Wednesday, November 9, 2011

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய







மழைக்காலம் ஆரம்பம் ஆகிவிட்டது ,ஜலதோஷம் ,காய்ச்சல்
ஆகியவை வர வாய்ப்புண்டு .



கூடுமானவரை மழையில் நனைய வேண்டாம் , சேர வில்லை
எனில் குளிர்ந்த நீர் தவிர்க்கலாம்,.


காய்ச்சலுக்கு முதற்காரணம் நமது உடலில் சக்தி இழப்பே 
ஆகும்


காய்ச்சல் வர பல காரணங்கள்


மழையில் தொடர்ந்து நனைதல் போன்ற பல காரணங்கள்


மலேரியா ,டைபாய்டு ,நிமோனியா போன்ற காய்ச்சல்கள்
நோய்கிருமிகளால் உண்டாகிறது.


மேற்சொன்ன காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி
டெஸ்ட் செய்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்


இன்புளூயின்ஸா போன்ற காய்ச்சல் , மலச்சிக்கல்
மனக்கவலை ,ஏக்கம் ,காற்றோட்டம் இல்லாத
இடங்களில் வசித்தல் ,தவராண உணவுகள் ,தவரான
உறவுகள், போன்ற காரணங்களால் உடல் சக்தி குறைவு
ஏற்பட்டு இந்நோய் வரும்.


சரியான சத்துள்ள உணவுகள் ,உடற்பயிற்சிகள், உறுதியான
ஆரோக்கிய சிந்தனைகள் இவற்றால் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணலாம்








காய்ச்சல் காரர்கள் குணப்பட சில எளிய மருந்துகள்


பார்லி அரிசியை பாலில் வேகவைத்துக் கொடுக்கலாம்


கொத்து மல்லிக் கீரையை கஷாயமாக்கி குடித்தால் பித்த
காய்ச்சல் குணமாகும்.


புதினா இலையை கஷாயமாக்கி குடித்தால் அதிகமான 
காய்ச்சல் குறைந்து விடும்.


மிளகு , இஞ்சி இரண்டையும் இடித்து நீரில் காய்ச்சி ,அந்தக்
கஷாயத்துடன் பால் கலந்து குடித்தால் தீராத காய்ச்சலும் 
தீரும்.


மிளகு , வல்லாரைக் கீரை , துளசி இலை இவற்றை 
கஷாயமாக்கி சாப்பிட்டால் காய்ச்சல் தீரும்.


ஆடாதொடை இலைச் சாறில் தேன் கலந்து குடித்தால் 
காய்ச்சல் குணமாகும்


தேனில் இஞ்சியை வதக்கி நீரில் சுண்டக் காய்ச்சிக் 
குடித்தால் உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் தீரும்.


துளசி இலையுடன் சிறிது உப்பு போட்டு காய்ச்சி 
இளஞ்சூட்டோடு குடித்தால் குளிர் காய்ச்சல் தீரும்


நீரில் துளசி இலையைப் போட்டு ஊற வைத்து அந்நீரைக் 
குடித்து வர மலேரியா காய்ச்சல் போகும்.


கொத்துமல்லி கீரைச் சாற்றை குடித்து வர மூளைக் காய்ச்சல் 
தீரும்



மூன்று தேக்கரண்டி துளசி சாறு , இரண்டு தேக்கரண்டி இஞ்சிச்
சாறு , ஒரு தேக்கரண்டி தேன் இவற்றைக் கலந்து தினம் மூன்று 
வேளை மூன்று நாட்கள் குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்

காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தியை நிறுத்த இரண்டு தம்ளர் 
தண்ணீரில் மூன்று தேக்கரண்டி துளசிச் சாறும் பத்து கிராம் 
கற்கண்டும் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு மூன்று மணி 
நேரத்திற்கு ஒருமுறை அரைத்தம்ளர் வீதம் கொடுத்து வந்தால்
காய்ச்சலின் போதுள்ள வாந்தி நின்று விடும்

ஏழு மிளகை பட்டுபோல் தூள் செய்து கால் தம்ளர் துளசிச் 
சாற்றில் கலந்து காலை ,மாலை குடித்து வந்தால் எந்த 
வகைக் காய்ச்சலும் மூன்றே நாளில் குணமாகும்.

இதற்கு பத்தியம் : 


புளி , மிளகாய் , நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது


காய்ச்சலின் போது ஜன்னி கண்டால் :


வெண்தாமரைப்பூ இதழ்களை கஷாயமிட்டு மூன்று வேளை 
உள்ளுக்குக் கொடுத்தால் ஜன்னி கட்டுப்பட்டுவிடும்.


பெரியவர்களுக்கு இரண்டு கரண்டியும் ,சிறியவர்களுக்கு 
ஒரு கரண்டியும் கொடுக்கலாம்



குறிப்பு : 


எந்த ஒரு நோய்க்கும் அதற்குரிய மருந்தைக் குறிப்பிட்ட
நாள்வரை சாப்பிட்டு விட வேண்டும்.
பாதியில் நிறுத்தினால் அந்த நோய்க்குறிய பாக்டீரியாக்கள்
மீண்டும் வளர்ந்து பலம் பெற்று விடும்.
பிறகு நோய் அதிகரித்து விடும்

47 comments:

  1. காய்ச்சலை விரட்ட பயனுள்ள குறிப்புகள். நன்றி நண்பா,,,

    ReplyDelete
  2. தமிழ்வாசி - Prakash said...
    காய்ச்சலை விரட்ட பயனுள்ள குறிப்புகள். நன்றி நண்பா,,,//

    தங்கள் அன்பிற்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. நல்ல நல்ல மருத்துவ ஆலோசனைகள்

    ReplyDelete
  4. அடடா, போன வாரம் சொல்லியிருக்கக்கூடாது..ஓகே, நோட் பண்ணிக்கிறேன்.

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள குறிப்புகள் நண்பா..

    ReplyDelete
  6. நன்றாகச் சொல்லிட்டீங்க ரமேஸ்.

    இங்கு பனிக்காலம் ஆரம்பமாகப்போகிறதெனில் புளூ இஞ் ஜெக்‌ஷன் போடுவார்கள்... அது எடுத்தால் கொஞ்சம் தவறலாம்.

    விட்டமின் சீ அதிகமாக உள்ள உணவுகளை எடுப்பதும் நல்லது.

    உங்களின் கடைசிக்குறிப்பு... top!!!!

    ReplyDelete
  7. நல்ல தகவல் .. எங்கள் பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு காய்ச்சல் தான்

    ReplyDelete
  8. என் பையனுக்குக் காய்ச்சல்! உங்கள் பதிவைப் படிச்சுட்டு, இதோ, கஷாயம் போடப் போகிறேன்! நன்றி

    ReplyDelete
  9. காலை வணக்கம்!பயனுள்ள மருத்துவ(காச்சல்)குறிப்புகள்!பாவம்,செங்கோவி,போன வாரமே மழை ஆரம்பித்து விட்டதே?வருமுன் (செங்கோவியை)காத்திருக்கலாமே?ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  10. Yoga.S.FR said...
    காலை வணக்கம்!பயனுள்ள மருத்துவ(காச்சல்)குறிப்புகள்!பாவம்,செங்கோவி,போன வாரமே மழை ஆரம்பித்து விட்டதே?வருமுன் (செங்கோவியை)காத்திருக்கலாமே?ஹி!ஹி!ஹி!!!!//


    போன மாதமே இதைப் பதிவிடலாம் என்றிருந்தேன் ,தாமதமாகி விட்டது .
    அவரது கருத்தை படித்த பிறகு தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது தெரிய வருகிறது ஐயா .

    ReplyDelete
  11. middleclassmadhavi said...
    என் பையனுக்குக் காய்ச்சல்! உங்கள் பதிவைப் படிச்சுட்டு, இதோ, கஷாயம் போடப் போகிறேன்! நன்றி//

    இரண்டு அல்லது மூன்று நாட்களில் காய்ச்சல் குறையாமல் இருந்தாலும் ,மிகுந்தாலும் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள் சகோதரி ,தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறச்செய்யுங்கள்

    ReplyDelete
  12. koodal bala said...
    நல்ல நல்ல மருத்துவ ஆலோசனைகள்//

    தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. செங்கோவி said...
    அடடா, போன வாரம் சொல்லியிருக்கக்கூடாது..ஓகே, நோட் பண்ணிக்கிறேன்.//

    கடந்த வாரம் காய்ச்சலில் இருந்தீர்களா ?
    நண்பரே ,இப்பொழுது பரவாயில்லையா ?

    ReplyDelete
  14. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல பயனுள்ள குறிப்புகள் நண்பா..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. athira said...
    நன்றாகச் சொல்லிட்டீங்க ரமேஸ்.

    இங்கு பனிக்காலம் ஆரம்பமாகப்போகிறதெனில் புளூ இஞ் ஜெக்‌ஷன் போடுவார்கள்... அது எடுத்தால் கொஞ்சம் தவறலாம்.

    விட்டமின் சீ அதிகமாக உள்ள உணவுகளை எடுப்பதும் நல்லது.

    உங்களின் கடைசிக்குறிப்பு... top!!!!

    நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க தோழி ,நன்றி

    ReplyDelete
  16. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல தகவல் .. எங்கள் பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு காய்ச்சல் தான்//


    நன்றி நண்பரே ,ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்

    ReplyDelete
  17. காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  18. அருமையான தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...!!!

    ReplyDelete
  19. வணக்கம் பாஸ்.

    காய்ச்சல் வருமுன் காப்பதற்கேற்ற காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. பயனுள்ள குறிப்புக்கள் பாஸ்

    ReplyDelete
  21. காய்ச்சல் பற்றி பல பயனுள்ள தகவல்கள்,முன்னெச்சரிக்கை, மருத்துவம்,,அடடா..அசத்தல்..

    நன்றி சகோ..

    ReplyDelete
  22. காய்ச்சல் பற்றி பல பயனுள்ள தகவல்கள்,முன்னெச்சரிக்கை, மருத்துவம்,,அடடா..அசத்தல்..

    நன்றி சகோ..

    ReplyDelete
  23. இந்த பருவத்துக்கு தேவையான பதிவு!

    ReplyDelete
  24. சரியான நேரத்தில் அவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  25. நல்ல படங்கள்...-:)

    காய்ச்சலை விரட்ட பயனுள்ள குறிப்புகள்...நண்பரே...

    ReplyDelete
  26. த.ம.7
    நல்ல ஆலோசனைகள்.
    நன்றி.

    ReplyDelete
  27. மரபு சார்ந்த குறிப்புகள் ,நன்று.

    ReplyDelete
  28. பயனுள்ள குறிப்பிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  29. இன்னும் சற்று காய்ச்சலின் வகைகளை பிரிக்க வேண்டும். மாலையில் மட்டும் வரும் காய்ச்சல், குளிர் காய்ச்சல் இவற்றிற்கு தனி கவனிப்பு தேவை. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  30. நல்ல மருத்துவ ஆலோசனை

    ReplyDelete
  31. பயனுள்ள குறிப்புகள். நன்றி

    ReplyDelete
  32. முனைவர்.இரா.குணசீலன் said...
    காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு நண்பரே..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  33. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...!!!//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  34. நிரூபன் said...
    வணக்கம் பாஸ்.

    காய்ச்சல் வருமுன் காப்பதற்கேற்ற காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி!//

    வணக்கம் நண்பா

    கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  35. K.s.s.Rajh said...
    பயனுள்ள குறிப்புக்கள் பாஸ்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  36. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    காய்ச்சல் பற்றி பல பயனுள்ள தகவல்கள்,முன்னெச்சரிக்கை, மருத்துவம்,,அடடா..அசத்தல்..

    நன்றி சகோ..//


    தங்கள் அன்பான கருத்திற்கு நன்றி சகோ

    ReplyDelete
  37. கோகுல் said...
    இந்த பருவத்துக்கு தேவையான பதிவு!//

    நன்றி நண்பா

    ReplyDelete
  38. மாய உலகம் said...
    சரியான நேரத்தில் அவசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி..!//

    அன்பான கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  39. ரெவெரி said...
    நல்ல படங்கள்...-:)

    காய்ச்சலை விரட்ட பயனுள்ள குறிப்புகள்...நண்பரே...//


    கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  40. சென்னை பித்தன் said...
    த.ம.7
    நல்ல ஆலோசனைகள்.
    நன்றி.//


    நன்றி ஐயா

    ReplyDelete
  41. shanmugavel said...
    மரபு சார்ந்த குறிப்புகள் ,நன்று.

    நன்றி நண்பரே

    ReplyDelete
  42. அம்பாளடியாள் said...
    பயனுள்ள குறிப்பிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....//


    நன்றி சகோதரி

    ReplyDelete
  43. சாகம்பரி said...
    இன்னும் சற்று காய்ச்சலின் வகைகளை பிரிக்க வேண்டும். மாலையில் மட்டும் வரும் காய்ச்சல், குளிர் காய்ச்சல் இவற்றிற்கு தனி கவனிப்பு தேவை. பகிர்விற்கு நன்றி//


    தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  44. இருதயம் said...
    நல்ல மருத்துவ ஆலோசனை//

    நன்றி ,தொடர்ந்து வாங்க

    ReplyDelete
  45. இராஜராஜேஸ்வரி said...
    பயனுள்ள குறிப்புகள். நன்றி

    நன்றி மேடம்

    ReplyDelete
  46. பயன் தரும் நல்ல மருத்துவப்
    பதிவு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  47. இன்றைய காலநிலை மாறுபாட்டிற்கேற்ற
    தேவையான பயனளிக்கும் பதிவு...
    நன்றி நண்பரே.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே