Sunday, July 3, 2011

கோவையில் நடிகர் கார்த்திசிவகுமார் திருமணம் இன்று நடக்கிறது

கோவை: நடிகர் சிவகுமார்& லட்சுமி தம்பதியின் இளைய மகன் நடிகர் கார்த்தி. ஈரோடு மாவட்டம் பாசூர் அடுத்த குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சின்னுசாமி& ஜோதிமீனாட்சி  மகள் ரஞ்சனி ஆகியோர் திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று காலை 5.45 மணியில் இருந்து 6.45 மணிக்குள் நடக்கிறது. கொடிசியா அரங்கம் மற்றும் திருமண மேடை வண்ண, வண்ண பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 
நடிகர் சிவகுமார் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் திருமண அரங்கு நுழைவாயிலில் நின்று வரவேற்றனர். மேடையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் வரவேற்றனர். உறவினர்கள், நண்பர்கள் திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  


 நடிகர்கள் ராஜேஷ், சத்யராஜ், சிபிராஜ், நடிகைகள் நக்மா, ரோஷினி, இயக்குநர்கள் மனோபாலா, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ், ஆர்.வி. உதயகுமார், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், ஜிவிபிரகாஷ்  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கலால் துறை கமிஷனர் ராஜேந்திரன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியன், கோவை அரசு மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் குமரன், கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், ஆனைமலை ஏஜென்சீஸ் உரிமையாளர் எஸ்.பி. ஆறுமுகம், கீர்த்திலால் உரிமையாளர் சாந்தகுமார், ரூட்ஸ் ராமசாமி, செல்வம் ஏஜென்சீஸ் நந்தகுமார், ஜீடி நாயுடு மகன் கோபால், தமிழ்நாடு தேர்வாணையக்குழு உறுப்பினர் ரத்தினசபாபதி, ஊர்க்காவல் படை கமாண்டர் திருப்பூர் சிவக்குமார், சென்னை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, எழுத்தாளர் தமிழருவி மணியன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், கொ.மு.க தலைவர் பெஸ்ட் ராமசாமி, சூலூர் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  மேலும் படங்கள் 





No comments:

Post a Comment

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே