ஒரு புத்தகத்தில் திராட்சை பழம் பற்றி படித்தேன்
அதில் சில வற்றை உங்களோடு பகிர்கிறேன்
திராட்சைப் பழத்தின் இயல்பு குளிர்ச்சியைத்
தருவதாகும்.
இரத்த விருத்தி முதற்கொண்டு பல நல்ல பலன்கள்
இதற்குண்டாம்.
குடல் புண் சரியாக
என்ன காரணத்தால் குடல் புண் ஏற்பட்டிருந்தாலும்
திராட்சை பழச்சாற்றை காலை , பகல் , மாலை ,என
மூன்று வேளைகள் கொடுக்க குணம் தெரியும்.
வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் திராட்சை சாற்றை
கொடுக்க வேண்டும்.
குடல் புண் இல்லாவிட்டாலும் மேற்கண்டவாறு சாப்பிட
உடல் நல்ல தேஜஸையும் வலிமையும் பெறும்.
இரத்த அழுத்தம் நோய் உள்ளவர்களும் திராட்சைச் சாற்றை
வேளைக்கு இரண்டு அவுண்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று
வேளை சாப்பிட்டு வந்தால் சிறுகச் சிறுக இரத்த அழுத்தம்
குறைந்து சமனப் படும்.
திராட்சைச் சாறு கல்லீரல் ,மண்ணீரல் தொடர்பாக ஏற்படுகிற
குறைபாடுகளையும் அகற்றும் சக்தி பெற்றதாகும்.
இரத்தம் தூய்மை பெற
அன்றாடம் உலர்ந்த திராட்சையை பசுவின் பாலில் விட்டுப்
காய்ச்சி சாப்பிட இரத்தம் தூய்மை பெறும்.
மேக நோய் உள்ளவர்கள் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர
நாளடைவில் குணம் தெரியும்.
வறட்டு இருமல் இருந்தால்
கபத்துடன் கூடிய வறட்டு இருமல் இருந்தால் அதனைக் குணப்
படுத்திக் கொள்ள இருபது கிராம் அளவுக்கு உலர்ந்த திராட்சையை
நெய்யில் வறுத்து சாப்பிட குணமாகும்.
இதயம் வலிமை பெற
பன்னீர் திராட்சையை அரை டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும்.
பிறகு திராட்சையை நன்றாகப் பிழிந்து அந்த ரசத்தின் அளவுடன்
சமமான அளவு பசுவின் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர
இருதயம் நன்கு வலிமையுடன் செயல் படும்.
மேற்கண்டவாறு இரவு படுக்கைக்குச் செல்லும்போது
சாப்பிட வேண்டும்.
நன்றி
இதனையும் ஒரு பார்வை பாருங்க
இதற்கு முன் இந்த தளத்தில் வந்த பழத்தின் பதிவு
25 comments:
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பா, மிகவும் பயனுள்ள தகவலும் மருந்தும்...!!!
திராட்சையின் மகத்துவம் தெரிந்து கொண்டேன்..
பயனுள்ள தகவல்.....
விதையில்லா திராட்சை நல்லதா? கெட்டதா? சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்.
வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு
இவ்வ்வ்வ்வளவு பயன் இருக்கா!!!!!!!!!!!!
அருமை..
நலமான பதிவு.
பயனுள்ள பதிவு நன்றி
இன்றைய ஸ்பெஷல்
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
மிக்க நன்றி நண்பா
சரியான நேரத்துல சரியான பதிவு சபாஸ் பலே பலே!
திராட்சையில் இவ்வளவு இருக்கா? ரெகுலரா வாங்கிட வேண்டியதுதான்.
திராட்சைக்குள் இம்புட்டு இருக்கா...
சூப்பர்..
திராட்சையில் இவ்வளவு இருக்கா?
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி!
மிக நல்ல திராட்சை ரசமான கருத்துகள் கசக்கவே மாட்டாது. மிக்க நன்றி. வாழ்த்துகள். தொடரட்டும் பணி. எனது இரட்டைக் கட்டிலை வாசிக்கவும். மீண்டும் தொடருவேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பதிவு
நல்ல பதிவு.
அதுசரி என்ன இப்போதெல்லாம் தொடர்ந்து மருத்துவக் குறிப்புக்களே போடுறீங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்:))...
இடையிடை வேறு ஏதாவது காரசாரமும் கலந்து போடுங்கோ ரமேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
அட நல்ல தகவல் என்ன எங்க ஊர்களில் திராட்சையின் விலையைக்கேட்டால் தலைசுத்தும்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அருமையான தகவல்கள் பயனுள்ளது நன்றி நண்பரே....
வழக்கம் போல பயனுள்ள தகவல்கள் சார்....
வழக்கம் போல ஓட்டும் போட்டாச்சு...
அருந்தும் திராட்சை மருந்தும்
ஆவதைச் சொன்னீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
குழந்தை பிறந்தவுடன் அம்மாவுக்கு கொடுக்கும் கிண்டு மருந்தில் உலர்ந்த திரட்சையை நிறைய சேர்த்துக் கொள்வார்கள்.
குழந்தைக்கு உலர்ந்த கொட்டை திராட்சையை இரவு ஊறபோட்டு அந்த நீரை மறுநாள் கொடுப்பார்கள்.
நீங்கள் கொடுத்த பயனுள்ள குறிப்புக்கு நன்றி.
thagavalgalukku mikka nandri
Post a Comment