Friday, August 12, 2011

மாதம் இருமுறை தாம்பத்யம்

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க

நம் உடலில் முக்கியமாக இரண்டை பார்க்க வேண்டும் .
இரத்தம் ,நிணநீர் இவை இரண்டும் உயிர்திரவங்கள் ஆகும் 
.
இந்த இரண்டும் சுத்தமாக இருக்கும் வரை நோய் தாக்காது .
இவை இரண்டும் கெட்டு போனால் ஆரோக்கியம் பாதிக்கிறது.

இவை இரண்டையும் சுத்த படுத்தும் பொழுது நோய் விலகுகிறது 
.
பீடி ,சிகரெட் ,மதுவகைகள் ,அதிக அளவில் டீ,காபி போன்ற 
பழக்க வழக்கங்கள் ,தவறான உடல் உறவுகள் இவைகளால்
இரத்தமும் ,நிணநீரும் கெட்டுபோகின்றன .

இதனால் வியாதிகள் ஆரம்பமாகிறது .

சரி ஆரோக்கியத்தை பாது காக்க என்ன செய்ய வேண்டும்

இதோ டிப்ஸ் :

காலையில் இஞ்சி சாறு குடிக்கவும் .

மத்தியானம் அரைக் கரண்டி சுக்கு பொடியை 
உணவுடன் சாப்பிடவும் .
(சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது முதலில் ஒரு பிடி 
சாதத்துடன் சுக்கு பொடியை சேர்த்து பிசைந்து 
விழுங்கி விட வேண்டும் )

வாரத்திற்கு இரு முறை எண்ணை குளியல் வேண்டும் 
.
[ ஒரு பழமொழி இருக்கு கட்டாயம் சனி நீராடு என்று ,
நம்மாளுங்க கேட்பாங்க அப்ப மத்த நாளில் குளிக்க 
வேண்டாமா என்று ? சனி நீராடு என்றால் சனிக்கிழமை
கட்டாயம் எண்ணை தேய்த்து (ஆயில் மசாஜ் )குளிக்க 
வேண்டும் .]

இப்பிடி எண்ணை குளியல் செய்தால் என்ன பலன்கள் 
கிடைக்கும் 

இரத்த ஓட்டம் சீராகும் 

உடல் உஷ்ணம் குறையும் ,

உடல் வலி தீரும் ,

கண்பார்வை அதிகரிக்கும் .

உயர் இரத்த அழுத்தம் குறையும்,

மன அழுத்தம் தீரும் ,

ஆயுள் அதிகரிக்கும்

எண்ணை குளியல் செய்ய வேண்டிய நாட்கள்

ஆண்கள்

புதன் கிழமை ,சனிக்கிழமை

பெண்கள்

செவ்வாய் கிழமை ,வெள்ளி கிழமை

எண்ணை குளியல் செய்யும் முறை:

நல்லெண்ணையில் இஞ்சி ,பூண்டு ,சீரகம் ,கொத்துமல்லி
ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து இலேசாக சூடு 
படுத்த வேண்டும் .

பின்னர் ஆறிய பிறகு உச்சந்தலை முதல் உள்ளங்கால் 
வரை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும் .

அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும் .சோப்பு
போடக்கூடாது .

சீயக்காய் பொடியை தேய்த்து குளிக்க வேண்டும் .இளம்
வெந்நீரிலேயே குளிக்க வேண்டும் .

டிஸ்கி :

எண்ணை குளியல் அன்று குளிர்ந்த பொருள் எடுத்துக்
கொள்ள வேண்டாம் .தாம்பத்யம் வேண்டாம் .


இரண்டு முறை செய்தால் ஆரோக்கியம் உறுதி

தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்

வாரம் இரண்டு முறை எண்ணை குளியல் எடுக்க வேண்டும்

மாதம் இருமுறை ( மட்டுமே ) தாம்பத்யம்

வருடத்திற்கு ( குறைந்தது )இருமுறையாவது வயிற்றை
க்ளீன் செய்ய வேண்டும்

இதனை கடை பிடியுங்கள்
உடலை பாது காத்துக் கொள்ளுங்கள்

தமாசுக்காரன் :
ஒன்னு சொல்ல மறந்துட்டியேப்பா
எம் ஆர் :
என்ன :
தினமும் இரண்டு ஒட்டாவது போட வேண்டும்
எம் ஆர் :
அடடே ஆமாம் ,
தினமும் இரண்டு ஒட்டாவது போட வேண்டும்
ஹி ஹி ஹி
 

31 comments:

  1. முதல் முறை எனக்கே!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி செங்கோவி நண்பரே

    ReplyDelete
  3. ஒன்னு - த்ரிஷா

    இரண்டு - அனுஷ்கா

    ரைட்டு..ரைட்டுய்யா ரைட்டு!

    ReplyDelete
  4. தினம் இரண்டு ஓட்டு தான் போடணும்னு சொல்லாம விவரமா இரண்டு ஓட்டாவதுன்னு சொல்லிட்டீங்களே..போட்டாச்சு..

    ReplyDelete
  5. வாக்குக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான ஆரோக்கிய டிப்ஸ் ...நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு
    அதுவும் இரண்டு முறை விஷயம்
    சுருக்கமாகவும் நிறைவாகவும் இருந்தது
    பின்னூட்டம் கூட போடாது போவேனே ஒழிய
    ஓட்டுப்போடாமல் இருக்க மாட்டேன்
    இது பதிவுலக ஜன நாயக கடமையல்லவா
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நல்ல பிரயோசனமான பதிவு.. அனைவரும் படிக்க வேண்டியது

    ReplyDelete
  9. //வாரத்துக்கு இருமுறை எண்ணை குளியல் வேண்டும்//

    ஆமாங்க நான் வாரத்துக்கு இருமுறைதான் குளிக்கிறன் ஹி ஹி

    ReplyDelete
  10. வாங்க மாய உலகம்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  11. வாங்க ரமணி நண்பரே
    தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் ,வாக்குக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  12. வாங்க மதுரன் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  13. உடல்நலத்தை பேணும் நல்ல பகிர்வுகள்..
    நன்றி doctor ஆலோசனைகளுக்கு..hahaa
    பதிவுக்கு நன்றி சகோ
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. வாங்க விடிவெள்ளி

    தங்களது ஹாஸ்யமான கருத்துக்கு நன்றி சகோ...

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  15. மருத்துவ ஆலோசனைகள்
    நல்லா உபயோகமா இருக்கு நண்பரே...

    ReplyDelete
  16. ட்ரை பண்ணி பார்க்கிறேன் !

    ReplyDelete
  17. ரெண்டு ஒட்டு போட்டாச்சு நண்பா

    ReplyDelete
  18. ஒன்றுக்கொன்று மாறி விடப்போகிறது!

    ReplyDelete
  19. வாங்க மகேந்திரன்
    தங்கள் வருகைக்கும் அனுசரணையான கருத்துக்கும் நன்றி நண்பரே .

    ReplyDelete
  20. வாங்க பாலா முயற்சி பண்ணுங்க நண்பரே

    ReplyDelete
  21. வாங்க கார்த்தி
    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  22. வாங்க சென்னை பித்தன் ஐய்யா

    தங்கள் வருகைக்கு நன்றி .

    நன்றாக சொன்னீர்கள் ஐய்யா ,மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  23. ரெண்டு ரெண்டா மனுஷ வாழ்கையை பிரிச்சுக்க சொல்றீங்க!ஓகே

    ReplyDelete
  24. ஆரோக்கியமான பதிவு
    அவசியமான பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    என் வலைப் பக்கம் வரலாமே!

    ReplyDelete
  25. வாங்க கோகுல்
    வருகைக்கு நன்றி
    எல்லாமே ரெண்டு தானுங்களே

    பிறப்பு ,இறப்பு
    பகல் ,இரவு
    துக்கம் ,சந்தோசம்
    இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாமே

    ReplyDelete
  26. வாங்க ராமானுஜம் ஐய்யா
    தங்களை வரவேற்கிறேன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐய்யா

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  27. எல்லதாத்தையும் படிச்சிட்டு 4 ஓட்டு போட்டுட்டேன்...

    ReplyDelete
  28. வாங்க சௌந்தர்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  29. வாங்க செந்தில் குமார்

    தங்கள் நகைப்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே