Saturday, September 10, 2011

வாழ்க்கை சிறப்பாக இருக்க

உள்ளத்தை திற ,உறவை தேடு

அன்பை கொடு ,அன்பை பெறுவாய்



மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதல்ல ;அது
உனக்கு நீயே உண்டாக்கிக் கொள்வது தான்.



நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது ,ஆனால்
எப்போதும் இதமாக பேச முடியும் .

சிறப்பானவற்றை எதிர்பாருங்கள்; மோசமானவற்றுக்குத்
தயாராக இருங்கள்;எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.


ஒரு குழந்தைக்கு பேசுவதற்கு எப்பிடி கற்றுத் தருகிறோமோ
அதைப் போலவே தைரியத்தையும் கற்றுக் கொடுக்க
வேண்டும்.

ஒருவன் தன் நண்பனை நல்லவிதமாக மாற்ற விரும்பினால்,
முதலில் தன்னை அவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்றைய வேலைகளை சிறப்பாக செய்தால் தான் ,நாளைய
பொழுது சிறப்பாக அமையும்.



நேரத்தை வீணாக செலவழிக்கும் மனிதன் தான் ,தனக்கு
நேரம் போதவில்லை என்று புலம்புவான்.

தாங்கள் தினந்தோறும் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதாகச்
சிலர் அலுத்துகொல்வதற்குக் காரணம்,அவர்கள் மூன்று மணி நேர
வேலையை செய்து முடிக்க,முழு நாளையும் எடுத்துக்
கொள்வதுதான்


தங்கள் குழந்தை மீது உண்மையான பாசம் கொண்ட பெற்றோர்
குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்வார்களே தவிர
அவர்கள் விரும்பும் "அனைத்தையும் "அல்ல .



சிறிய வாய்ப்புகள் தான் , பெரிய நிறுவனங்களுக்கு
அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது.


சூரியக் கதிர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டால்
நெருப்பு உண்டாகும்.

நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும்,
அதில் முழுக் கவனத்தையும் குவியுங்கள்.
வெற்றி உண்டாகும்.


இப்போதும் எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்து.


நன்றி
 


கீழே உள்ள படத்தில் நடுவில் உள்ள கருப்பு புள்ளியை
உற்று பார்த்துக் கொண்டு தலையை முன்னும்
பின்னும் நகர்த்துங்கள்



zwani.com myspace graphic comments

46 comments:

  1. சூப்பர் பாஸ்...............

    தேங்க்ஸ் .....

    ReplyDelete
  2. அத்தனையும் பொன்மொழிகள்
    பதித்து வைக்கப்பட வேண்டியவை.

    ReplyDelete
  3. கான்செண்ட்ரேசன் பத்தி, கலக்கலா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  4. நல்லபதிவு.சிறப்பானவற்றை எதிர் பாருங்கள்.மோசமானவற்றுக்கு தயாராக இருங்கள். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்குப்பிடித்தவரிகள்.

    ReplyDelete
  5. அருமையான் வரிகள் ...

    ReplyDelete
  6. என்னாமா சொல்றாரு இவரு... கேட்டுக்கங்க...

    ReplyDelete
  7. எல்லாத்துலயும் குத்தியாச்சு.

    ReplyDelete
  8. அருமையான நல்ல அறிவுரைகள் கலந்த பகிர்வு .மிக்க நன்றி சகோ உங்கள் பகிர்வுக்கு .முடிந்தால் இன்று என் தளத்திற்கு வருகைதாருங்கள் இது என் அன்பான வேண்டுகோள் .வாக்களிக்கவும் தவறாதீர்கள் நன்றி.........

    ReplyDelete
  9. தத்துவங்கள் அருமை... புள்ளியை உற்று பார்த்துக்கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்தால் வட்டங்கள் சுழல்வது போல் பிரமை ஏற்படுகிறது... அருமை சகோ

    ReplyDelete
  10. மனம்
    திடம் பெறும்

    கருத்து பகிர்விற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  11. அருமையான சிந்தனைகள் சூப்பர்...!!!

    ReplyDelete
  12. நான் கரும்புள்ளியை பார்த்துட்டு தலையை முன்னும் பின்னும் ஆட்டுனத்தை பார்த்துட்டு, கூடவேலை பாக்குறவன் எழும்பி ஓடிட்டாய்யா...!!!

    ReplyDelete
  13. தமிழ்மணம் எழு குத்தியாச்சி...

    ReplyDelete
  14. நீங்க சொன்னமாதிரியே செய்றேன் அண்ணாச்சி ....

    ReplyDelete
  15. நேரத்தை வீணாக செலவழிக்கும் மனிதன் தான் ,தனக்கு
    நேரம் போதவில்லை என்று புலம்புவான்.

    ஹா ஹா ஹா எப்பிடி எங்களைப்போல பதிவர்களா..!!!????))))

    ReplyDelete
  16. மிகவும் ஆழமாக சிந்தித்து அழகான வார்த்தைகளால்
    மிக அருமையான பயனுள்ள பதிவாகத்
    தந்துள்ளமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 10

    ReplyDelete
  17. அழகான பதிவு.........சூப்பர்

    ReplyDelete
  18. அருமையான சிந்தனைகள்.அழகான அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. stalin said...
    சூப்பர் பாஸ்...............

    தேங்க்ஸ் ....

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமை .

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. மகேந்திரன் said...
    அத்தனையும் பொன்மொழிகள்
    பதித்து வைக்கப்பட வேண்டியவை.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  22. செங்கோவி said...
    கான்செண்ட்ரேசன் பத்தி, கலக்கலா சொல்லியிருக்கீங்க.

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  23. Lakshmi said...
    நல்லபதிவு.சிறப்பானவற்றை எதிர் பாருங்கள்.மோசமானவற்றுக்கு தயாராக இருங்கள். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்குப்பிடித்தவரிகள்.

    தங்கள் அன்புக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  24. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அருமையான மொழிகள்.

    த.ம. 4.,
    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  25. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான் வரிகள் ...

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  26. தமிழ்வாசி - Prakash said...
    என்னாமா சொல்றாரு இவரு... கேட்டுக்கங்க...

    ஹா ஹா கருத்துக்கு நன்றி நண்பரே

    தமிழ்வாசி - Prakash said...
    எல்லாத்துலயும் குத்தியாச்சு.

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. அம்பாளடியாள் said...
    அருமையான நல்ல அறிவுரைகள் கலந்த பகிர்வு .மிக்க நன்றி சகோ உங்கள் பகிர்வுக்கு .முடிந்தால் இன்று என் தளத்திற்கு வருகைதாருங்கள் இது என் அன்பான வேண்டுகோள் .வாக்களிக்கவும் தவறாதீர்கள் நன்றி.........

    வாழ்த்துக்கு நன்றி சகோதரி

    வருகிறேன் சகோதரி

    ReplyDelete
  28. மாய உலகம் said...
    தமிழ் மணம் 6

    தத்துவங்கள் அருமை... புள்ளியை உற்று பார்த்துக்கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்தால் வட்டங்கள் சுழல்வது போல் பிரமை ஏற்படுகிறது... அருமை சகோ

    நன்றி சகோ

    ReplyDelete
  29. சத்ரியன் said...
    மனம்
    திடம் பெறும்

    கருத்து பகிர்விற்கு நன்றி நண்பா.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  30. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான சிந்தனைகள் சூப்பர்...!!!

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    நான் கரும்புள்ளியை பார்த்துட்டு தலையை முன்னும் பின்னும் ஆட்டுனத்தை பார்த்துட்டு, கூடவேலை பாக்குறவன் எழும்பி ஓடிட்டாய்யா...!!!

    ஹா ஹா ஹா

    அவரையும் பார்க்க வைத்திருக்கலாமே

    ReplyDelete
  31. MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்மணம் எழு குத்தியாச்சி...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  32. koodal bala said...
    நீங்க சொன்னமாதிரியே செய்றேன் அண்ணாச்சி ....

    ஹா ஹா நான் அன்னாச்சியா ?

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  33. Nesan said...
    Arumaiyana Vidayangal.manathkku thavai.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  34. காட்டான் said...
    நேரத்தை வீணாக செலவழிக்கும் மனிதன் தான் ,தனக்கு
    நேரம் போதவில்லை என்று புலம்புவான்.

    ஹா ஹா ஹா எப்பிடி எங்களைப்போல பதிவர்களா..!!!????))))

    ஹைய்யோ நான் பொதுவா சொன்னேன் நண்பரே

    ReplyDelete
  35. mani said...
    மிகவும் ஆழமாக சிந்தித்து அழகான வார்த்தைகளால்
    மிக அருமையான பயனுள்ள பதிவாகத்
    தந்துள்ளமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 10

    அன்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  36. K.s.s.Rajh said...
    அழகான பதிவு.........சூப்பர்


    நன்றி ராஜ்

    ReplyDelete
  37. RAMVI said...
    அருமையான சிந்தனைகள்.அழகான அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றி.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  38. மனித வாழ்க்கையை தரமாக்க உரமான வரிகள்!!

    ReplyDelete
  39. அருமையான சிந்தனை..
    அழகான அறிவுரை நண்பரே...

    நன்றி ரமேஸ்...

    ReplyDelete
  40. வணக்கம் நண்பா,
    வாழ்க்கை சிறப்பாக இருக்கவும்,
    நாம் அன்றாடம் செய்யும் கருமங்களில் பூரண திருப்தி பெறவும் ஏற்ற சிறு சிறு தத்துவக் குறிப்புக்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  41. PRABHAKARAN.N
    PH.D.MANGT.
    MA.PUBLIC ADMIN
    M.COM
    PGD OFFICE MANGT
    PGD PUBLIC RELATION
    DCA

    AND
    BJP
    AIDMK

    LOVE AND SEX

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே