கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?
மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?
கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன் .
மனைவி :- ???
================================================================
பெரியவர் :- உனக்கு இரட்டை குழந்தைகளா பிறந்திருக்கு !!!
பெண் :- அமாம் , இரண்டுமே ஆண் குழந்தைகள்
பெரியவர் :-இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே ,எப்படி இவர்களை உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ?
பெண் :- முதல் குழந்தை இங்கே இருக்கிறது . இரண்டாம் குழந்தை பக்கத்தில் இருக்கிறது .அடையாளம் கண்டுபிடிக்க இதில் என்ன குழப்பம் இருக்கிறது .
பெரியவர் :- இப்ப சரி . மற்ற சமயங்களில் எப்படி அவர்கள் இருவரையும் அடையாளம் கணடுபிடிப்பாய்?
பெண் :- ஒரு குழந்தையை ஒரு அறையிலும் இன்னொரு குழந்தையை வேறொரு அறையிலும் படுக்க வைப்போம் .இருவருக்கும் வித்தியாசம் தெரியபோகிறது .
பெரியவர்:- எந்த அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?.
பெண் :-ஒரு அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று பார்ப்பேன் . அடுத்த அறையில் இன்னொரு குழந்தை உள்ளது என்று தெரிந்து கொள்வேன் .
பெரியவர் :- அட அதில்லம்மா ...ஒரு குழந்தை வீட்டில் இருக்கிறது ,மற்றொரு குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருக்கிறது . எந்த குழந்தை வீட்டில் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பெண் :- அதிலே என்ன சிக்கல் இருக்கிறது ?. எனக்கு இரண்டு குழந்தைதானே உள்ளது .வீட்டில் இருக்கின்ற குழந்தையைப் பார்த்த உடன் இன்னொரு குழந்தை வெளியே உள்ளது என்று அடையாளம் கண்டு கொள்வேன் .
பெரியவர் : (தலையை பிய்த்துக்கொண்டே போகிறார் ).?????//?????????????
===============================================================
மூன்றாம் வகுப்பு மாணவன் :- " டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .
அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .
ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?
யாருமே பதில் பேசவில்லை .
ஆசிரியை :- (பெருமையாக ) தன கண்டுபிடித்த விடையை சொல்ல
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா
ஆசிரியை :- ?????????????????
===========================================================
குடிகாரனின் ஆராய்ச்சி
தண்ணியும் விஸ்கியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது .தண்ணியும் பிராந்தியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது . தண்ணியும் ஜின்னையும் கலந்து குடித்தான் போதை இருந்தது , இறுதியாக அவன் தண்ணீருக்கு போதை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான் .
==============================================================
சிரிங்கப்பா , ஜோக்கடிச்சா சிரிக்கனும்ல , நானெல்லாம் சிரிப்பே வரலன்னா கூட சிரிக்கல .சும்மா ஆக்ட் குடுங்கப்பா .
உங்கள் பிளாக் பயனுள்ளதாக உள்ளது . வாழ்த்துக்கள் . புதுமையான செய்திகளை பதிவிடும் எனது பிளாக் http://tamilamazingnews.blogspot.com
ReplyDeleteநாடோடி said...
ReplyDeleteஉங்கள் பிளாக் பயனுள்ளதாக உள்ளது . வாழ்த்துக்கள் . புதுமையான செய்திகளை பதிவிடும் எனது பிளாக் http://tamilamazingnews.blogspot.com
தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே