Sunday, July 10, 2011

“ கடி ” ஜோக் ???

அம்மா:- ஏண்டா இந்த வருஷம் ஃபெயிலான
மகன் :- 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க.
(அரசியல் பாணியில்)
அம்மா:-??????????????
=======================================================================


மச்சான் :- ஹல்லோ. நாந்தான் மாமா பேசுரேன்.
மாமா : - நீ மாமா –ன்னா நான் யாரு?
மச்சான் :- ஐய்யோ ,அதில்ல மாமா ,நாந்தான் உங்க மச்சான் பேசுரேன்
மாமா :- பேசு
மச்சான் ;-!!!!


மச்சான் :-சரி மாமா , சவுக்கியமா ,இருக்கீங்களா?
மாமா :- இத கேக்கத்தான் போன் செஞ்சியா?
மச்சான் :-விலையாடாதீங்க மாமா
மாமா:- ஆமா, நீ விலையாட என்ன காலி க்ரௌண்டா,இல்ல எனக்கு தான் வேர வேலை இல்லையா/
மச்சான் :-சவுக்கியமான்னு கேட்டது ஒரு குத்தமா மாமா.
மாமா :-நான் சவுக்கியமா இருந்தா என்ன செய்வ ,இல்லை நான் சவுக்கியமா இல்லாம இருந்தா என்ன செய்வ ?
மச்சான் :- மாமா எதாவது மூடு கீடு சரியில்லையா
மாமா:-மூடு சரியா இருந்தா என்ன பன்னுவ ,சரியில்லன்னா என்ன பன்னுவ
மச்சான் :-சரி மாமா ,நான் அப்புறமா பேசுரேன்
மாமா;- எப்புறமா பேசுர
மச்சான் :-ஹல்லொ, யாரு மாமா தானே பேசுரது
மாமா:- ஆமா
மச்சான்:-நீங்க எந்த மாமா பேசுரீங்க
மாமா:- உனக்கு எந்த மாமா வேணும்
மச்சான்:-நீங்க கணேஷ் மாமா தானே
மாமா :- அட லூசு பயலே இந்த கேள்விய நீ போன் செஞ்ச உடனே கேட்டிருக்கனும்.
மச்சான்:- யோவ் யார்யா அது? என்ன பார்த்து லூசுன்னு சொல்றது
          வார்த்தையை அளந்து பேசு
மாமா:- எனக்கு நேரமில்லை நீ வேண்டுமானால் டேப் எடுத்து வந்து நான் பேச பேச அலந்துக்கோ
மச்சான் :- போனை ஆத்திரத்துடன் கட் செய்து விட்டு வாய் குள்ளே முனுமுனுக்கிறான்.(பய புள்ள காலையிலேயே கலாய்ச்சுட்டானே,அடிச்ச போதை எறங்கி போச்சே, புதுசு புதுசா கலாய்க்கிறானுங்களே,நம்பர மாத்தி போட்டது ஒரு குத்தமாயா? ஐயோ…..ஐயோ)
==================================================================
முற்பகல் செயின்
பிற்பகல் விளையும் –இது நார்மல்
முற்பகல் ச்செயின்
பிற்பகல் வளையல் –இது திருடன் வாக்கு
===================================================================
 குடிகாரனின் நியாயம்
நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்
குடிப்பதற்க்கு தேவையான பணம் பெறுவதற்க்கு
ஏன் குடிக்கிறாய்?
பிச்சை எடுப்பதற்க்கு தேவையான துணிச்சலை பெறுவதற்க்கு
============================================================================
ஒருவன்:- தினந்தோறும் குடிக்கும் குடிகாரனின் மீது எனக்கு அனுதாபம் இல்லை
மற்றொருவன்: - தினந்தோறும் குடிப்பவனுக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை.
=====================================================================================











ஐயோ ஐயோ காலையிலேயே கொல்றானே
இதுக்கு நான் சாவரதே மேலு

No comments:

Post a Comment

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே