Monday, August 8, 2011

செய்தியும் தமாசுக்காரனும்


எல்லாருக்கும் வணக்கமுங்கோ 
நாந்தான் தமாசுக்காரன்,நான் ஏற்கனவே ஒரு பதிவுக்கு வந்திருக்கேன் . .

இனி தொடர்ந்து வரலாம்னு இருக்கேன் .நான் சொன்ன கமன்ட் -ல உங்களுக்கு எதுனா பிடிக்கலனா என்ன மன்னுச்சுடுங்கோ
 . 
செய்தி :
மனித ஆயுளை சுமார் பத்து ஆண்டுகள் நீட்டிக்க 
அமெரிக்காவில் மருந்து கண்டு பிடிப்பு


பண முதலை  : ஆகா நாம சுருட்டிய பணத்தை இன்னும் 
கூடுதலாக பத்து ஆண்டுகள் ஆண்டு அனுபவிக்கலாம் .

ஏழை :
 ஆமா இருக்கிற ஆயுளையே சமாளிக்க முடியவில்லை .இதுல
 இன்னும் பத்து ஆண்டுகளா .

ஆ...வாதி :
அந்த பத்து ஆண்டுகளும் எங்கள் ஆட்சியே ஆளும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

தமாசுக்காரன் :
ஹுக்கும் ...கிழிஞ்சது பொழப்பு

செய்தி :
மலட்டு தன்மை நோயை போக்க செயற்கை விந்தணு 
தயாரிப்பு ,விஞ்ஞானிகள் சாதனை

தமாசுக்காரன் :-
 பரவாயில்லையே வெரி குட்..வெரி குட்

செய்தி :
காதல் இப்பொழுது பள்ளிகளிலேயே ஆரம்பித்து விட்டது .பள்ளிக் குழைந்தைகள் இப்பொழுது கர்ப்பம் ஆகிறார்கள்

தமாசுக்காரன் :
என்ன கண்றாவியா இது ! பள்ளிக் குழந்தை என்பது பதப் படுத்தப் பட்ட மண் போல ,அதில் ஆரோக்கியமான விசயங்களை அல்லவா விதைக்க வேண்டும். ஹும்....கொடுமையா இருக்கு

செய்தி :
மன அழுத்தத்தால் தோல் நோய் ஏற்படும்.மன அழுத்தம் , ,விரக்தி தோல்நோய் மூன்றுக்கும் தொடர்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள்  கண்டுபிடித்துள்ளனர்

தமாசுக்காரன் :
அப்பிடின்னா நிறைய பேருக்கு தோல் நோய் வரும்னு சொல்லுங்க .
இப்பத்தான் ஓட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி போல எல்லாரும் கூடவே மன அழுத்தத்தை தூக்கிட்டு ஆலையராங்களே .
 

நம்ம ஆளு மனம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும் கட்டுரையை ரெடி பண்ணிக் கொண்டு இருக்காரு .அவரு வர வரைக்கும் நான் உங்களோட கொஞ்சம் பேசிகிட்டு இருக்கலாம்னு தான் நான் படிச்ச நியூஸ உங்ககிட்ட சொல்ல வந்தேன் .சரி நான் வரட்டுங்க்களா .


போகும் பொழுது ஏதாவது ஒன்னு சொல்லிட்டு போகணுமே ஆங்...


எல்லாரும் என்ன மாதிரி சிரிச்சுகிட்டே இருங்க 


டாட்டா பை பை 


23 comments:

  1. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

    ReplyDelete
  2. தமாசு காரன் கலக்கிட்டான் !

    ReplyDelete
  3. தமாசுக்காரன் சும்மா கலக்குறாரு
    நகையூட்டியதற்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  4. ஒவ்வோர் செய்திகளுக்கும் ஏற்றாற் போல சமயோசிதமான காமெடிக் கமெண்டுகளைப் போட்டிருக்கிறீங்க.
    ரசித்தேன்...சிரித்தேன்.

    ReplyDelete
  5. ஒரே சிரிப்பு தான் போங்க!

    ReplyDelete
  6. செய்தியும் அதற்கான கமெண்டும் பிரமாதம்
    மெயின் பார்ட்டுக்கு முன்னால்
    பபூனை அனுப்பி இருக்கிறீர்கள்
    எனத் தெரிகிறது
    மெயின் பார்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
  7. வாங்க கருன்

    ரசித்து சிரித்ததற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. வாங்க பாலா நண்பரே வருகைக்கு நன்றி

    இன்னும் கலக்க விடுவோம்

    ReplyDelete
  9. வாங்க ரியாஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  10. வாங்க மகேந்திரன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  11. வாங்க நிரூபன் நண்பரே

    வருகைக்கும் ரசிப்புக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  12. வாங்க கோகுல்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  13. வாங்க ரமணி நண்பரே

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  14. படங்களும்பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. வாங்க மேடம்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. சிரிப்பு- நோய்க்கு மருந்து.

    ReplyDelete
  17. பல்சுவை செய்திகள் - மற்றும் கமென்ட்ஸ்! :-)

    ReplyDelete
  18. தமாஸ் ரமேஸ் ...

    ReplyDelete
  19. ஆஹா அருமை... செய்தியும் தமாசும்.. நன்றி

    ReplyDelete
  20. தமாசுகாரன் சிரிக்க,சிந்திக்க வைக்கிரார். தொடர்ந்து வரட்டும்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே