Friday, August 5, 2011

எரிச்சல் படுத்தாதீர்கள்



நண்பர்களே வணக்கம் 

நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம் .
மற்றவர்களுக்குஎரிச்சல் தருவது போல்(irritating )
சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள் .

இதனால் சம்மந்த பட்டவர் பாதிப்படைவாரே 
என்று சிறிதும் நினைக்க மாட்டார்கள் .

சம்மந்தமே இல்லாமல் சிரிப்பார்கள் ,அப்பிடியே
அவர்கள் வாயிலேயே குத்தலாம் போல இருக்கும் .


நிறைய இடத்துல பாத்திருக்கலாம் பேருந்து ,பொது
இடம், விசேசம் நடக்கும் இடத்தில் இப்பிடி நிறைய
இடங்களை சொல்லலாம் .

மற்றவர்களை விடுங்கள் இனி நாம் யாரையும் புண்
படுத்தும் படியோ(irritating )எரிச்சல் படுத்தும் படியோ 
நடந்து கொள்ள வேண்டாம் 

இதனால் பகைமை தான் வளரும் .
அனைவரையும் அன்பால் அரவணைப்போமே 

இதோ இந்த காணொளியை காணுங்கள் 

ஒரு ஆரஞ்சு பழம் ஆப்பிளை எப்பிடி(irritating) எரிச்சல்
 படுத்துது பாருங்களேன் 





பாத்துட்டு ஆரஞ்சுக்கு புத்திமதி சொல்லி விட்டு 
போங்கள் புத்தி சொல்ல நேரம் இல்லை என்றால்
கீழே வாக்குபெட்டியில் வாக்களித்து விட்டு போங்கள் .

நான் பார்த்து கொள்கிறேன் இந்த ஆரஞ்சு பழத்தை .
 

21 comments:

  1. அருமையான படைப்பு
    வாய் திறந்தால் மூடாமல் பேசக்கூடிய
    பல பேர் இருக்காங்க
    ஐயோ மாட்டிகிட்டோமே என்று இருக்கும் .
    அன்பு ஒன்றே ஒற்றுமையைப் பலப்படுத்தும் என்று
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் .
    அருமை அருமை

    ReplyDelete
  2. வாங்க மகேந்திரன்
    வருகைக்கு நன்றி
    தங்களின் ஆழமான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. அன்பு ஒன்றே அனைத்தையும் சாதிக்கும் என்று அற்புதமாக சொல்லி இருக்கிறீர்,,
    நன்றி சகோ..

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு சகோ..சில பேருக்கு நாக்குலயே சனி இருக்கே..என்ன செய்ய..

    ReplyDelete
  5. வாங்க கருன்

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  6. வாங்க செங்கோவி

    ஆமாம் சகோ ..
    என்ன செய்ய

    அவர்களை கூடுமானவரை தவிர்க்க பார்க்கணும்
    நன்றி சகோ வருகைக்கு

    ReplyDelete
  7. மற்றவர்களை எரிச்சல் படுத்தக்கூடாது என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்! இனிமேல் நானும் அவ்வாறே நடந்துகொள்கிறேன்!

    ReplyDelete
  8. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய, நடைமுறைப் படுத்த வேண்டியவற்றை அழகாகக் கூறியுள்ளீர்கள்!

    ReplyDelete
  9. என்னால் அலுவலகத்தில் வீடியோ பார்க்க முடியாது.... எப்படி இருந்தாலும் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரை பயனுள்ள ஒன்றுதான்...

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. நல்ல கருத்து,தொடர்ந்து எழுதுங்கள் ரமேஷ்.

    ReplyDelete
  11. அதான் நீங்க பார்க்கிறேன்னு சொல்றீங்களே ஆரஞ்சு பழத்தை...நல்ல பதிவு ரமேஷ்..

    ReplyDelete
  12. வாங்க ஈகரை

    தங்களை வரவேற்கிறேன்

    தங்கள் கருத்துக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  13. வாங்க சிவகுமார்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    -------------------------------------------

    வாங்க ஷீ நிஷி

    படம் சும்மா ஜாலிக்காக

    பதிவின் கருத்து புரிந்துகொண்டால் போதும்
    நண்பரே

    ---------------------------------------

    வாங்க கீதா

    தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி


    ------------------------------------

    வாங்க ராம்வி

    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

    ------------------------------------------

    வாங்க reverie

    அப்பா ஒட்டு போட்டுட்டீங்களா

    ஹி ஹி

    கருத்துக்கு நன்றி சகோ

    -------------------------------------

    ReplyDelete
  14. காணொளி அருமை... உண்மை தான்.. அதற்கு தான் அன்றே பாடி விட்டார்கள்.... "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிர்ப்பு..." நன்றி

    ReplyDelete
  15. வாங்க மாய உலகம்
    தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  16. வாங்க ரத்னவேல் அய்யா

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. அருமையான காணொளி...

    ReplyDelete
  18. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. வாங்க பத்மநாபன் நண்பரே

    தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  20. வாங்க ராஜேஸ்வரி மேடம்

    தங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே