Wednesday, December 14, 2011

பானை வயிறு ,தொப்பை தப்பா ?







கொழுப்பானது உடல் முழுதும் சீராக பரவி தேங்கினால்
பிரச்சனை இல்லை .


உடலின் மத்தியில் கொழுப்பு சேர்ந்திருப்பது கெடுதல்
தான்அதாங்க தொப்பை



பானை வயிற்றைப் பெற்றால் உடல் உபாதைகள் ஏற்படும்


அனைவருக்கும் தங்களது இடை அளவு (waist size)தெரிந்திருக்கும்


அதே போல அது அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா
என்பதை தமது காற்சட்டை தமது இடையில் லூசாக உள்ளதா
இறுகி உள்ளதா என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம் .


ஆண்களுக்கு இது 102 செ.மீ க்கு அதிகமாகாமலும்


பெண்களுக்கு இது 88 செ.மீ க்கு அதிகமாகாமலும்


இருக்க வேண்டும் என சொல்லப் படுகிறது




தனியாக வயிற்று சுற்றளவு அளவிடுவதை விட
வயிற்றுச் சுற்றளவிற்கும் இடுப்பு சுற்றளவிற்கும்
இடையேயான விகிதம் முக்கியமானது என
ஆய்வு ஒன்று (auther seung-han suk,MD, of colombia-
Presbyteriyan Medical Center in new york ) சொல்கிறதாம்


பெண்களுக்கு வயிற்றுச் சுற்றளவு / இடுப்புச் சுற்றளவு =
0.8 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டுமாம் .


ஆண்களுக்கு வயிற்றுச் சுற்றளவு / இடுப்புச் சுற்றளவு =
0.9 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டுமாம் .


இவ்வாறு இருந்தால் மாரடைப்பு போன்ற ஆபத்தான
நோய்கள வருவதற்கு வாய்ப்பு குறைவாம் .


அதனால் எடையை குறைக்க காட்டும் அதே ஆர்வம்
தொப்பையை குறைக்க காட்டுங்கள்


வயிற்றுக் கொழுப்பு அதிகமாவதால் ஏற்படும் சங்கடங்கள்


உடலின் இன்சுலின் செயற்பாட்டில் குறைபாடு ,அதன் காரணமாக
அதிக இன்சுலின் சுரக்க நேர்வதும் ,நீரிழிவு ஏற்படுவதும்


பெண்களில் ரெஸ்டஸ்ரரோன் ஹார்மோன் அளவு அதிகரித்து
பெண்பால் ஹார்மோன் குறைவதால் மீசை அரும்புதல் ,
மலட்டுத்தன்மை ,பொலிசிஸ்டிக் ஓவரி போன்ற
நோய்கள ஏற்படுதல்


பெண்களில் புரஜஸ்டரோன் அளவு குறைதல்


ஆண்களில் புரஜஸ்டரோன் அளவு அதிகரித்தல்


வளர்ச்சிக்குரிய ஹார்மோன்கள் சுரப்பதில் குறைவு
ஏற்படுதல்


குருதியில் ரைகிளிசரைட் என்ற கொழுப்பு அதிகரித்தல்


குருதியில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL
அளவு வீழ்ச்சியடைதல்


குருதி அழுத்தம் அதிகரித்தல்


மாரடைப்பு நோய்களுக்கான வாய்ப்பு அதிகரித்தல்


பக்கவாதம் போன்ற நோய்களுக்கான வாய்ப்பு
அதிகரித்தல்


(தகவல் எடையை குறைத்து நலனை பேணுங்கள் புத்தகத்திலிருந்து )


உடல் பருமனாக இருப்பதற்கு காரணங்கள்


பரம்பரை ,உணவு பழக்க வழக்கங்கள் ,உடல் உழைப்பு
சூழ்நிலை ,போன்ற காரணங்கள் இருக்கலாம்








நன்றி



 

26 comments:

  1. அனைவருக்கும் தேவைப்படும் குறிப்பு
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    (200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    குறைந்த காலத்தில் அதிக பயனுள்ள
    பதிவுகளைக் கொடுத்த பதிவர் தாங்களாகத்தான்
    இருப்பீர்கள். தொடர வாழ்த்துக்கள்
    நேற்று ஏனோ கம்மெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகவே இல்லை )
    த.ம 2

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல் குறிப்புகள், ரமேஷ்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. அனைவருக்கும் ரொம்ப அவசியமான பதிவு பாஸ்!

    ReplyDelete
  5. டாக்டர் வாழ்க.. யூஸ் ஃபுல் தான் டாங்க்ஸூ

    ReplyDelete
  6. பயனுள்ள அருமையான பதிவுக்கு
    நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள்..
    நன்றி..

    ReplyDelete
  8. நல்லதொரு தகவல்..

    அற்புதமான குறிப்புகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. மாப்ள விஷயங்கள் நெறைய இருக்கு போல நன்றிய்யா!

    ReplyDelete
  10. மாப்ள ஏதாவது கோபம்னா தனி மெயில்ல திட்டி இருக்கலாமா... இப்படி போட்டுடீன்களே...ஹா ஹா

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு.நன்றி!!!

    ReplyDelete
  12. பயனுள்ள குறிப்புகள் பாஸ்

    ReplyDelete
  13. Ramani said...
    அனைவருக்கும் தேவைப்படும் குறிப்பு
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    (200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    குறைந்த காலத்தில் அதிக பயனுள்ள
    பதிவுகளைக் கொடுத்த பதிவர் தாங்களாகத்தான்
    இருப்பீர்கள். தொடர வாழ்த்துக்கள்
    நேற்று ஏனோ கம்மெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகவே இல்லை )
    த.ம 2//

    நேற்றே பார்த்தேன் நண்பரே தங்களின் தமிழ்மண வாக்களித்தை .

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  14. தொப்பை பற்றி அழகாக விளக்கி, சூப்பரான ஐடியாக்களையும் தந்தமைக்கு நன்றி...!!!

    ReplyDelete
  15. (200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வழக்கம் போல் பயனுள்ள பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. 200- க்கு வாழ்த்துக்கள். உங்கள் பணியை தொடருங்கள்.தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!நேற்றைக்கு எல்லாருடைய தளங்களும் ஒப்பன் ஆகா நீண்ட நேரம் ஆனதால் கமென்ட் போட முடியவில்லை.

    ReplyDelete
  19. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
  20. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. பயன்மிக்க தகவல். பகிர்வுக்கி மிக்க நன்றி. வாழ்க!

    ReplyDelete
  22. தேவையான தகவல் அன்பரே..

    அறிந்துகொண்டேன்..

    ReplyDelete
  23. அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. அடுத்த பகிர்வை எதிர்பார்த்து வந்தேன் ......

    ReplyDelete
  25. நல்ல ஆரோக்கியக் குறிப்பு. பலர் பயனடைய வேண்டும். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  26. அன்பு...இவ்வளவும் சொல்லிட்டு கொழுப்பைக் குறைக்க வழி சொல்லாட்டி எப்பிடி !

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே