இரண்டு குடி காரர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டு
பயங்கர சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
எதற்கு.........
மேலே வானத்தில் ஒருப்பது சூரியனா ? சந்திரனா?
என்று கடும் வாக்கு வாதம்.
ஒருத்தன் சொல்கிறான் மேலே இருப்பது சூரியன் என்று!
மற்றவன் சொல்கிறான் மேலே இருப்பது சந்திரன் என்று
இதனால் இரண்டு பேருக்கும் கடும் வாக்கு வாதம்
அப்பொழுது அந்த வழியாக ஒருவர் வருகிறார் ,அதனைப்
பார்த்த ஒருவரும் சரி அவரிடமே நியாயம் கேட்போம்
என்று அவரை அருகில் அழைத்தார்கள்
அவரும் என்னவென்று கேட்க ..............
நீங்களே சொல்லுங்கள் மேலே இருப்பது சூரியனா?
அல்லது சந்திரனா ? என்று கேட்க
அவரும் மனதுக்குள் (அடப்பாவி பட்டப்பகலில்
மேலே இருப்பது நிலாவா இல்லை சூரியனா என்று
கேட்கிறாங்களே ,அவர்களிடம் எதற்கு வம்பு என
நினைத்து . அவர்களிடம்
எனக்கு எப்பிடிங்க தெரியும் ,நான் வெளியூருங்க என்று
சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்.
இது எப்பிடி இருக்கு ?!!!!
எப்பவோ படித்தது ,மனதுக்கு பிடித்தது............
போகத்தின் அடையாளமாக - பெண்ணைப்
புல்லர்கள் பார்க்கின்ற தேனோ ?
போகின்ற வருகின்ற மங்கையர் செவிகூசப்
புலம்புதல் ஆண்மையென்பாரோ ?
இதைப் பொருமையாய்ப் பார்ப்பதே ஊரோ
தாய் தந்தை வாய்க்கு பயந்து -கொண்ட
தாரத்தை விடுபவன் பேடி !
தாரத்தின் சொல் கேட்டு
ஈன்றோரைக் கைவிட்டு
தர்மம் அழிப்பவன் பாவி !- இந்த
தடுமாற்றம் அற்றவன் ஞானி.
நன்றி
படங்கள் இணையத்திலிருந்து ,நன்றி கூகிள் இணையம்
29 comments:
மனதுக்குப் பிடித்த அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி said...
மனதுக்குப் பிடித்த அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..//
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி மேடம்
அதுவும் சரி குடிகாரர்களிடம் வம்பு செய்தால்
யார் குடிகாரார்கள் என தெரியாமல் போய்விடும் என்பார்கள்
என்வே இப்படி நடு நிலை வகிப்பதே புத்திசாலித்தனம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
சில சமயங்களில் இப்படித்தான்
நமக்கெதுக்கு வம்பு என்று செல்ல வேண்டியதிருக்கும்..
அழகா சொன்னீங்க..
கவிதை அருமை..
படைத்தவருக்கு வாழ்த்துக்கள்..
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே..
மகேந்திரன் said...
சில சமயங்களில் இப்படித்தான்
நமக்கெதுக்கு வம்பு என்று செல்ல வேண்டியதிருக்கும்..
அழகா சொன்னீங்க..
கவிதை அருமை..
படைத்தவருக்கு வாழ்த்துக்கள்..
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே..//
அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே
சூப்பர் ஜோக் காலையிலேயே சிரிக்க வச்சுடீங்க... இன்றைய பொழுது இனிதே அமையும் என்ற நம்பிக்கையில்.... அனைத்திலும் ஓட்டு போட்டாச்சு...
வெளியூர்க்காரரின் பதில் செம... கவிதை வரிகலும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பா!
நானும் வெளிவூருகாரனுஙகோ...
பெற்றோரை கவணிக்காதனுக்கு கண்டிப்பாக நரகம்தான்...
நமக்கெதுக்கு வம்பு நானும் வெளியூர்க்காரந்தாங்க!ஹா ஹா!
கவிதை நன்று!நல்ல பகிர்வு!
ஹா ஹா நல்ல சுவாரசியமான பதிவு.
பதிவு நல்லாவே இருக்கு.
குடிகாரர்களிடம் வம்பு கூடாது.சரியாக நழுவிவிட்டார் அந்த ஆள்.
கடைசி நான்கு வரிகள் மனதை கனக்கச்செய்தது.
நல்ல பகிர்வு.
வம்பு வேண்டாம் என்று ஒதுங்கியவர் பதிலில் நல்ல
நகைச்சிவையும் உள்ளது!
புலவர் சா இராமாநுசம்
அந்த கடைசி படம் நெஞ்சை கனக்க செய்துவிட்டது...!!!
நானும் வெளியூருங்கோ...
உலகம் எப்படி எத்தனை மனிதரைக் கண்டாலும் ஜீரணித்துக் கொள்கிறதே....
அருமையாகப் படைத்துள்ளீர்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
GOOD....
:)))))))))))))
தாய் தந்தை வாய்க்கு பயந்து -கொண்ட
//தாரத்தை விடுபவன் பேடி !
தாரத்தின் சொல் கேட்டு
ஈன்றோரைக் கைவிட்டு
தர்மம் அழிப்பவன் பாவி !- இந்த
தடுமாற்றம் அற்றவன் ஞானி.//
அருமையான பதிவு. நகைச்சுவையும் அருமை.
தமிழ்மணம் வாக்கு 9.
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
அருமையான பதில்! நானாருந்தா,அப்புடி ஒண்ணு(சூரியன்,சந்திரன்)இருக்கிறதே தெரியாதுன்னிருப்பேன்!
அறுபது வருடங்களுக்கு முன் இந்த சூரியன்-சந்திரன் ஜோக்கை ஆனந்தவிகடனில் 6 மாதத்திற்கு ஒரு முறை போடுவார்கள்.
எஸ்கேப் ஆவதுதான் நல்லது.
நல்ல பகிர்வு
ஹா ஹா எஸ்கேப் செம காமடி
பெண்களை போதைப்பொருளாக பார்ப்பவர்கள் பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள்..
பெற்றோருக்காக மனைவியையும், மனைவிக்காக பெற்றோரையும் கைவிடுபவன் மனிதனே அல்ல.
// நான் வெளியூருங்க//
செம எஸ்கேப்!!
கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி நட்புக்களே
பதிவு முதலில் சிரிக்கவைத்து,ஆதங்கப்படவைத்துக் கடைசியில் படம் மனதை நெகிழச்செய்துவிட்டது !
பகிர்வுக்கு நன்றி
Post a Comment