முந்தய ஒரு பதிவில் நாம் உண்ணும் உணவில்
உள்ள கலோரிகளைப் பற்றித் தெரிஞ்சுகிட்டோம்.
பிறகு பழங்களின் வகைகளும் அதன் பலன்களும்
தெரிஞ்சுகிட்டோம்.
இப்பொழுது நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும்
காய்கறிகளும் அதனுள் உள்ள சத்துக்களையும்
தெரிந்து கொள்வோம்.
என்னடா இவன் இப்பிடியே பதிவு போடுரானே
என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே .
இந்த அவசர உலகத்திலே நாம் வெந்தும் வேகாததுமாக
அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறோம்.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் .
நீங்க ஆரோக்கியமாக இருந்தால் தானே உழைக்க
முடியும் .பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.
அதற்கு நம் உடலில் எனர்ஜி அதாங்க சத்து வேணும் இல்லையா.
நீங்க சாப்பிட உட்காரும்பொழுது காய்கறிகளோ ,பழங்களோ
சாப்பிடும்பொழுது இந்த பதிவ கொஞ்சமேனும் நினைவு வராதா .
சரி நட்புகளே சொல்ல வந்தத சொல்லாம வேற என்னமோ
சொல்றியேன்னு முனுமுனுப்பது கேட்கிறது.
இதோ தொடங்கிவிட்டேன்.முதலில் பாக்கியராஜிற்கு
பிடித்த கையிலிருந்து ஆறம்பிப்போம் .
(ஏன் அவருக்கு மட்டும் தான் பிடிக்குமா எங்களுக்கு பிடிக்காதா
என்று கேட்காதீர்கள் )
முருங்கைக்காய் :
ஆண்மையை தூண்டும். விந்துவை பெருக்கும் .உடல்
எடையை குறைக்கும் .
எலும்பு வலுப்பெறும். பல் ஈறுகளுக்கு உறுதியளிக்கும் .மலம்
இளக்கும். விதைப் பொடியைப் பாலில் கலந்து அருந்தினால்
ஆண்மை அதிகமாகும்
கத்திரிக்காய் :
கத்திரி பிஞ்சு வாத நோயை அகற்றும் .மலத்தை இளக்கும்.
சளி நீங்கும் .சொறி ,சிரங்கு ,புண்ணுக்கு ஆகாது .
அவரைக்காய் :
அவரைப் பிஞ்சு உடலைக் குறைக்க வைக்கும் .மூட்டுவலி,
வீக்கத்தை போக்கும் .மலச்சிக்கலை நீக்கும்.
ஆண்மையை வளர்க்கும்.மலட்டை நீக்கும் .
எலும்புகளை வலுப்படுத்தும். எளிதில் ஜீரணமாகும் .
வெண்டைக்காய் :
மூளை வளர்ச்சியை தூண்டும் .மலத்தை இளக்கும் .
அடிக்கடி உண்டால் பேதி உண்டாகும். வாதத்தை
அதிகப்படுத்தும். அதனால் வாத நோயாளிகளுக்கு ஆகாது
வெள்ளரிக்காய் :
வெள்ளரிப் பிஞ்சு உடல் நலத்திற்கு ஏற்றது .தாகம் தணிக்கும்.
வயிற்று நோய் தீர்க்கும் .சளி குறையும் .இருமல் அடங்கும்.
தொண்டைப் புண் , இரத்த மூலம் குணமாகும் .உடல் வனப்பு பெறும்.
புடலங்காய் :
கண்பார்வைக்கு நல்லது . முடி வளரும் .விந்து ஊரும்.
வாத நோய் ,சூலை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது .
என்ன பாக்கிறீங்க காய்கறி பலன் பதிவு இன்னும் வளரும்
என்பதைத் தான் இப்பிடி சிம்பாலிக்கா சொல்லுறேன் ஹி ஹி
arumaiyaana pathivu.. anaivarum therinthuk kolla vendiyathu .. vaalththukkal
ReplyDeleteமீண்டும் தொடரும் என்று சிம்பாலிக்காக சொன்னதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்புத்தான். நல்ல பதிவு. பயனடையட்டும் பார்ப்பவர்கள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்
அடடா... என்னா ஒரு அழகான பதிவு... ஊர் மரக்கறிகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கே.
ReplyDeleteசாப்பிடும்போது, இந்த ஞாபகம் வராதா எனக் கேட்டு, வடிவேல் அங்கிளுக்கு சோடாக் குடிக்கும்போது வரும் ஞாபகத்தை ஞாபகப்படுத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)).
கடேஏஏஏஏசிப் படம் பார்த்ததும், காய்கறி சாப்பிடும் ஆசை போயே போச்ச்ச்ச்ச்ச்ச்:)).
ReplyDeleteபிறகு எமக்கும் உப்பூடிக் கால், வால் நீண்டு போயிட்டால் என்ன செய்வது அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
சூப்பரு...
ReplyDeleteதமிழ் மணம் ௨
ReplyDeleteகாய்கறி பதிவு கலக்கல்
ReplyDeleteகடைசியில் போட்டு இருக்கிற சிம்பாலிக் ஷாட் படமும், சூப்பர்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பயனுள்ள குறிப்புகள்!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு. மார்க்கெட்டில் சுமாராக 20 வகைகளில்தான் காய்கறிகள் கிடைக்கின்றன.
ReplyDeleteஉண்மையிலேயே காய்கறிகளின் பல நன்மை தீமைகளை அறிந்து கொண்டேன்...
ReplyDeleteபகிர்வுக்கு பாராட்டுக்கள்..\
தமிழ்மணம் 6
ReplyDeleteகாய்கறிகள் பற்றிய பதிவு நல்லா இருக்கு நண்பரே.
ReplyDeleteபடங்களை பார்த்ததும் இப்பவே உட்கார்ந்து சாப்டனும் போல இருக்கு.
சந்தைக்கு போனா விலைவாசிய நினைச்சாதான் இப்பவே
கண்ணை கட்டுது...
ஆக்கமிகு பதிவு நண்பரே.
வெறி சாரி எனக்கு மரக்கறி எண்டாலே அலேர்ஜிக் ஹிஹி
ReplyDeleteசத்தான பதிவு !
ReplyDelete\\\\\\மைந்தன் சிவா said... வெறி சாரி எனக்கு மரக்கறி எண்டாலே அலேர்ஜிக் ஹிஹி\\\\\\\ அப்படீன்னா ஓடுறது ,நடக்கிறது ,பறக்கிறது எல்லாத்துக்கும் மாப்ளகிட்ட போனா ஆபத்துதான் .....
ReplyDeleteபழங்களைத்தொடர்ந்து காய்கறிகள் அசத்துங்க!
ReplyDeleteஉபயோகமான பதிவு
ReplyDeleteபடங்கள் பளிச்
தமிழ்மனம் 11
தொடருங்கள் ...வாழ்த்துக்கள்.
ReplyDeleteபழம் முடிஞ்சு காயா..நல்லது.
ReplyDeleteபழம் முடிஞ்சு காயா..நல்லது.
ReplyDeleteபழங்களின் பதிவு போலவே காய்கறிகளின் பதிவும் நல்லாவும் இருக்கு. உபயோகமாவும் இருக்கு. சின்ன சந்தேகம். சொறி சிரங்கு இருந்தா
ReplyDeleteகத்தரிக்கா சாப்பிடக்கூடாதுன்னு வீட்டு
பெரியவங்க சொல்வாங்க்ளே.
நல்ல பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகடைசியில் போட்டுள்ள படம் நன்றாக இருக்கு.
நல்ல பதிவு.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு..
ReplyDeleteபயனுள்ள பதிவு!
ReplyDeleteஆகா அருமையான புகைப்படங்களுடன்கூடிய அருமையான
ReplyDeleteபகிர்வு .மிக்க நன்றி சார் . கருத்துப்போட்டுக் கையுளையுது
பசிவேற .அந்தப் பூனைக்குட்டி மனசக் குடையுது நான் போயிற்று
வாறன் .நம்ம கடைக்கும் போய்ப் பாருங்க .
நண்பர் சரவணன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=================================
சகோதரி கோவைகவி அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
===============================
சகோதரி ஆதிரா அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கவலைப் படாதீங்க கை கால் நீளாது பதிவு தான் நீளும் (தொடரும்) ஹா ஹா
===========================
நண்பர் பிரகாஷ் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=============================
மாய உலகம் சகோதரன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
============================
சகோதரி சித்ரா அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
==============================
நண்பர் விக்கி அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சகோதரிகள் சாகம்பரி ,விடிவெள்ளி அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்
ReplyDelete================================
நண்பர்கள் மகேந்திரன், மைந்தன் சிவா,
ரியாஸ்,பாலா,செங்கோவி,ராஜ சேகர்,கோகுல்,அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் நன்றி
லக்ஷ்மி அம்மா அவர்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete=======================
சகோதரி ராம்வி அவர்கள் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி
=========================
ரத்னவேல் ஐயா அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=========================
நண்பர் கருன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDelete==========================
சகோ ஷீ நிஷி அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
=========================
சகோதரி அம்பாளடியாள் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
===============================
வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
ReplyDeleteபழங்களைத்தொடர்ந்து காய் அசத்துங்க...AO..Agri Officer -:)
ReplyDeleteகாய்கறிகள் நல்லதுதான்......
ReplyDeleteவாங்க ரெவரி நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ராமசாமி நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பிர்க்கும் நன்றி
காய்கறி படங்கள் பிரமாதம்.
ReplyDeleteஅதன் பயன்கள் அருமை.
சாப்பிடும் சாப்பாட்டில் காய்கறி சேர்ப்பதால் கிடைக்கும் பயன்களை அருமையாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி பாஸ்..
ஆமா...அந்தக் கடைசிப் படத்தில் உள்ளவங்க போல நாமளும் ஆகிடுவோமா?