Tuesday, July 19, 2011

கருவறை குழந்தை கடவுளை கேட்கும்

கர்பப்பையே கல்லறையானது 






கடவுளே
நீ என்னிடம்
என்ன சொல்ல
மறந்தாய்
கருவரையில் இருந்து
பூமியில் கால்  பாதிக்கும்
முன்னே என்னை
திரும்ப அழைத்ததன்
நோக்கம் தான் என்ன ?




அன்பில்லா உலகத்திலே
அடியேன் நான் வாழ
தகுதி இல்லையென்றா ?
உண்மையில்லா
இவ்வுலகிலே உன்னால்
வாழ முடியாது என்றா ?

கடவுளே
நீ என்னிடம் 
என்ன சொல்ல
மறந்தாய்
திரும்ப அழைத்ததன்
நோக்கம் தான் என்ன ?

தன் இனத்தை
தானே அழிக்கும்
கயவர்களும் வாழும்
இவ்வுலகிலே என்னால்
காலம் கடத்த
முடியாது என்பதை
சொல்லவா

சாதிச்சண்டை
மதச்சண்டை
மொழிச்சண்டை
இனச்சண்டை
பதவி சண்டை
என்பது போன்ற
பல்வேறு சண்டையில்
அன்பை தொலைத்து
அதிகாரம் செலுத்தி
வாழும் இவ்வுலகில்
வாழ எனக்கு தெரியாது
என சொல்லவா ?

கடவுளே
நீ என்னிடம்
என்ன சொல்ல
மறந்தாய்
கருவரையில் இருந்து
பூமியில் கால்  பாதிக்கும்
முன்னே என்னை
திரும்ப அழைத்ததன்
நோக்கம் தான் என்ன ?







மீன் : எலேய் யார்டா நீ ?
மாடு :- நானும் உன்ன மாதிரி ட்ரை பண்ணி பார்த்தம்பா 
மீன் :தண்ணியில மூழ்கிடுவடா 
மாடு :-விடு மச்சி பாத்துக்கலாம் 
டால்பின் :- உனக்கு சங்குதாண்டி மாப்ள
மாடு :- ?????????????? 

23 comments:

  1. வாருங்கள் சிபி நண்பரே ,
    அன்பு உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

    ReplyDelete
  2. அருமையான வரி நகர்த்தல் சகோதரா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுதா சகோதரரே

    ReplyDelete
  4. அருமையான சமூக சிந்தனை !ஜோக் அடி பொழி!

    ReplyDelete
  5. நன்றி பாலா

    ReplyDelete
  6. கனக்கவைக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  8. சிந்திக்க வைத்த வரிகள்..

    கருணைக் கடவுளுக்கே கேள்விக் கணை...

    வாழ்த்துக்கள்..



    முத்தான மூன்று
    ( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

    என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  9. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  10. புதிய சிந்தனை!சிறந்த கவிதை!

    ReplyDelete
  11. வாருங்கள் நண்பரே ,எனது தளத்திற்கு வருகை தந்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

    ReplyDelete
  12. அசத்தலான சிந்தனை..
    அருமையான பதிவு..
    நன்றி சகோ..

    ReplyDelete
  13. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருன் சகோ

    ReplyDelete
  14. வித்தியாசமான சிந்தனை
    சீரிய படைப்பு
    தங்கள் பதிவைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

    நட்பை தொடர்வோம்

    ReplyDelete
  16. கவிதை வரிகள் அருமை நண்பா.

    ReplyDelete
  17. நன்றி பிரகாஷ் நண்பரே .

    ReplyDelete
  18. மனதை கனக்க வைக்கும் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாங்க ராம்வி .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ .

    ReplyDelete
  20. அருமையான சொல்லாடல்கள் நண்பரே.
    கருத்தைக் கவர்கிறது.

    ReplyDelete
  21. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  22. hii.. Nice Post

    For latest stills videos visit ..

    www.chicha.in

    www.chicha.in

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே