Friday, August 26, 2011

தத்துவம் வாழ்வின் மகத்துவம்

யதார்த்தமான தத்துவங்கள்


கோபத்தை கட்டு படுத்துவது உண்மையான வீரம்

பிறர் குறையை பார்க்கிறவன் தன் குறையை உணரமாட்டான்

முயலின் வெற்றி அதன் கால்களில் ,மனிதனின் வெற்றி
அவன் தன்னம்பிக்கையில்





சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும்

ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட இதய கனிவால்
சாதிக்க முடியும்

பேசுகிறவன் விதைக்கிறான் ,கேட்பவன் அறுவடை செய்கிறான்



நிதானத்தை கடைபிடி ,அதுவே வெற்றியின் முதல்படி

சிக்கனமும் சேமிப்பும் வாழ்வின் தரத்தை உயர்த்தம்

அறிவால் உழைப்பவர்கள் ஆளுகின்றனர் ,
உடலால் உழைப்பவர்கள் ஆளப் படுகின்றனர்



கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக்கொள்

விடாமுயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக் கொள்

சுறுசுறுப்பை எறும்பிடம் கற்றுக்கொள்




மனதை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்

அமைதியாக ஓடும் நீர் ஆழமாக இருக்கும்

மெதுவாக சிந்தனை செய் ,விரைவாக செயல்படு











zwani.com myspace graphic comments



பூனை : - தத்துவம் புரிஞ்சுதா புரிஞ்சுதா சொல்லு நண்பா
                 புரிஞ்சுதா வெரிகுட் வெரிகுட் சமத்து பயல்
கோ.கு :-புரிஞ்சுதா புரிஞ்சுதான்னு ரொம்ப நேரமா தலையில
                  தட்டரானே யாராவது வந்து காப்பாத்துங்களேன்



டிஸ்கி :- 


இதுவரையான எனது பதிவுகளுக்கு வாக்களித்தும் 
பின்னூட்டமிட்டும் என்னை ஊக்குவித்த அன்பான 
உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி 


டிஸ்கி 2:-


இன்று பங்கு தளத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் முறைகள்


படித்து விட்டீற்களா !
http://pankumarket.blogspot.com/2011/08/blog-post_26.html

32 comments:

  1. தத்துவம் அருமை ... வடை கிடை த்துவிட்டது....

    ReplyDelete
  2. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  3. தத்துவப்பதிவுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. நல்ல தத்துவங்கள்.
    படங்கள் மிக அழகாக உள்ளன. அதிலும் அந்த மரத்தின் படம்.. அப்படி ஒரு மரத்தை நான் பார்த்ததே இல்லை. ரொம்ப அற்புதமா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. தத்துவம் நல்லா இருந்துச்சு. படங்கள், அதை விட நல்லா இருந்துச்சு. :-)))

    ReplyDelete
  6. தலைப்புக்கேதத்பதிவு. படங்கல் நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. நண்பர் ராஜசேகர் அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ==============================

    சகோதரி ராம்வி அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    =============================

    சகோதரி சித்ரா அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ==============================

    லக்ஷ்மி அம்மா அவர்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. வாங்க பாலா தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  9. அனைத்தும் தேவையான தத்துவங்கள்..

    ReplyDelete
  10. வாங்க கருன் நண்பரே தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. தத்துவத் துணுக்குகள்
    சித்திரமாய் இருந்தது நண்பரே.
    அருமை.

    ReplyDelete
  12. நண்பர் மகேந்திரன் அவர்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய தத்துவங்கள்..

    அருமை!!

    ReplyDelete
  14. அறிவு - ஆளுமை
    உடல் - ஆளப்படுதல்

    குறித்த தத்துவம் எனக்கு மிகவும் பிடித்தது நண்ரே.

    ReplyDelete
  15. நண்பர் குணசீலன் அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. நல்ல தத்துவப் பதிவு.

    ReplyDelete
  17. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி செங்கோவி நண்பரே

    ReplyDelete
  18. நல்ல தத்துவங்கள்..

    அருமை!!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. தத்துவம் முற்றும்
    மகதத்துவம் பெற்றும்
    சத்துவ வடிவென
    சரித்திர முடிவென
    ஒத்திடப் போமே
    உணர்ந்திடுன் ஆமே
    முத்தென நன்றாய்
    மொழிந்தீர் ஒன்றாய்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. வாங்க ராமானுஜம் ஐயா தங்கள் கவித்துவமான கருத்திற்கு கனிவான நன்றி

    ReplyDelete
  21. வாங்க சென்னை பித்தன் ஐயா தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. நல்ல தத்துவங்கள்...
    பகிர்வுக்கு நன்றி...Ramesh...

    ReplyDelete
  23. வாங்க ரெவரி நண்பரே

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. அனைத்துத் தத்துவங்களும் சூப்பர்.

    அதிலும் பூனை + குருவி? டோக் சூப்பரோ சூப்பர்:)).

    இருந்தாலும் தாராக்குஞ்சு துப்பாக்கியோடு ரமேஸைத் தேடுவதாக எஸ் எம் எஸ் தகவல் பரவுது... தான் ஒரு கவுரவமான தாராக் குடும்பத்தைச் சேர்ந்தவர், தன்னைப் போய் குருவி எனச் சொல்லி விட்டீங்களாம்...:))).

    ReplyDelete
  25. ஆகா இந்தப் பூனைக் குட்டியையும் கோழிக் குஞ்சையும்
    எப்புடி அமுக்கீட்டுப் போகலாம்!.....அருமையான படங்களும்
    தத்துவங்களும் .நன்றி சகோ பகிர்வுக்கு ....ஓட்டுப் போட்டாச்சு .
    எங்களையும் கவனியுங்க .

    ReplyDelete
  26. பேசுபவன் விதைக்கிறான் கேட்பவன் அறுவடை செய்கிறான்!
    நல்லாருக்குங்க!

    ReplyDelete
  27. எனது அன்பு சகோதரி ஆதிரா அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    =================================

    சகோதரி அம்பாளடியாள் அவர்கள்

    வருகைக்கும் அன்பிற்கும் நன்றி

    ===============================

    நண்பர் கோகுல் அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  28. வாழ்க்கையில் மேம்படுவதற்கேற்ற அருமையான தத்துவங்களைச் சொல்லியிருக்கிறீங்க.
    மிக்க நன்றி சகோதரா.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே