Thursday, July 28, 2011

இப்பிடியும் யோசிக்கலாமோ

நண்பர்களே வணக்கம் .தங்களின் தொடர் ஆதரவுக்கும் ,அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


" நண்பர்களே இன்றைய பதிவான இப்பிடியும் யோசிக்கலாமோ யாரையும் புண்படுத்த அல்ல. இது ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே ."

பிழை இருந்தால் பொறுக்கவும்


ஒருவன் :- ஏம்பா இதுக்கு முன்னாடி ஜெராக்ஸ் கடை வச்சிருந்தியா
மற்றொருவன் :- இல்லையே ஏன் கேட்கிறே ?
ஒருவன் :- இல்ல உன் வலைபூவில இருக்கிற பதிவு  எல்லாம்
மற்ற தலத்தில பார்த்திருக்கேன் அதான் கேட்டேன்   
======================================================







அந்நியன் ஸ்டைலில் படிக்கவும்

ஒரு பதிவ திருடுனா தப்பா ?

இல்லீங்க

ஒரு நாளைக்கு ஒரு பதிவு திருடுனா தப்பா ?

லேசா தப்பு மாதிரி தெரியுதுங்கோ

ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தொரோட பதிவிலிருந்து ஒவ்வொரு பதிவா திருடுனா தப்பா ?

தப்பு தாங்க

பின்ன ஏன்டா இந்த தப்ப செய்றீங்க .இந்த தப்ப செஞ்ச உனக்கு கிருமி போசனம் தண்டனை

புரியலேன்களே

உன் ப்லோக்கை வைரஸ் கிருமி தாக்கும்


( ஹி ஹி தமாசு )
============================================




பஞ்சாயத்து கூடியுள்ளது .என்னப்பா பஞ்சாயத்து என்று கேட்டபடியே பஞ்சாயத்து தலைவர் வருகிறார் .

ஒருவர் சொல்கிறார் .நம்ம கடிவேலு அடுத்த ப்லோக்கிலிருந்து
பதிவ திருடிட்டதா பிராது குடுத்திருக்காங்க   .

ஏற்கனவே பதிவுலகத்தில பதிவு திருட்ட பத்தி பல பேர் புலம்பிகிட்டு இருக்காங்க ,இதுல இவன் வேறயா
என்று புலம்பிய படியே பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து ஆரம்பிக்கிறார்  

பஞ்சாயத்து தலைவர் கடிவேலுவை பார்த்து கேட்கிறார்

ஏம்பா திருடினியா ?

என்ன திருடினியா !!!!!

ஏம்பா பதிவ திருடினியா ?

என்ன பதிவ திருடினியா !!

ஏம்பா நான் சரியாத்தானே கேள்வி கேக்குறேன் என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்கிறார் .

அவர்களும் ஆமாம் என்க திரும்பவும் பஞ்சாயத்து தலைவர்
கடிவேலுவை பார்த்து

அடுத்த ப்லாக்கிலிருந்து பதிவ திருடினியா?

என்ன அடுத்த ப்லோக்கிளிருந்து பதிவ திருடினியா


பஞ்சாயத்து தலைவர் தலை தெறிக்க ஓடுகிறார்
==========================================================



பராசக்தி ஸ்டைலில் படிக்கவும்

நீதிபதி   :  உன் மீது சுமத்த பட்ட குற்றத்தை ஒத்துக்கொள்கிறாயா?

கொம்பன் :  பதிவை திருடினேன் ,என் பதிவில் பிரசுரித்தேன், பெயர்  வாங்கினேன் ,விருதுபெற்றேன். 

இப்பிடியெல்லாம் குற்றம் சுமத்தப் பட்டேன் நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் மறுக்க போகிறேன் என்று.

இல்லை மறுக்க போவதில்லை .திருடினேன் ஏன் திருடினேன் .
என்  பிளாஷ் பேக்கை கேளுங்கள் யுவர் ஆனர் .

என் பெயர் கொம்பன் ,கொடூரமான பெயர் .

பிழைக்க ஒரு வழியும் இல்லாமல் பொழுதும் போகாமல் பொழுதை கழிக்க கணினி வழியாக நெட்டை தொட்டேன்.
நெட்டும் என்னை  போடா பொட்டை என்றது.கோபம் வந்தது .
ஆவேசமாக வலைத்தளம் ஒன்றை ஓபன் செய்தேன்.

எதைப் பதிவிடுவது கணினி பற்றியா? ப்ளாக் பற்றியா ? அரசியல் பற்றியா? எதை பதிவிட வேண்டும் .எல்லா விசயத்தையும் அவர்கள் ஏற்கனவே பதிவிட்டு விட்டார்கள் .

முழி பிதுங்கியது ,யோசித்து பார்த்தேன் தலை வலித்தது ,
தேடினேன் தேடினேன் நாள் முழுதும் தேடினேன் வலை உலகத்தின் 
கடைசி வரை தேடினேன் 
.
எல்லாம் பதிவிட்டு விட்டார்கள் .திரும்பி வந்தேன் .இப்பொழுது சொல்லுங்கள் காப்பி அடித்தது என் குற்றமா ? நான் பதிவுலகம் வரும் முன்னே அனைத்தையும் பதிவிட்ட அவர்கள் குற்றமா ?சொல்லுங்கள் யுவர் ஆனர் ?சொல்லுங்கள் ?/

நீதிபதி : முடியல என்னால.. பயபுள்ள எப்பிடி எல்லாம் யோசிக்குது !!!!!!!!!!!!!!!!!!!!
======================================================
நண்பர்களே மேலே உள்ளது சிரிக்க மட்டுமே .

நண்பர்களுக்கு ஓர் செய்தியை கூறிக் கொள்ள ஆசைபடுகிறேன்


பங்கு சந்தை சம்பந்தமாக பகிர்ந்து கொள்ள ஒரு தளம் 
ஆரம்பித்துள்ளேன் .
ஆர்வம உள்ளவர்கள் அந்த தளம் வந்து ஆதரவு தருமாறு அன்புடன் 
கேட்டுக் கொள்கிறேன் 
தளத்தின் முகவரி 

http://pankumarket.blogspot.com/

நன்றி நண்பர்களே
 

44 comments:

  1. பதிவர்களுக்கான காமெடி .... கலக்கல்

    ReplyDelete
  2. ஆம் ரமேஷ் இப்படியும் யோசிக்கலாம், வித்தியாசமாக இருக்கு.

    ReplyDelete
  3. மிக மிகஅருமை
    அந்த அந்த வசன உச்சரிப்போடு
    படித்துப் பார்த்தேன்
    மிக அழகாக பொருந்தி வந்தது
    மீண்டு ம்மீண்டும் படித்து
    குடும்பத்தோடு ரசித்துச் சிரித்தோம்
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இன்னும் சிரிப்பு நிக்கல ரமேஷ்..
    கலக்கல்..

    ReplyDelete
  5. உண்மையில் மிகவும் ரசணையுடன் நகைச்சுவையுடன் இருக்கிறது...

    ReplyDelete
  6. தற்போதை பிரச்சனைகளை வைத்து அதை அப்படியே நகைச்சுவையாக்கிருக்கும் விதம் அருமை..

    பாராட்டுக்கள்....

    ReplyDelete
  7. ரசித்து படித்தேன் நன்றி

    ReplyDelete
  8. வலையகம் said....


    M.R said...
    கண்டிப்பாக இணைக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  9. வாங்க மாய உலகம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. தமிழ் மனத்தில் மூன்றாவது ஓட்டு..உங்கள் ப்லோகிற்கு இது என் முதல் ஒட்டு ...இனி தொர்ந்து வருவேன்

    ReplyDelete
  11. வாங்க ராம்வி சகோ..

    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க ரமணி நண்பரே ,

    தங்களின் சந்தோசமே என் சந்தோசம்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. வாங்க கருன்

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க சௌவுந்தர் ,

    தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. வாருங்கள் ரியாஸ் அஹமது
    தங்களை வரவேற்கிறேன்

    தங்கள் வருகைக்கும், வாக்களிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    தொடர்ந்து வாருங்கள் உள்ளம் மகிழ்வேன்

    ReplyDelete
  16. அன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......

    ReplyDelete
  17. கடி ஜோக் போட்டு கலாய்சுட்டீன்களே, கலாய்ங்க,,,,கலாய்ங்க ,,,,,,,,

    ReplyDelete
  18. ரசிச்சேன்... சிரிச்சேன்....

    ReplyDelete
  19. சிரிக்க வைத்த பதிவு.நன்று.

    ReplyDelete
  20. பங்குச் சந்தை என்பது எனக்கு greek&latin!உங்கள் பதிவைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முயல்வேன்!

    ReplyDelete
  21. பாளையத்து அம்மன் விவேக்கை முந்திட்டீங்க .....தொடர்ந்து காமெடியில் அசத்துங்கள் !

    ReplyDelete
  22. வசன நடையில்
    அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்.
    வாய்விட்டு சிரித்தேன்.
    அருமை அருமை.

    ReplyDelete
  23. காமெடி ரசிக்கதகுந்தவை

    ReplyDelete
  24. கலக்கலா யோசிச்சிருக்கீங்களே...பங்குமார்க்கெட் பத்தி எழுதபோறீங்களா? வர்றேன், ஆதரவு தர்றேன்.

    ReplyDelete
  25. கலக்கல் பதிவு. உலகில் நடக்கும் நகைச்சுவையான உண்மைகளை(பதிவுத் திருடல்:)) அழகாக நகைச்சுவையில் சொல்லிட்டீங்க.(பதிவுகளைத் திருடுவதென்பதும் ஒரு நகைச்சுவையான விஷயம்தானே:)).

    நீதிபதி... கொம்பன் கலக்கல்.

    அழகாக இருக்கு உங்கள் தளம்.

    ReplyDelete
  26. உங்கள் பங்குச் சந்தை பற்றிய பதிவிற்க்கு இப்போதே வாழ்த்துக்கள். தொடரட்டும்....

    ReplyDelete
  27. பதிவுலக காமெடிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. நீங்கள் சொன்னது போன்றே வாசித்துப் பார்த்தேன். சிரிப்பாக இருந்தது. இப்படியெல்லாம் யோசிக்க ஆலேதான் முடியுமோ! ஆனால், உண்மையில் என்னுடைய கவிதை ஒன்று இப்படித்தான் களவாடப்பட்டு சில சொற்களை மட்டும் மாற்றி இல் வந்தது. அதைப் பார்த்த போது அந்த எண்ணமே வந்தது.

    ReplyDelete
  29. மாப்ள கலக்கலான காமடிகள்யா...நன்றி

    ReplyDelete
  30. கலக்கல்... தொடரட்டும் தாரை தப்பட்டைகள் கிழியுமளவுக்கு காமெடி!

    ReplyDelete
  31. எல்லாமே சூப்பர் அதிலும் பராசக்தி வசனம் தூள்

    ReplyDelete
  32. சூப்பர்!பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. வாங்க கார்த்திக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  34. வாங்க பிரகாஷ்
    ரசித்ததற்கு நன்றி

    ReplyDelete
  35. சென்னை பித்தன் said.....

    M.R said....

    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ஐய்யா .

    கூடல் பாலா said....

    M.r said ...
    வாங்க பாலா பாராட்டுக்கு நன்றி பாலா

    சண்முகவேல் said....

    M.R said...
    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி

    மகேந்திரன் said...

    M.R said...
    வாங்க மகேந்திரன் ,
    வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி நண்பரே

    கிராமத்து காக்கை said...

    M.R said...
    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே

    சென்கோவி said...

    M.R said...
    வாங்க செங்கோவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    பங்கு சந்தைக்கும் ஆதரவு தரீங்களா ,தாங்க தாங்க

    அதிரா said....

    M.R said...
    வாருங்கள் ஆதிரா தங்களை வரவேற்கிறேன் .
    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ

    சத்யா said...

    M.R said...
    பாராட்டுக்கு நன்றி சத்யா நண்பரே
    தங்களை வரவேற்கிறேன்

    ராஜேஸ்வரி said....

    M.R said...
    வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி மேடம்

    சந்திரகெளரி said...

    M.R said...
    வாங்க கெளரி ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    விக்கியுலகம் said....

    M.R said...

    வாங்க விக்கி பாராட்டுக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  36. சசிகுமார் said ...

    M.R said

    வாருங்கள் சசிகுமார் நண்பரே

    தங்களை வரவேற்கிறேன் .

    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  37. கவி அழகன் said...

    M.R said...
    வாங்க கவி அழகன் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    கீதா said...

    M.R said...

    வாங்க கீதா

    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  38. சூப்பர இருக்கு, நானும் பதிவுலகத்தை தாக்கி தான் இந்த பதிவை எழுத நினைச்சன். பிறகு எதுக்கு வம்பு எண்டு காமடி ஆக்கிட்டான்,

    ReplyDelete
  39. நீச்சல்காரன் said...
    தூள்!:)

    நன்றி நண்பரே

    ReplyDelete
  40. KANA VARO said...
    சூப்பர இருக்கு, நானும் பதிவுலகத்தை தாக்கி தான் இந்த பதிவை எழுத நினைச்சன். பிறகு எதுக்கு வம்பு எண்டு காமடி ஆக்கிட்டான்,

    அதான் சேப்டி நண்பரே

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே