப்பீர்கள் .


அந்த தலைக்கு மட்டுமல்ல நம் தோற்றத்திற்கே அழகு 
தருவது சிகை அலங்காரம்.





அதற்கு முடி வேணும்ல , அது கொட்டி போனா என்ன செய்றது 
அதற்கான முடிவைப் பற்றி பார்ப்போம்


இளநரை :


முடிக்குத் தேவையான சத்துக் குறைபாடே இளநரைக்கு 
காரணம் .
ஆப்பிள் , ஆரஞ்சு , வெள்ளரிக்காய் , முள்ளங்கி ,கோதுமை 
ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரை 
கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.




கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது


தலை முடி கருமையாக கரிசலாங் கண்ணியைப் பறித்து 
அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து ,எண்ணெயில் 
ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாக 
வளரும்.


தேங்காய் எண்ணெயில் சோற்றுக் கற்றாலையின் சோற்றைக்
காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி மிக கருமையாக வளரும்


கரிசாலையின் சாறு ஒரு தேக்கரண்டி நெய்யில் குழைத்து 
தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டு வர இளநரை குணமாகும்






தலைமுடி வளர


தேங்காய் பாலெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர ,முடி
கருமையாக நீண்டு வளரும்


பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் விட்டு மைபோல் அரைத்து
தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வர சொட்டை 
நீங்கி முடி வளரத் தொடங்கும்.


வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலை முழுவதும் 
தடவி,சிறிது நேரம் ஊறிய பின் குளித்துவர முடி நன்றாக வளரும்
முடி கொட்டுவதும் நிற்கும்


கறிவேப்பிலையை விழுதாக அரைத்து எலுமிச்சங்காயளவு
எடுத்து 250 மில்லி தேங்காயெண்ணெயில் காய்ச்சி வடித்து 
தினசரி தலைமுடிக்குத் தடவி வர முடி செழித்து வளரும்


வெந்தயத்தை 200 கிராம் எடுத்து இரண்டு நாள் ஊற வைத்தால்
முளை வந்திருக்கும் . பிறக் காய வைத்து பொடியாக்கி 1500
லிட்டர் ( ஒன்றரை லிட்டர்) தேங்காய் எண்ணெயில் போட்டு
வைக்கவும்.
இதை வடிகட்டாமல் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு 
தடவி வர முடி கறுப்பாக வளரும்.


கண்டங்கத்திரி பழத்தை அரைத்து சாறு எடுத்து நரை முடி 
மீது பூசி வர நரைமுடி கறுப்பாகி விடும்.






தலைமுடி உதிர்ந்தால் மீண்டும் வளர எலுமிச்சம் பழ 
விதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டு 
அரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில் 
முடி துளிர்த்து வளரும்


நிலாவரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவில் 
அரைத்துத் தலையில் தடவி வர செம்பட்டை முடி கறுப்பாகும்








தலைமுடி நரைப்பதைத் தடுக்க :


வெள்ளை நிறத்தில் பூக்கும் கரிசலாங்கண்ணிச் சாறு 500
மில்லி ,பசுவின் பால் 500 மில்லி ,நல்லெண்ணெய் 500
மில்லி , மூன்றையும் மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி 
தினசரி தலைக்குத் தடவி தலை சீவி வந்தால் நரை முடி 
கறுக்கும் .முடியும் நரைக்காது.




புருவத்தில் முடி உதிராமல் இருக்க :


தினசரி கொஞ்சம் வெண்ணையைச் சாப்பிட வேண்டும் .
பசும்பாலும் அருந்த வேண்டும் . புருவ முடி உதிராதிருக்கும்.







டிஸ்கி:


முடிவளர்ச்சியை விரும்புகிறவர்கள் சோப்பு ,ஷாம்பு ஆகியவற்றை
உபயோகிக்கக் கூடாது. சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.


உப்பு நீரில் தலை குளித்தலைத் தவிர்க்க வேண்டும் .உப்பு 
நீரில் நெல்லிக்காய்களை மூன்று மணி நேரம் ஊறப்போட்டு 
அந்நீரால் தலைக்குளித்தால் பாதிப்பு இராது 

நன்றி




படங்கள் உதவி : இணையம்
டிப்ஸ் உபயம் : நோய்களை வெல்லுங்கள் புத்தகம்

35 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நலமாக இருக்கிறீங்களா?

பதிவினைப் படித்தேன்.

நீண்ட கூந்தல் உள்ளோருக்குத் தான் டிப்ஸ் கொடுத்திருக்கிறீங்க.

வருங்காலத்தில திருமணம் ஆகியதும் அவாவுக்கு தேவைப்படும் என்பதால் புக் மார்க் பண்ணி வைச்சுக்கிறேன்.

பகிர்விற்கு நன்றி!

RAMA RAVI (RAMVI) said...

உபயோகமுள்ள தகவல்,ரமேஷ்,நன்றி பகிர்வுக்கு.

M.R said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

நலமாக இருக்கிறீங்களா?

பதிவினைப் படித்தேன்.

நீண்ட கூந்தல் உள்ளோருக்குத் தான் டிப்ஸ் கொடுத்திருக்கிறீங்க.

வருங்காலத்தில திருமணம் ஆகியதும் அவாவுக்கு தேவைப்படும் என்பதால் புக் மார்க் பண்ணி வைச்சுக்கிறேன்.

பகிர்விற்கு நன்றி!//


நலமே நண்பா ,தாங்கள் நலமா
அழகிய கருத்துரைக்கு நன்றி நண்பா

M.R said...

RAMVI said...
உபயோகமுள்ள தகவல்,ரமேஷ்,நன்றி பகிர்வுக்கு.//

வாங்க சகோதரி கருத்திற்கு நன்றி

rajamelaiyur said...

//கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது


//

அப்படியா ?

rajamelaiyur said...

இதுபோல ஒரு பதிவைத்தான் தேடினேன்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது


//

அப்படியா ?

இதுபோல ஒரு பதிவைத்தான் தேடினேன்//


நன்றி நண்பரே

கோகுல் said...

எனக்கு இளநரை உள்ளது நண்பரே!முயற்சி செய்து பார்க்கிறேன்,நன்றி!

middleclassmadhavi said...

எவ்வளவு தகவல்கள்! எதை ஃபாலோ செய்வது?!! பகிர்வுக்கு நன்றி

ADMIN said...

பயனுள்ள குறிப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

எனது வலையிலும் இதுபோன்ற பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. படித்துப் பயன்பெற அழைக்கிறேன்.

தலைப்பு: இளநரையை போக்க எளிய வழி!

சென்னை பித்தன் said...

இருக்கிற வரை எல்லாம் செய்ய வேண்டியதுதான்!
பகிர்வுக்கு நன்றி.
த.ம.4

K.s.s.Rajh said...

அற்புதமான தகவல்கள் பாஸ்

செங்கோவி said...

சீயக்காய் அருமையை நம்ம மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆச்சே..

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க அருமையான டிப்ஸ், நன்றி மருத்துவரே....!!!

M.R said...

கோகுல் said...
எனக்கு இளநரை உள்ளது நண்பரே!முயற்சி செய்து பார்க்கிறேன்,நன்றி!//

நல்லது நண்பரே

M.R said...

middleclassmadhavi said...
எவ்வளவு தகவல்கள்! எதை ஃபாலோ செய்வது?!! பகிர்வுக்கு நன்றி//

மிக்க மகிழ்ச்சி சகோதரி

M.R said...

தங்கம்பழனி said...
பயனுள்ள குறிப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி!//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
இருக்கிற வரை எல்லாம் செய்ய வேண்டியதுதான்!
பகிர்வுக்கு நன்றி.
த.ம.4//

மிக்க நன்றி ஐயா

M.R said...

K.s.s.Rajh said...
அற்புதமான தகவல்கள் பாஸ்//

நன்றி நண்பா

M.R said...

செங்கோவி said...
சீயக்காய் அருமையை நம்ம மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆச்சே..//


ஆமாம் நண்பரே மறந்து தான் போனார்கள் !!

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
மிக்க அருமையான டிப்ஸ், நன்றி மருத்துவரே..//

நன்றி நண்பரே கருத்திற்கு

Anonymous said...

கொஞ்ச நாளுக்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா...
இப்ப ஆல்மோஸ்ட் எல்லாம் காலி...

M.R said...

ரெவெரி said...
கொஞ்ச நாளுக்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா...
இப்ப ஆல்மோஸ்ட் எல்லாம் காலி...//

அடடே விடுங்க நண்பரே ,எண்ணை ,சாஃம்பு செலவு மிச்சம் ,ஹா ஹா

shanmugavel said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

M.R said...

shanmugavel said...
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said...

இள நரையை போக்க டிப்ஸ் எல்லாம் அருமை...


நம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

Unknown said...

கூந்தலை பாதுகாக்க எளிய
வழிகளை சொன்னீர்
நன்றி

புலவர் சா இராமாநுசம்

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
இள நரையை போக்க டிப்ஸ் எல்லாம் அருமை...


தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
கூந்தலை பாதுகாக்க எளிய
வழிகளை சொன்னீர்
நன்றி

கருத்திற்கு நன்றி ஐயா

vetha (kovaikkavi) said...

அத்தனையும் தகவல் களஞ்சியமாக இருந்தது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

நண்பர் ரேவேரி சொன்னதுபோல
கொஞ்ச நாள் முன்னாடி சொல்லியிருக்ககூடாதா?
ஹா ஹா ஹா
பிடிக்க கூட முடியில்லை...

அருமையான தகவல்களுடன் தங்கள் பதிவுகளை
படிக்க உட்காரும்போது ஒரு குறிப்பேடு எடுத்தே
உட்காருகிறேன்...
நன்றி நண்பரே..

stalin wesley said...

படங்கள் உதவி : இணையம்

எல்லாருமே இணையத்துல இருத்துதானா எடுப்பாங்க .......

Unknown said...

எலுமிச்சம் பழ
விதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டு
அரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில்
முடி துளிர்த்து வளரும்.. Kandipaga valarumaa!! Elumichai vidhaogala or elumicham palathukula kulla irukura kottaugala araikanuma!!

Unknown said...

ரெண்டும் ஒன்னுதான் bro

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out