தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி
இன்று நாம் பார்க்க போவது நிறைய பேருக்கு தெரிந்த
விஷயம் தான் . இருந்தாலும் அதிலுள்ள விசயங்கள்
தெரியாதவர்களுக்காக
நாம் ஓய்வு நேரத்தில் மன சந்தோசத்திர்க்காக சுற்றுலா
தளங்கள் செல்வோம.
தமிழ்நாடு ,இந்தியா ,வெளிநாடு அவரவர் வசதிக்கேற்ற
முறையில் சுற்றுலா செல்வோம் .
நாம் பார்க்க போவது தமிழகத்தின் சில சுற்றுலா தலங்கள்
முதலில் பார்க்க போவது மலை வாசஸ்தலம்
மலை என்று எடுத்துகொண்டால் நிறைய இருக்கு .
அதில் நாம் பார்க்க போவது
கொல்லி மலைஇடம் :-
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது .
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில்
கொல்லிமலை அமைந்துள்ளது
பரப்பளவு :-
சுமார் 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி,
280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய மலைத்தொடராகும்.
பெயர்காரணம் :-
இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும்
மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை
என்ற பெயர் வந்தது.
கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
செல்லும் தடம் (வழி முறை ):-
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம்
மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
குறிப்பு :-
மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை
ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
வரலாறு:-
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,
புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி
மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில்
ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.
ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக்
கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல
பாடல்கள் உள்ளன.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக
குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம்
இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில்
செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும்,
அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய
சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப்
பாவையிடம் வேண்டியதாகவும், அதற்கிணங்கி கொல்லிப்
பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை
விரட்டியதாகவும் பல கதைகள் கூறப்படுகின்றன.
கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு
கோவில் உள்ளது. கொல்லிப் பாவையை இம்மலை வாழ்
மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்
தொடரும் .....
நான் கிளம்பிட்டேன் கொல்லி மலைக்கு ,
நீங்க வரலையா .அப்பிடியே தமிழ்நாட்டை ஒரு ரவுண்டு
சுற்றிப் பார்த்துட்டு வாரேன் .
ஷூ தான் கொஞ்சம் பெருசா போச்சு .
என்ன பண்றது காசு கொடுத்து வாங்கியிருந்தா
கரக்ட் அளவில வாங்கியிருக்கலாம்.
இது சுட்டது தானே ,ஹி ஹி ஹி
முதல் பயணி
ReplyDeleteஅஹா..ஆரம்பமே அசத்தல்
ReplyDeleteகொல்லிமலைபெயர் குறித்த
அனைத்து தகவல்களையும் சொல்லி
பின் அடிவாரத்தில் இருந்து கிளம்புவதிலிருந்தே
படங்களுடன் பதிவை துவக்கி இருப்பது அருமை
நானும் உங்களுடன் கிளம்பிவிட்டேன்
தொடர வாழ்த்துக்கள்
கொல்லிமலை பத்தி இன்னும் தொடருமா ..?தகவல்கள் அருமை.
ReplyDeleteதொடருங்கள்..நானும் வருகிறேன்! :-)
ReplyDeleteநானும் டூர் கிளம்பியாச்சி ......
ReplyDeleteநானும் டூர் கிளம்பியாச்சி ......
ReplyDeleteஅருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteநானும் கூட வரேன் நண்பரே
ReplyDeleteகொஞ்சம் பொறுங்கள்...
நல்லா இருக்கு இப்படிப்பட்ட பதிவு
வாழ்த்துக்கள்.
naan last year kolli hills poyirunthen. nice place
ReplyDeleteவாங்க மாய உலகம் ,வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க ரமணி நண்பரே ,துணைக்கு வரேன்னு சொல்லிட்டிங்க சேர்ந்து சுத்துவோம் .
ReplyDeleteவாங்க கோவை நேரம் ,தளத்திற்கு வரவேற்கிறேன் .
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .
வாங்க ஜீ, தளத்திற்கு வரவேற்கிறேன் .
ReplyDeleteநீங்களும் துணைக்கு வரேன்னு சொல்லிட்டிங்க .
இனி என்ன சந்தோசம் தான் .
ஊரு சுத்த போவோம் வாங்க .
வாங்க பாலா வாங்க ,
ReplyDeleteசேர்ந்து போனா சந்தோசம் தானே .
வாருங்கள் சந்தோசமா சுத்தி பார்த்துட்டு வரலாம்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ராஜேஸ்வரி மேடம்
ReplyDeleteவாருங்கள் மகேந்திரன் நண்பரே ,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .
வாங்க சேர்ந்து போவோம் .
மகிழ்ச்சியுடன் ஊர் சுற்றுவோம் .
வாங்க பிரகாஷ் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி .
போன வருஷம் டூர் போகும்பொழுது ஏன் என்னை கூப்பிட வில்லை நண்பரே .
உங்க பின்னால வாறமாதிரி இருக்கு
ReplyDeleteவாருங்கள் ஹேமா சகோ ..
ReplyDeleteவருகைக்கு நன்றி
உங்களின் இன்ப உலா சிறப்பானது பாராட்டுகள் நன்றி
ReplyDeleteஅருமை. பாராட்டுக்கள்!
ReplyDeleteவாருங்கள் மாலதி ,கீதா சகோ ...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ ..
கொல்லிமலை கேள்வி பட்டிருக்கிறேன் சென்று பார்த்ததில்லை. அழகான படங்களுடன் அருமையான பதிவு. தொடர்ந்து மீதி இடங்களுக்கும் அழைத்துச்செல்லுங்கள்.
ReplyDeleteவாங்க ராம்வி
ReplyDeleteவருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோதரி