உரல் நிக்குது
குழவி சுத்துது
அந்த காலம்
அது
அந்தகாலம்
குழவி நிக்குது
உரல் சுத்துது
இந்த காலம்
இது
இந்த காலம்
(கிரைண்டர்)
ஏணி மேல தான்
ஏறி செல்லனும்
அந்த காலம்
அது
அந்தகாலம்
ஏணியே கீழே வந்து
நம்மள கொண்டு செல்லுது
இந்த காலம்
இது
இந்த காலம்
(லிப்ட்)
தகவலை தெரிவிக்க
வாரம் பத்துநாள்
ஆகுமே
அந்த காலம்
அது
அந்தகாலம்
நொடியிலே எல்லாம்
முடிஞ்சி போகுதே
இந்த காலம்
இது
இந்த காலம்
(மெயில் ,அலை பேசி)
தமாசுக்காரன் ......
போதும் போதும் நிறுத்துப்பா ,
சும்மா அந்த காலம் ,இந்த காலம்
சொல்லாம வேற எதுனா சொல்லுப்பா
சரிங்க தமாசு காரரே
ஜோசியம்
நீ எதிர்பார்க்காத
பணவரவு உண்டு
ஆனால்...
திடீர் செலவும்
உண்டு.
துணிந்து எக்காரியமும் செய் ,
ஆனால் ...
புதிய முயற்சி ஏதும்
செய்யாதே
தூரப்பயணம் உண்டு
ஆனால் ....
வாகனத்தால் ஆபத்து
உறவினர்களால் உங்களுக்கு
ஆதாயம்
சொந்த காரர்களால் உங்களுக்கு
தொந்தரவு
தமாசுக்காரன்......
எலே நிறுத்துலே
நீ இப்ப என்ன சொல்ல வர
ஐய்யா தமாசுகாரரே
நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை
கை ரேகை பார்த்து வாழ்பவனை விட
கை ரேகை தேய உழைப்பவனே உயர்வான்
என்று சொல்ல வந்தேங்க
தமாசுக்காரன் ...
சரி சரி வேற எதுனா சொல்லு
சரிங்க தமாசுக்காரரே .
மாமியார்
மருமகளை பார்த்து
பரிதாப படுகிறாள்
மருமகள்
மாமியார பார்த்து
பரிதாப படுகிறாள்
டி வி நாடகத்தை பார்த்து
( மாமியார் டி வி யில்
வரும் மருமகளை பார்த்து ,
மருமகள் டி வி யில்
வரும் மாமியாரை பார்த்து )
நிஜத்தில் ??????????
தமாசுக்காரன் ...
தம்பி போதும்பா
நீளமா இருக்கிற பாதையிலே நடக்க கஷ்டம்
நீளமா இருக்கிற பதிவை படிக்க கஷ்டம்
இதோட இத முடிச்சிக்கோ
சரி தமாசுக்காரரே .
நண்பர்களே இது பிடித்திருந்தால்
கருத்து தெரிவிக்கவும் .
பிடித்திருந்தால் ஒட்டு போடவும்
மீண்டும் சொல்கிறேன் யாரையும் புண்படுத்த இதனை போட வில்லை .
உங்கள் நண்பன்
அசத்தல்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வேடந்தாங்கல் -கருன் நண்பரே
ReplyDeleteஇருக்கு ஆனா இல்லை
ReplyDeleteவரும் ஆனா வராது
நல்ல கருத்துக்களை
ReplyDeleteபோகிற போக்கில் சொல்லும் விதம் அருமை.
Niroo said...
ReplyDeleteஇருக்கு ஆனா இல்லை
வரும் ஆனா வராது
புரிந்து கொண்டதற்கு நன்றி சகோ...
மகேந்திரன் said...
ReplyDeleteநல்ல கருத்துக்களை
போகிற போக்கில் சொல்லும் விதம் அருமை.
நன்றி நண்பா நன்றி
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete