Sunday, July 3, 2011

மனம் போல் வாழ்க்கை -3

    நமக்கு வெற்றியும் மகிழ்வும் தரக்கூடிய 
மன யுத்திகளில் மிகப்பெரிய உத்தி -

 "விரும்புவது கிடைக்காவிட்டால் 
கிடைத்தது விரும்புங்கள் !"

 "வாழ்க்கையில் எல்லாமே நாம் நினைத்தபடி நடப்பதில்லை .இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்வது அவசியம் ."

ஒன்றை நாம் விரும்புகிறோம் , அதற்காக முயற்சிக்கிறோம் -அது கிடைத்து விடும் போலவும் தோன்றுகிறது .கடைசி நேரத்தில் கை நழுவி போய்விடுகிறது .ஏமாற்றத்திற்கு ஆளாகிறோம் .

உணர்ச்சி என்கிற அளவில் அது சரிதான் .ஆனால் அந்த ஏமாற்றத்தைச் சுமந்து கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை .

எவ்வாறு சூதாட்டத்தில் வெற்றி தோல்விகள் ஏற்படுகிறதோ , அப்படித்தான் அதையும் எடுத்து கொள்ள வேண்டும் .

நாம் விரும்பியது கிடைக்காத சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும் . அதற்காக அதையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது .

எது கிடைக்கிறதோ அதை விரும்பக் கற்று கொள்ள வேண்டும் .

விருப்பு ,வெறுப்பு எல்லாம் முற்றிலும் மனதை பொறுத்த விஷயம் .பார்க்க போனால் வெறுப்பது ஓர் எதிர்மறை குணம் .

நாம் ஆசைபட்டால் எதன் மீதும் நம்மால் விருப்பம் செலுத்த முடியும் .உதாரணமாக , ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆசைபடுகிறீர்கள் . அதை உங்களால் செய்ய முடியாமல் போய் விடுகிறது .

இன்னொரு தொழில் இயற்கையாக உங்களுக்கு அமைகிறது .அதை நீங்கள் எதற்காக வேருக்க வேண்டும் ?.

"செய்கின்ற வேலை எதுவானாலும் அதை விருப்பத்துடன் செய்வதற்கு நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும் .விரும்பிச் செய்கின்ற ஒரு காரியத்தைத்தான் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும் ."

திறமையினையும் அப்போதுதான் வெளிப்படுத்த முடியும்.

விரும்பியது கிடைக்காத போது, கிடைத்ததை விரும்புவதுதான் நடைமுறைச் சாத்தியமானதும் , வெற்றியினை அளிக்கக்கூடியதும் ஆகும். 

"விரும்புகின்ற படியே எல்லாம் நடக்காது என்கிற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு நமக்கு கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திகொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும். பாரமாகத் தோன்றாது ."


முயற்ச்சித்து பாருங்களேன் நண்பர்களே .
வாழ்வு இனிமையாகும் .

மேலும் தொடர்வோம் நண்பர்களே .

சொல்ல மறந்துட்டேன் இக்கட்டுரை பற்றிய தங்களின் கருத்து வரவேற்க  படுகிறது. கருத்து சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே .

                                                                                                                          உங்கள்
  






Photobucket




படி படி படிச்சிட்டு நீயாவது கருத்து சொல்லுப்பா .

2 comments:

  1. கிடைத்ததை ஏற்றுக்கொண்டு
    அன்போடு வாழப்பழகினால்
    இனிதே அமையும் வாழ்வு
    என்ற உங்கள் கருத்து சரியானது நண்பரே.

    மனம் போல் வாழ்வு..

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி மகேந்திரன் நண்பரே

    மேலும் ஆதரவு தாருங்கள்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே