வெந்தயம் : 200 கிராம்
உளுந்து : 100 கிராம்
பனை வெல்லம் : 600 கிராம்
பொடி செய்யும் முறை :
வெந்தயத்தைக் கழுவவும். ஒரு மண் சட்டியில் போடவும்.
காய்ச்சிய பசும் பால் நானூறு மி.லி ஊற்றி மூடவும்.
12 மணி நேரம் கழித்து பாலை மட்டும் நீக்கவும்.
வெந்தயத்தை நிழலில் உலர்த்தவும் ,உலர்ந்ததும் மீண்டும்
சட்டியில் போட்டு நானூறு மி.லி இளநீர் ஊற்றி மூடவும்.
12 மணி நேரம்கழித்து இளநீரை மட்டும் நீக்கவும்.
வெந்தயத்தை உலர்த்தவும் .நன்றாக இடித்துக் கொள்ளவும்
உளுந்தை ஒரு மண்சட்டியில் போட்டு இருநூறு பச்சைப்
பசும் பாலை ஊற்றி மூடவும்.
மூன்று மணி நேரம் கழித்து பாலை மட்டும் நீக்கவும்.
உளுந்தை நன்றாக நிழலில் உலர்த்தி ஒரு மண் சட்டியில்
போட்டு ஒரு தேக்கரண்டி நெய் விட்டு இளம் வருவலாக
வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக இடித்து வெந்தயத்துடன் கலந்து கொள்ளவும்.
பனைவெல்லத்துடன் நன்றாக இடித்துக் கொள்ளவும்.
மூன்றையும் கலக்கிக் கொள்ளவும்.
கண்ணாடிப் புட்டியில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.
பயன் படுத்தும் முறை :
காலை உணவு முடித்து இரண்டு தேக்கரண்டி தூளுடன்
சிறிது வெந்நீர் அல்லது பாலை அருந்தலாம் .
இரவு உணவுக்கு பின் இரண்டு தேக்கரண்டி உட்கொண்டு
சிறிது பாலை அருந்தலாம் .
குறைந்தது நாற்பது நாட்கள் உட்கொள்வது நல்லது
பின்குறிப்பு :
பொடி உண்ணும நாட்களில் இளங்காய்கள் ,பழங்கள் ,
கீரைகள் ,தயிர்,நெய்,பால் இவைகளை சேர்த்துக்
கொள்வது மிகவும் நல்லது .
கடலைப் பருப்பு ,மொச்சை இவைகளை நீக்கவும்.
30 comments:
அருமையாக உள்ளது
பகிர்வுக்கு நன்றி சகோ .
stalin wesley said...
அருமையாக உள்ளது
பகிர்வுக்கு நன்றி சகோ .//
கருத்திற்கு மிக்க நன்றி சகோ
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல் நண்பா.. அப்படியே உடலில் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்க ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்.. ஹீ.ஹீ..
கருனுக்கு உள்ள அதே பிரச்சினை தான் மாப்ள எனக்கும்... ஏதாவது பண்ணி எங்க உடம்பை குறைக்க முடியாதா...
அப்படியா இந்த பொடிகளை நீங்களே தாயார் செய்து விற்றால் நன்றாக இருக்கும், உங்களை நம்பி நாங்கள் வாங்குவோம்
அசத்தலான தகவல்
தமிழ்மணம்5
மாப்ள அருமையான பகிர்வு நன்றி...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சசிகுமார் said...
கருனுக்கு உள்ள அதே பிரச்சினை தான் மாப்ள எனக்கும்... ஏதாவது பண்ணி எங்க உடம்பை குறைக்க முடியாதா..
>>>>>>>>>>>
ரெண்டு பேரும் சரக்கடிக்கரதை குறைக்கவும்!...அப்படியே அடிச்சே ஆகணும்னா...பிராந்தி வித் சுடு தண்ணியுடன் அடிங்க(!)...வெஜிடேரியன் சைட் டிஷ் எண்ணெயில் பொறிக்காததை எடுத்துக்கொள்ளவும்....ஏன்யா இதெல்லாம் எங்கிட்ட கேக்க கூடாத ஹிஹி!
எளிமையான வைத்தியம் நன்றி நண்பரே...!!!
விக்கியுலகம் said...
மாப்ள அருமையான பகிர்வு நன்றி...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சசிகுமார் said...
கருனுக்கு உள்ள அதே பிரச்சினை தான் மாப்ள எனக்கும்... ஏதாவது பண்ணி எங்க உடம்பை குறைக்க முடியாதா..
>>>>>>>>>>>
ரெண்டு பேரும் சரக்கடிக்கரதை குறைக்கவும்!...அப்படியே அடிச்சே ஆகணும்னா...பிராந்தி வித் சுடு தண்ணியுடன் அடிங்க(!)...வெஜிடேரியன் சைட் டிஷ் எண்ணெயில் பொறிக்காததை எடுத்துக்கொள்ளவும்....ஏன்யா இதெல்லாம் எங்கிட்ட கேக்க கூடாத ஹிஹி!//
சோடா ஊத்தி குடிக்கலாமா அண்ணே ஹி ஹி...
பயனுள்ள தகவல்.
வெந்தயதிற்கு எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு??
தொடர்ந்து எழுதுங்கள் பயன் பெருகிறோம்.
சிறப்பான தகவல் பாஸ்
அருமை -வெந்த அயத்தை சொல்லி -ஐயத்தை நீக்குகிறீர்கள் -நலம்
பாட்டி வைத்தியம் என்று
சொல்வார்கள!
இனி, அதை எம் ஆர்
வைத்தியம் என்று
சொல்ல்லாம்!
அரிய பதிவு சகோ!
புலவர் சா இராமாநுசம்
பயனுள்ள தகவல் நண்பா...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...
மிக எளிதான இயற்கை மருத்துவ முறைகளைக் கூறி வருகிறீர்கள்.நன்று.
த.ம.8
விக்கி கருன் மனோ சசி மாதிரி நானும் குண்டுதான் இதை சாப்பிடலாமா? உடம்பு
ஏறுமா?அதைப்பற்றி எழுதலியே..
வெந்தயத்தின் முந்தைய இரண்டு இடுகைகளையும் இன்று தான் படித்தேன் நண்பரே..
வெந்தயத்தில் இத்தனை குணங்களா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது...
தொடருங்கள் பயனளிக்கும் பதிவேற்றங்களை...
நன்றிகள் பல..
தேவையான பகிர்வு நண்பரே..
பயனுள்ள குறிப்பு
அனைவருக்கும் தேவையான குறிப்பும் கூட
தொடர வாழ்த்துக்கள்
எளிமையான வைத்தியம் நன்றி
பயனுள்ள தகவல்..
பகிர்வுக்கு நன்றி
குறித்துக்கொள்ள வேண்டிய அருமையான பதிவு.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
நன்றி சகோ மிக்க நன்றி .மேலும் மேலும் தொடரட்டும் இந்த
சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் .
வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள தகவல் நண்பா.. அப்படியே உடலில் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்க ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்.. ஹீ.ஹீ..//
அதற்கு ஒரு பதிவு போட்டிடலாம் நண்பா
சசிகுமார் said...
கருனுக்கு உள்ள அதே பிரச்சினை தான் மாப்ள எனக்கும்... ஏதாவது பண்ணி எங்க உடம்பை குறைக்க முடியாதா...//
முடியுமே ....
அதற்கு ஒரு பதிவு போட்டிடலாம் நண்பா
mubarak kuwait said...
அப்படியா இந்த பொடிகளை நீங்களே தாயார் செய்து விற்றால் நன்றாக இருக்கும், உங்களை நம்பி நாங்கள் வாங்குவோம்//
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ
தாயாரிக்கும் சமயம் வரும்பொழுது தங்களுக்கு தகவல் வரும் சகோ
veedu said...
விக்கி கருன் மனோ சசி மாதிரி நானும் குண்டுதான் இதை சாப்பிடலாமா? உடம்பு
ஏறுமா?அதைப்பற்றி எழுதலியே..//
உடலுக்கு பலம் கிடைக்கும் நண்பா
குண்டு குறைக்க வழிவகுத்துடுவோம்
தளத்திற்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
Post a Comment