உடலில் சூடு குறைய
உடல் சூட்டால் அவதிப் படுபவர்கள் பன்னீர் ரோஜாப்பூ
இருபது எடுத்து அதன் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து
தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் .
அதனை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு விட்டு ,பத்து
ஏலக்காயைத் தோலுடன் அம்மியில் நசுக்கி ரோஜா
இதழ்களுடன் கொட்டி விட வேண்டும் .
அதன் பின்பு நூறு கிராம் சர்க்கரையைக் கொட்டி விட்டு
அதனுடன் 250 மி.லி தேன் ஊற்றவும்.
நன்கு கிளறி அந்த டப்பாவை மூடியால் மூடவும்.
நாற்பத்தொரு நாள் வரை அப்பிடியே விடவும்.
42 - ம் நாள் முதல் தினமும் உணவு அருந்திய பின்பு
காலை , மதியம் , இரவு என மூன்று வேளையும்
மூன்று தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு
விலகி விடும்.
உடலில் பித்தம் தெளிய
உடலில் பித்தம் அதிகமாகச் சேர்வதன் மூலம் வாந்தி ,
தலைசுற்றல் , மயக்கம் ,போன்றவை வரும்.
உடலிலிருந்து சேர்ந்திருக்கும் பித்தத்தை வெளியேற்ற
சுலப வழி .
ஒரு நூறு மில்லிகிராம் தேனை எடுத்து ஒரு கண்ணாடி
பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
அதனுடன் தோல் சீவிய இஞ்சியைச் சிறிய துண்டுகளாக
நறுக்கி போட்டு விட வேண்டும் .
ஒருநாள் முழுதும் ஊறிய பிறகு மறு நாளிலிருந்து தினமும்
முப்பது நாட்கள் காலையில் எழுந்துடன் வாய் கொப்பளித்து
விட்டு அந்த இஞ்சி துண்டுகளிருந்து ஐந்து துண்டுகள் எடுத்து
தேனுடன் வாயில் இட்டு நன்கு மென்று அதன் சாறை மட்டும்
விழுங்கி விட்டு சக்கையை துப்பி விட வேண்டும் .
இதனை முப்பது நாட்கள் கடைப் பிடித்தால் நமது உடலில்
சூழ்ந்திருக்கும் பித்தம் முற்றிலுமாக விலகிக் குணம்
கிடைக்கும்.
நன்றி
நாளைய பதிவில் ஆண்மை கூட " வயாக்ரா" போல்
ஒரு இயற்கை மருந்து தயாரிக்க வழி முறை
உங்க சேவையே சேவை. நல்ல பகிர்வு,
ReplyDeleteநம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...
நல்ல குறிப்புகள் நண்பா..
ReplyDeleteவணக்கம் மருத்துவரே ...
ReplyDeleteதேவையான நேரத்தில் தேவையான பதிவு நன்றி மக்கா...!!!
ReplyDeleteநாளைய பதிவுக்கு பில்டப்பு சூப்பருங்கோ...
மாப்ள அந்த முதல் மருந்து தயாராக 45 நாள் ஆகுங்கறீங்க அதுவரைக்கும் என்னய்யா பண்றது ஹிஹி!....பகிர்வு அருமை!
ReplyDeleteசூடு, பித்தம்
ReplyDeleteஆகியவை அடிக்கடி ஏற்பட்டு
உடலுக்கு துன்பம் விளைவிக்க கூடியவை.
அவைகளுக்கான தமிழ் மருத்துவ முறைகள்
மிகவும் பயனுள்ளவை நண்பரே...
அனேகமாய் நம்மவர் அனைவருக்கும் பயன்படும்
ReplyDeleteபகிர்விற்க்கு நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
நல்ல பயனுள்ள குறிப்பு
ReplyDeleteபதிவாகத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
இஞ்சியில் சுண்ணாம்பு இருப்பதால் வயிறு புண்ணாகலாம். எனவே வேறுஒரு முறையில்தான் இதனை செய்கிறேன். இன்சியை இடித்து சாறு எடுத்து ஸ்ற்று சூடு செய்தபின் பார்த்தால் அடியில் சுண்ணாம்பு தேங்கிருக்கும். மேலே இருக்கும் சாறை மட்டும் எடுத்து தேனுடன் சேர்த்து வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் அருந்தலாம். விரைவு உணவு காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள மருத்துவ குறிப்பு..
ReplyDeleteநன்றி சகோ பகிர்வுக்கு...
நல்ல தகவல்..
ReplyDeleteஎண்ணேய் தேய்த்துக் குளித்தால் சூடு குறையாதா?
தெளிவான விளக்கத்துடன் தரமான செய்தி... நன்றிங்க
ReplyDeleteஎனக்கு மிகவும் தேவையான பதிவு
ReplyDeleteநன்றி!
த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்
அருமையான பயனுள்ள தகவல் நன்றி பாஸ்
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி
ReplyDeleteநல்ல மருத்துவ கருத்து.வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.7
ReplyDeleteஅருமையான தகவல்கள்.நன்றி.
இன்று என் தொடர் பதிவில் உங்களை இணைத்துள்ளேன்.
அருமையான பயனுள்ள தகவல் நன்றி...
ReplyDeleteநல்ல தகவல்கள் ரமேஸ்... ரோசாப்பூவைச் சாப்பிட்டால் ரோசா போல அழகாவார்கள் எனவும் கேள்விப்பட்டேன் அது உண்மையோ/ அறிந்திருக்கிறீங்களோ அதுபற்றி.
ReplyDeleteநாளைக்கு நான் வரமாட்டன், நாளையிண்டைக்கு வாறன் ஓக்கை:))))).
ReplyDeleteஇந்த பண்ணீர் ரோசாவை சும்மாவே மெண்று சாப்பிடுவோம், இஞ்ஜி குறிப்பு அருமை,
ReplyDeleteவாந்தி மயக்கம் வாய் கச்ப்புக்கு, இஞ்சி த்ுண்டு களில் உப்பு சர்க்கரை பொட்டு உஊறவைத்து வாயில் அடக்கி வைட்த்ு கொண்டல் நல்ல கேட்கும்.
வணக்கம் பாஸ்,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
அருமையான இயற்கை வைத்தியக் குறிப்பினை உடற் சூட்டினைத் தணிக்கும் நோக்கோடு தந்திருக்கிறீங்க.
நன்றி!
பின்னூட்டமும் வாக்கும் வாழ்த்தும் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி நண்பர்களே
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள அந்த முதல் மருந்து தயாராக 45 நாள் ஆகுங்கறீங்க அதுவரைக்கும் என்னய்யா பண்றது ஹிஹி!....பகிர்வு அருமை!//
பொறுத்துதான் ஆகணும் ஹி ஹி ஹி
சாகம்பரி said...
ReplyDeleteஇஞ்சியில் சுண்ணாம்பு இருப்பதால் வயிறு புண்ணாகலாம். எனவே வேறுஒரு முறையில்தான் இதனை செய்கிறேன். இன்சியை இடித்து சாறு எடுத்து ஸ்ற்று சூடு செய்தபின் பார்த்தால் அடியில் சுண்ணாம்பு தேங்கிருக்கும். மேலே இருக்கும் சாறை மட்டும் எடுத்து தேனுடன் சேர்த்து வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் அருந்தலாம். விரைவு உணவு காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு. பகிர்விற்கு நன்றி.//
தங்கள் அருமையான கருத்திற்கு நன்றி சகோதரி
செங்கோவி said...
ReplyDeleteநல்ல தகவல்..
எண்ணேய் தேய்த்துக் குளித்தால் சூடு குறையாதா?//
குறையுமே
Jaleela Kamal said...
ReplyDeleteஇந்த பண்ணீர் ரோசாவை சும்மாவே மெண்று சாப்பிடுவோம், இஞ்ஜி குறிப்பு அருமை,
வாந்தி மயக்கம் வாய் கச்ப்புக்கு, இஞ்சி த்ுண்டு களில் உப்பு சர்க்கரை பொட்டு உஊறவைத்து வாயில் அடக்கி வைட்த்ு கொண்டல் நல்ல கேட்கும்.//
நல்ல கருத்து சகோ நன்றி