இதய நோய்கள்:-
1.உயர் இரத்த அழுத்தம்.குறைவான இரத்த அழுத்தம்
2.இரத்த குழாய்களில் கொழுப்பு படிதல்
காரணம் :-
மது, புகையிலை போன்ற காரணங்கள்
அதிக கோபம், படபடப்பு,ஆத்திரம், தேவையில்லாத கவலைகள்
ஆகியவைஇதயம் பாதிப்படைய காரணங்கள்
இதய நோய் வராமல் இருக்க உணவு முறைகள்
பால் , பழம், பச்சைக் காய்கறிகள் இவற்றை தினசரி ஒரு வேளையாவது உண்ணவேண்டும்.
பழச்சாறு, தேன் ,பாலில் ஊறிய அவல், பேரீச்சம் பழம் இவற்றையும்
ஒரு வேளையாவது உண்ணவேண்டும்.
ஜீரணிக்கக் கூடிய உணவு வகைகள் உண்ணவேண்டும்.கீரை , காய்கறி இவற்றை உண்டுவிட்டு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
மாமிசம், மீன், கருவாடு போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
திராட்சை பழம் இதயத்தை பலப்படுத்தும்.
பேரீக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இது ஹார்ட் அட்டாக்கைதடுக்கும்.இதயத்திற்க்கு பலம் கொடுக்கும்.இரத்த அடைப்பை நீக்கும்.
காலையில் பேரீக்காயும் ,மாலையில் ரோஜாப்பூவும் இதயத்தை பலப்படுத்தும்
இதயம் பலம்பெற தினசரி நன்றாக பழுத்த ஒரு நெல்லிக்கனியைத் தின்றுவிட்டு ஒரு தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். இவ்விதம் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.
நல்ல இரத்தம் உண்டாகும்.
ஆப்பிள், ஆரஞ்சு,தக்காளி, பப்பாளி, பேரீச்சம் பழம் , உலர் திராட்சை , கொள்ளு, வெந்தயம், வெங்காயம் , மாதுளம் பழம் , பீட்ரூட், காரட், வெள்ளரி, வெண்தாமரை இதழ், ரோஜா இதழ், பசலைக்கீரை ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.
இதய வலிக்கு காரணம் அதிக கொலுப்பு , அதிக இரத்த அழுத்தம் , அதிக சர்க்கரை நோய் இம்மூன்று காரணங்களினால் இதய வலி உண்டாகும்.இம்மூன்றையும்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.
நண்பர்களெ தங்கள் கருத்து.
உங்கள்
hii.. Nice Post
ReplyDeleteFor latest stills videos visit ..
www.chicha.in
www.chicha.in