டென்சன்..... டென்சன்..... டென்சன்......
மனம் அமைதியாகவும் நிம்மதியான வாழ்க்கையும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க்கை .
காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை டென்சன் வாழ்க்கை தான் ,
எல்லாம் இருந்தாலும் , எதுவுமே இல்லை என்றாலும் ஆளுக்கு ஒரு பிரச்சனை தான் வாழ்க்கையில் .
பிரச்சனைகளை கையாளும் விதத்தில் தான் நம் வாழ்க்கை இன்பமாகவோ , துன்பமாகவோ மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெள்ளை சுவற்றில் ஒரு சிறு கருப்பு புள்ளி இருந்தால் நம் கவனம் எல்லாம் அந்த கருப்பு புள்ளி மீது தான் இருக்கும் .அது போல தான் வாழ்வில் ஆயிரம் நல்லது இருந்தாலும் மனம் ஏதாவது ஒரு துன்பத்தை சுற்றி சுற்றி தான் வரும்.
மனம் எரிச்சல் பட்டால் சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சனையாக தெரியும் . ஒரு அறையில் தேவையில்லாத பொருட்கள் நிரம்பி இருந்தால் புதியதாக அத்தியாவசமான ஒரு பொருளை வைக்க இடமிருக்காது .அதே போலத்தான் மனமும் , தேவையில்லாத பிரச்சனைகளால் மனம் நிரம்பி இருந்தால் புதிய நல்ல விஷயங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது .
மனதை குப்பை தொட்டி போல் வைக்காமல் புதிய விசயங்களுக்கு இடம் கொடுக்க காலியாக வைத்திருங்கள் .எதையும் தொலைநோக்குடன் பாருங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள் .
வாழ்க்கை இன்பமாக மாற சில வழிமுறைகள் உண்டு .அதை கடைப்பிடித்தால் சந்தோசமாக வாழலாம் .அதைப்பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம் .
உங்கள்
No comments:
Post a Comment
இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே