Wednesday, September 7, 2011

கீரைகளின் பலன்கள் பாகம் -2


தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே



கீரைகளின் பலன்கள் தொடர்ச்சி .....



அகத்திக்கீரை :-

வாரம் ஒரு முறை இதனை சாப்பிடலாம் .
     எல்லா வகை சத்துக்களும் இந்த கீரையில் உள்ளது.
வெப்பம் தணிக்கும்,குடலைத் தூய்மையாக்கும் .
குடல் புழுக்களைக் கொல்லும்.பித்தம் தணிக்கும்.
தலை சுற்று மயக்கம் போக்கிவிடும்.கண் கோளாறு
இதயகோளாறுகள் குணமாகும்.


பொன்னாங்கண்ணிக் கீரை :-

      இது தங்கச் சத்துடையது.இந்த கீரையை தொடர்ந்து
சாப்பிட்டால் தங்க பஸ்மம் சாப்பிட்டதற்கு நிகராகும் .
உடலை வனப்போடும்,பொலிவோடும் பாதுகாக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.
தலை சுற்று மயக்கம் தீரும்.

மணத்தக்காளி கீரை:-

       மணத்தக்காளி கீரை பெண்மையை வளரச் செய்யும்.
பெண்களின் மார்பை வளரச் செய்யும்.இரத்தத்தை
தூய்மையாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.கண்ணுக்கு
ஒளி தரும்.வயிற்றுப் புண்ணாற்றும்.குடலுக்கு பலம்
கொடுக்கும்.குடல் புழுவைக் கொல்லும்.
கருப்பைக் குறைபாட்டை நீக்கும்.

அரைக்கீரை :-

     உடலுக்கு ஊக்கம் தரும். மலச்சிக்கல் போக்கும் .
இரத்தத்தை சுத்தி செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளை முறியடிக்கும்.
அடிக்கடி சாப்பிட தேமல், சொறி,சிரங்கு குணமாகும்.

சிறுகீரை :-

      உடலுக்கு ஊக்கம் தரும்.மலச்சிக்கல் போக்கும்.
பித்தம் குறையும்.குடலுக்கு பலம் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.

வெந்தய கீரை :-

        இரும்பு சத்து கொண்ட கீரை இது.உடலுக்கு பலம்
தரும்.இரத்தத்தை சுத்தம் செய்யும்.உடலுக்கு குளிர்ச்சி
தரும்.கண்ணுக்கு ஒளி தரும்.குடலுக்கு பலம் ஊட்டும.
பேதியை குறைக்கும் . மலச்சிக்கலைப் போக்கும்.
நரம்பு தளர்ச்சி ,வாதம் சோம்பல் போக்கும்.

தொடரும்.........






ஹாங் ...அப்பிடித்தான் நல்லா அமுக்கி விடு .ஓடி ஓடி
காலெல்லாம் ஒரே வலி . ஹா ஹா கிச்சு கிச்சு செய்யாத
எனக்கு சிரிப்பு வருது.



இத்தளத்திற்கு பின்னூட்டமிட்டும் ,வாக்களித்தும் செல்லும் நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

43 comments:

  1. ஆஹா அருமையான கீரை வகைகள்.பயனுள்ள தகவல், ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவல்கள்..

    ReplyDelete
  3. RAMVI said...
    ஆஹா அருமையான கீரை வகைகள்.பயனுள்ள தகவல், ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

    ReplyDelete
  4. செங்கோவி said...
    நல்ல பயனுள்ள தகவல்கள்..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. பல அறிய, பயனுள்ள தகவல்கள்..
    நன்றி சகோ..

    ReplyDelete
  6. மாப்ள பயனுள்ள கீரைத்தகவல்களுக்கும்...கிச்சி கிச்சி மூட்டியதுக்கும் நன்றி ஹிஹி!...

    ReplyDelete
  7. ரெண்டு மூணு நாளா கடை பக்கம் வர முடியல... இப்போ வந்திட்டேன்... பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  8. வணக்கமுங்கோ கீரைப்பதிவு நல்லாதாய்யா இருக்கு.. போன பதிவில கீரைய பேச விட்டதைப்போல இன்றும் விட்டிருக்கலாம்..  அவங்க என்னதான் சொல்லுறாங்கன்னு கேக்க ஆசையாதான்யா இருக்கு.. ஹி ஹி

    ReplyDelete
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பல அறிய, பயனுள்ள தகவல்கள்..
    நன்றி சகோ..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  10. விக்கியுலகம் said...
    மாப்ள பயனுள்ள கீரைத்தகவல்களுக்கும்...கிச்சி கிச்சி மூட்டியதுக்கும் நன்றி ஹிஹி!...

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  11. தமிழ்வாசி - Prakash said...
    ரெண்டு மூணு நாளா கடை பக்கம் வர முடியல... இப்போ வந்திட்டேன்... பயனுள்ள தகவல்கள்

    தொடர்ந்து வாங்க நண்பரே

    ReplyDelete
  12. காட்டான் said...
    வணக்கமுங்கோ கீரைப்பதிவு நல்லாதாய்யா இருக்கு.. போன பதிவில கீரைய பேச விட்டதைப்போல இன்றும் விட்டிருக்கலாம்.. அவங்க என்னதான் சொல்லுறாங்கன்னு கேக்க ஆசையாதான்யா இருக்கு.. ஹி ஹி

    வாங்க நண்பரே

    அந்த நடை பிடிக்கலையோன்னு தான் மாத்திட்டேன் நண்பரே .

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பலன்கள் தொடரட்டும்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  14. பயனுள்ள சுவையான பதிவு ...தொடரட்டும் ....

    ReplyDelete
  15. உடல் நலம் குறித்த பயனுள்ள தகவல்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. koodal bala said...
    பயனுள்ள சுவையான பதிவு ...தொடரட்டும்

    தொடர்கிறேன் நண்பா

    ReplyDelete
  17. கிராமத்து காக்கை said...
    உடல் நலம் குறித்த பயனுள்ள தகவல்
    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவ படுத்தலாம் உங்களை, பயனுள்ள தகவல்கள்...!

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said...
    டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவ படுத்தலாம் உங்களை, பயனுள்ள தகவல்கள்...!

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  20. கீரைக்கட்டை பார்த்ததும் இப்பவே சாப்டனும் போல இருக்குது....
    தினம் ஒரு சாப்பிட்டு வந்தாலே உடலின் தனிமச் சத்துகள்
    பெருகிவரும்.
    இதுபோன்ற ஆரோக்கியமான பதிவுகளுக்காக்
    உங்களுக்கு ஒரு சலாம்

    தமிழ்மணம் 9

    ReplyDelete
  21. மகேந்திரன் said...
    கீரைக்கட்டை பார்த்ததும் இப்பவே சாப்டனும் போல இருக்குது....
    தினம் ஒரு சாப்பிட்டு வந்தாலே உடலின் தனிமச் சத்துகள்
    பெருகிவரும்.
    இதுபோன்ற ஆரோக்கியமான பதிவுகளுக்காக்
    உங்களுக்கு ஒரு சலாம்

    தமிழ்மணம் 9

    நன்றி நண்பரே தங்கள் அன்பிற்கு

    ReplyDelete
  22. நான் ஆர்வமுடன் வாசித்து வரும் பதிவுகளில் இதுவும் ஒன்று.நன்றி சகோ

    ReplyDelete
  23. பல அருமையான கீரை வகைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெரிஞ்சுக்க முடியுது. நன்றி

    ReplyDelete
  24. எத்தனை கீரை,எத்தனை பயன்கள்?!
    நன்று!

    ReplyDelete
  25. இங்க லண்டனில இதெல்லாம் கிடைக்காது

    ReplyDelete
  26. K.s.s.Rajh said...
    நான் ஆர்வமுடன் வாசித்து வரும் பதிவுகளில் இதுவும் ஒன்று.நன்றி சகோ

    தங்கள் அன்புக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  27. Lakshmi said...
    பல அருமையான கீரை வகைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெரிஞ்சுக்க முடியுது. நன்றி

    வாழ்த்துக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    எத்தனை கீரை,எத்தனை பயன்கள்?!
    நன்று!

    வாழ்த்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  29. KANA VARO said...
    இங்க லண்டனில இதெல்லாம் கிடைக்காது

    தங்களை வரவேற்கிறேன் நண்பரே .

    தங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே .

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  30. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  31. கீரை வகைகளின் முழு செய்திகளை அறியும் வாய்ப்பு இந்த பதிவுகளின் மூலம் கிடைத்தது நன்றி நண்பா

    ReplyDelete
  32. பயனுள்ள தகவல், . பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  33. அருமையான தகவலும் ,நகைச்சுவையும் .வாழ்த்துகள் ......

    ReplyDelete
  34. வணக்கம் நண்பா,
    ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்றாற் போல கீரைகளின் பயன்பாட்டினைத் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமாகத் தந்துள்ளீர்கள்.
    நல்ல பதிவு.

    ஆமா...அந்தச் சிங்கம் கூடச் சண்டை போடுவது யாரு...

    ஹி.....ஹி...

    ReplyDelete
  35. கீரை பற்றிய அருமையான தகவல்கள்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  36. r.v.saravanan said...
    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி நண்பா


    கீரை வகைகளின் முழு செய்திகளை அறியும் வாய்ப்பு இந்த பதிவுகளின் மூலம் கிடைத்தது நன்றி நண்பா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  37. இராஜராஜேஸ்வரி said...
    பயனுள்ள தகவல், . பகிர்வுக்கு நன்றி.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  38. அம்பாளடியாள் said...
    அருமையான தகவலும் ,நகைச்சுவையும் .வாழ்த்துகள் ......

    வாழ்த்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  39. நிரூபன் said...
    வணக்கம் நண்பா,
    ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்றாற் போல கீரைகளின் பயன்பாட்டினைத் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமாகத் தந்துள்ளீர்கள்.
    நல்ல பதிவு.


    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ஆமா...அந்தச் சிங்கம் கூடச் சண்டை போடுவது யாரு...

    ஹி.....ஹி...

    சத்தியமா நான் இல்லை ஹி ஹி

    ReplyDelete
  40. மதுரன் said...
    கீரை பற்றிய அருமையான தகவல்கள்

    பகிர்வுக்கு நன்றி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  41. ஓணம் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. இராஜராஜேஸ்வரி said...
    ஓணம் நல்வாழ்த்துக்கள்

    நன்றி மேடம் ,தங்களுக்கும் ஓணம்
    நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே