Tuesday, September 6, 2011

நாந்தாங்க கீரை பேசறேன்

வணக்கம் நண்பர்களே

இதுவரை வந்த பதிவு அனைத்திற்கும் ஆதரவு தந்து
வாக்களித்து ,பின்னூட்டமிட்டு என்னை உற்சாகமளித்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ஏற்கனவே பழவகைகள் ,காய்கறிகள் ,கிழங்கு வகைகள்
ஆகியவற்றின் பலன்களை தெரிந்து கொண்டோம் .
கூடவே யாரெல்லாம் இவற்றை எடுத்துக் கொள்ளக்
கூடாது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

இனி .....கீரைகளும் அதன் நன்மை தீமைகளும் பற்றி
தெரிந்து கொள்வோம்.

அதனை பற்றி நான் சொல்வதை விட அவைகளே
தங்களைப் பற்றி சொல்கிறது கேளுங்கள்

வணக்கங்க, நான்தான் முருங்க கீரை ,



எனது சகோதரன் முருங்க காயை பற்றி
தெரிஞ்சிருப்பீங்க

என்னைய பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க

என்னைய நீங்க சாப்பிட்டா உங்களுக்கு சத்து கிடைக்கும் .
அதாங்க இரும்பு சத்துன்னு சொல்வாங்களே அது.
அப்புறம் இரத்தத்தை சுத்தப் படுத்துவேன் .தாய் பாலை
அதிகமாக சுரக்கச்செய்வேன்.உடம்பிலுள்ள வெப்பத்தை
தனிப்பேன் அதாங்க உடல்சூடு அத குறைப்பேன் .
இதயவலி குணமாக்குவேன் .சிறுநீரைப் பெருக்குவேன் .
முக்கியமா என்னைய தொடர்ந்து சாப்பிட்டா சோகை வராது.

மாசமா இருக்கிறவங்க வாரம் ஒருமுறை சாப்பிட்டா நீர் இறங்கி
கை கால் வீங்காம பாத்துக்குவேன் .


நானும் கெட்டவன் தானுங்க சில பேருக்கு .
வயித்துல புண்ணுள்ளவங்க அதாங்க அல்சர்ன்னு சொல்வாங்களே 
அவங்க என்கிட்டே வர வேணாம். ஆமா சொல்லிப்புட்டேன் .
நான் வரேன்னுங்க .


வணக்கங்க எம்பேரு தண்டுக்கீரைங்க 

நாங்க ரெண்டு ரகமாக இருப்போமுங்க .அதுல நான் சிகப்பு
கலருங்க . எங்க ரெண்டு பேருல நாந்தாங்க நல்ல மாதிரின்னு
சொல்லிக்கிறாங்க . மேலே ஒருத்தன் சொன்னானே அவன் கிட்ட
இரும்பு சத்து இருக்கிறதா ,அதுமாதிரி என்கிட்டே தாமிர சத்து
இருக்குங்க .
என்னைய நீங்க சாப்பிட்டா தோல்வறட்சி நீக்குவேன் ,
மலச்சிக்கலை போக்கி மூலத்தை குணமாக்குவேன் .
நானும் சிறுநீரை பெருக்குவேன் .
உடம்புக்கு குளிர்ச்சியும் தருவேணுங்க .

நீங்க எல்லாம் என்னைய பாசமா பாக்கிறதால உங்க கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன்.கிட்ட வாங்க .என்னைய தினசரி சாப்பிடாதீங்க .
ஏன்னா அப்பிடி சாப்பிட்டீங்க்கனா கை கால தளர்ச்சியாக்கிடுவேன் .
உணர்வை குறைச்சிடுவேன் . மாத விலக்கு ஏற்படும்பொழுது அத அதிகப்படுத்திடுவேன் .
குறிப்பா உடம்பு தடிச்சு போனவங்களுக்கு நான் லாயக்கி இல்லீங்க 


சரிங்க நானும் உத்தரவு வங்கிக்கிரேனுங்க


நன்றி

தங்கள் மேலான கருத்தையும் ,வாக்குகளையும்
எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்





உங்கள் அருகில் இரட்டை முகத்தோடு வாழ்பவர்களை
அறிந்துகொள்ளுங்கள் . முன்னொன்று பேசி புறம் ஒன்று
பேசும் அவர்களை நீங்கள் நாசுக்காக விலக்கினால்
சண்டை சச்சரவு இல்லை .



39 comments:

  1. வணக்கம் நண்பா தொடர்ந்து பயனுள்ள பதிவுகளையே தருகிறீர்கள் .
    பாராட்டுகள்+வாழ்த்துக்கள்=நன்றி.

    ReplyDelete
  2. அருமையான தொடர் .தொடருங்க ...தொடர்கிறேன் .

    ReplyDelete
  3. வணக்கம் நான் கவி அழகனுனுங்க

    நீங்கள் இப்படி எழுதினா நான் உங்களுக்கு வாக்கும் கருத்தும் போடுவேனுங்க

    ReplyDelete
  4. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வணக்கம் நண்பா தொடர்ந்து பயனுள்ள பதிவுகளையே தருகிறீர்கள் .
    பாராட்டுகள்+வாழ்த்துக்கள்=நன்றி.


    தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமையான தொடர் .தொடருங்க ...தொடர்கிறேன் .


    நன்றி நண்பரே தங்கள் அன்பிற்க்கு க்டமைப் பட்டுள்ளேன்

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  7. கவி அழகன் said...
    வணக்கம் நான் கவி அழகனுனுங்க

    நீங்கள் இப்படி எழுதினா நான் உங்களுக்கு வாக்கும் கருத்தும் போடுவேனுங்க

    ஹா ஹா தங்கள் அன்பிர்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. விக்கியுலகம் said...
    பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  9. பழம் காய் கீரையென்று தொடர்ந்து
    பயனுள்ள பதிவுகளைத் தருவதற்கு நன்றி
    எச்சரிக்கையை சிவப்பில் கொடுத்திருந்தது
    மனதைக் கவர்ந்தது.
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  10. Ramani said...
    வாழ்த்துக்கள்


    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல்களை வித்யாசமா கொடுத்திருக்கீங்க..நன்றி

    ReplyDelete
  12. இப்படி பயனுள்ள தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் பாஸ்.

    இன்று என் கடையில்-
    (கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  13. அருமையான பயனுள்ள
    உடல்நலம் சார்ந்த பதிவு.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. RAMVI said...
    பயனுள்ள தகவல்களை வித்யாசமா கொடுத்திருக்கீங்க..நன்றி

    நன்றி சகோதரி

    ReplyDelete
  15. K.s.s.Rajh said...
    இப்படி பயனுள்ள தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் பாஸ்.


    தங்கள் அன்புக்கு நன்றி ராஜ்

    ReplyDelete
  16. மகேந்திரன் said...
    அருமையான பயனுள்ள
    உடல்நலம் சார்ந்த பதிவு.
    நன்றி நண்பரே.

    தமிழ்மணம் 6



    மிக்க நன்றி நண்பரே .

    ReplyDelete
  17. நன்றி ரமேஷ்..

    இன்னும் நிறைய டைப் இருக்கில்லையா கீரையில்?..

    ReplyDelete
  18. செங்கோவி said...
    நன்றி ரமேஷ்..

    இன்னும் நிறைய டைப் இருக்கில்லையா கீரையில்?..

    ஆமாம் நண்பரே

    அவைகள் இனி வரும் பதிவில் வரும் நண்பரே .

    நன்றிக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. ஆழமான விடயத்தை நம்ம மொழியல சொன்னதற்கு நன்றி...

    சகோதரம் அன்பு வேண்டுகோள் ஒன்று தங்களது பக்கத்தில் ரைட் கிளிக் இல்லாத படியால் லிங்குகளை புது ரப்பில் திறக்கும் படி செய்ய முடியுமா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

    ReplyDelete
  20. கீரை ரொம்ப அழகா பேசுறிங்க...
    உங்க நிறை குறைகளை சொன்னதுக்கு
    நன்றி

    ReplyDelete
  21. ♔ம.தி.சுதா♔ said...
    ஆழமான விடயத்தை நம்ம மொழியல சொன்னதற்கு நன்றி...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா

    ReplyDelete
  22. சின்னதூரல் said...
    கீரை ரொம்ப அழகா பேசுறிங்க...
    உங்க நிறை குறைகளை சொன்னதுக்கு
    நன்றி

    நன்றி சகோ.

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  23. ஆஹா புதுமையா சொல்லி இருக்கீங்க சூப்பர், உபயோகமான பதிவு...!!!

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...
    ஆஹா புதுமையா சொல்லி இருக்கீங்க சூப்பர், உபயோகமான பதிவு...!!!

    வாருங்கள் மனோ நண்பரே

    தங்களை வரவேற்கிறேன்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  25. ♔ம.தி.சுதா♔ said...



    சகோதரம் அன்பு வேண்டுகோள் ஒன்று தங்களது பக்கத்தில் ரைட் கிளிக் இல்லாத படியால் லிங்குகளை புது ரப்பில் திறக்கும் படி செய்ய முடியுமா ?


    அப்பிடி செய்தாலும் ரைட் கிளிக் வேலை செய்யாது சகோதரா.

    செய்து பார்த்தேன்

    ReplyDelete
  26. கீரையாவே மாறி மகத்துவத்தை புதிய வைச்சுட்டிங்க!நன்றி!

    ReplyDelete
  27. கோகுல் said...
    கீரையாவே மாறி மகத்துவத்தை புதிய வைச்சுட்டிங்க!நன்றி!

    நன்றிக்கு நன்றி கோகுல்

    ReplyDelete
  28. கீரையின் பயன் பற்றிப் பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said...
    கீரையின் பயன் பற்றிப் பயனுள்ள பதிவு!

    வாழ்த்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  30. வரிசையாக உங்க பதிவுக்கு வந்து பயனுள்ள தகவல்கள் பல தெரிஞ்சுக்க முடிஞ்சது. கீரைகளே பேசுவதுபோல
    சொல்லி இருப்பது நல்லா இருக்கு.

    ReplyDelete
  31. கீரை பற்றிப் பயனுள்ள தகவல்கள்
    நன்றி நண்பா

    ReplyDelete
  32. வணக்கம் நண்பாம்
    கீரையின் பயன்களைப் பற்றி....கீரைகளே பேசுவது போன்ற மொழி நடையில் பகிர்ந்திருக்கிறீங்க.
    நல்ல பதிவு,
    ஜனநாயக கடமையை நிறைவேற்றிட்டேன்.

    ReplyDelete
  33. ஐயா நான் காட்டான் வந்திருக்கேனுங்க.. என்ர தோட்டத்தில இருக்கிற கீரைகள பேச விட்டிருக்கீங்க..  அவங்களும் நல்லா பேசுறானுங்க.. ஆனா எனக்கொரு சந்தேகம் முருங்கை கீரையின் சகோதரனை சாப்பிடக்கூடாதாம் என்னைப்போல கிழவன் உண்மையாங்கோ.. ஹி ஹி 

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  34. கீரை பற்றி அக்கரையாக படித்தேன்...பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  35. ஃபைனல் தத்துவம் நச்

    ReplyDelete
  36. பயனுள்ள உடல்நலம் சார்ந்த பதிவு...
    நன்றி நண்பரே....

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே