Sunday, September 11, 2011

கீரைகளின் பலன்கள் பாகம் -3

கீரைகளின் பலன்கள் பாகம் -1


http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_06.html

கீரைகளின் பலன்கள் பாகம்-2


http://thulithuliyaai.blogspot.com/2011/09/2.html



பாகம் -3......


வல்லாரை கீரை:







இதற்கு சரஸ்வதி கீரை என்ற பெயரும் உண்டு .அதாவது
நல்ல ஞாபக சக்தி தரும்.குழந்தைகளுக்கு அதனால் நல்ல
படிப்பும் தரும்.

வல்லாரை கீரை இளைத்த உடலை தேற்றும் .வெப்பம் தரும்.
சிறுநீரை பெருக்கும்,வாதம் ,வாய்வு போக்கும் .மேக நோய்
அண்டவீக்கம்,குட்டம் ,உன்மத்தம் ஆகியவை தீரும்.

வல்லாரை ,கீழாநெல்லி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து
நெல்லிக்காயளவு கொடுத்தால் சிறுநீர் எரிச்சல் ,நீர்த்தாரை புண்
ஆகியவை குணமாகும்.

புளிச்ச கீரை :-





உடலுக்கு வளமூட்டும் ,வயிற்றுப் புண் ஆற்றும்.இக்கீரையை
வெங்காயம் ,வெந்தயம் சேர்த்துக் கூட்டு செய்து தினம் மூன்று
வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக் கடுப்பும் இரத்தப் போக்கும்
குணமாகும்.

தூதுவளை :-


இதனை உண்டால் வெப்பம் தரும்.சளியை போக்கும்.நுரையீரலை
தூய்மை படுத்தும்.விந்து பெருகும்.இதன் பூ ஆண்மையை உண்டு
பண்ணும.இதய தாக்குதல்,மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
அறிவு வளரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி :-



  இது மஞ்சள் நிற பூ பூக்கும் .தங்க சத்துடயது. இது முக்கியமாக
கல்லீரல் ,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .இரத்தத்தை
சுத்தி செய்யும். கண்ணுக்கு ஒளி தரும் .இதற்கு கரிசாலை என்ற
பெயரும் உண்டு.

வெள்ளை கரிசலாங்கண்ணி :-




  இது வெள்ளை நிற பூ பூக்கும் .வெள்ளி சத்துடயது.இதுவும்
கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றுக்கு சக்தியளிக்கும் .
மஞ்சள் காமாலையை போக்கும்.இரத்தம் சுத்தியாகும்.

தொய்யல் கீரை :-

   நாடி நரம்புகளை பலப்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தியை உண்டு பண்ணும.வாத நோயாளிக்கு ஏற்றது.
பேறு காலத்திற்கு பின் மகளிர் சாப்பிட உடலைத் தேற்றும்.

முட்டைகோஸ் :-



  உடலுக்கு குளிர்ச்சி தரும்.வயிற்று புண்ணை ஆற்றும்.
குடலுக்கு பலமூட்டும்.மலம் இளக்கும்.உடலுக்கு வனப்பும்
வலிமையையும் தரும்.

டிஸ்கி :-


      கீரைகள் சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும் 
சேர்த்து சமைப்பது நலம் .அப்பொழுது தான் கீரைகளிலுள்ள 
விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை 
நீக்கும்.


39 comments:

  1. சார், கீரைகளுக்குள் இவ்வளவு சக்தி உண்டா?

    ReplyDelete
  2. எல்லாமே ரொம்ப ரொம்ப ஆச்சரியமான தகவல்கள்!

    ReplyDelete
  3. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    சார், கீரைகளுக்குள் இவ்வளவு சக்தி உண்டா?

    ஆமாம் நண்பரே

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. சார், சொல்ல மறந்துட்டேன்! - கும்புடுறேனுங்க!

    ReplyDelete
  5. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    எல்லாமே ரொம்ப ரொம்ப ஆச்சரியமான தகவல்கள்!

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    சார், சொல்ல மறந்துட்டேன்! - கும்புடுறேனுங்க!


    அன்பு கலந்த வணக்கம் நண்பரே

    ReplyDelete
  7. டிஸ்கி அருமையான அட்வைஸ்....!!!

    ReplyDelete
  8. கையில கிடைக்காத கீரை பெயர் எல்லாம் சொல்றீங்க ம்ம்ம்ம்...

    ReplyDelete
  9. சிறந்த பகிர்வு நண்பா... தொடருங்கள் நண்பா...

    ReplyDelete
  10. தமிழ்மணம் இணைத்து முதல் வாக்கும் போட்டாச்சு...

    ReplyDelete
  11. நல்ல தகவல் .தகவலுக்கு நன்றி .

    ReplyDelete
  12. பயனுள்ள கீரை வகைகள்.பகிர்வுக்கு நன்றி.
    முட்டை கோஸ். கீரை வகையை சார்ந்ததா?

    ReplyDelete
  13. பலவகைகீரைகளின் வல்லாரைக்கீரையே எனக்கு பிடிச்சிருக்கு

    ReplyDelete
  14. வல்லாரைக் கீரையை
    வளைச்சி வளைச்சி
    சிறுவயதில்
    அம்மா திணிச்சிவிட்டது
    எதுக்குன்னு இப்போதான் தெரியுது....

    அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய
    தேவையான பதிவு நண்பரே.

    பதிவு நன்று.
    தமிழ்மணம் மூன்று.

    ReplyDelete
  15. தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
    அரிசி,கோதுமை முதலான தானிய அளவுகளை
    குறைத்துக்கொண்டு காய் கனிகள் கீரை
    முதலானவைகளின் அளவைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்.த.ம 4

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான கீரை வகைகள் கேள்விப்படுகிறேன்.. எல்லாவற்றையும் சாப்பிட்டதில்லை இங்கு இரண்டு மூன்று வகையான கீரைகளே வருகின்றது இந்தியா வந்திருக்கும்போது அதிகமான கீரைகளை பாத்திருக்கின்றேன்.. சாப்பிட்டது குறைவே..

    ReplyDelete
  17. தமிழ் மணத்தில் ஓட்டு போட முடியவில்லை..

    ReplyDelete
  18. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said...
    டிஸ்கி அருமையான அட்வைஸ்....!!!
    .
    கையில கிடைக்காத கீரை பெயர் எல்லாம் சொல்றீங்க ம்ம்ம்ம்...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  20. தமிழ்வாசி - Prakash said...
    முட்டைகோஸ் கீரை வகையா?


    ஆமாம் நண்பரே


    சிறந்த பகிர்வு நண்பா... தொடருங்கள் நண்பா...

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. தமிழ்வாசி - Prakash said...
    தமிழ்மணம் இணைத்து முதல் வாக்கும் போட்டாச்சு...

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  22. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    நல்ல தகவல் .தகவலுக்கு நன்றி .

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  23. AMVI said...
    பயனுள்ள கீரை வகைகள்.பகிர்வுக்கு நன்றி.
    முட்டை கோஸ். கீரை வகையை சார்ந்ததா?

    ஆமாம் சகோதரி
    முட்டைகோஸ் கீரை வகைதான்

    ReplyDelete
  24. கவி அழகன் said...
    பலவகைகீரைகளின் வல்லாரைக்கீரையே எனக்கு பிடிச்சிருக்கு

    அப்பிடியா நண்பரே

    மிக்க நன்றி

    ReplyDelete
  25. மகேந்திரன் said...
    வல்லாரைக் கீரையை
    வளைச்சி வளைச்சி
    சிறுவயதில்
    அம்மா திணிச்சிவிட்டது
    எதுக்குன்னு இப்போதான் தெரியுது....

    அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய
    தேவையான பதிவு நண்பரே.

    பதிவு நன்று.
    தமிழ்மணம் மூன்று.

    அப்பிடி சாப்பிட்டதாலே தானே எங்களுக்கு நல்ல நல்ல கவிதை கிடைக்கிறது .

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  26. Ramani said...
    தங்கள் பதிவுகள் படிக்கப் படிக்க
    அரிசி,கோதுமை முதலான தானிய அளவுகளை
    குறைத்துக்கொண்டு காய் கனிகள் கீரை
    முதலானவைகளின் அளவைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்.த.ம 4

    தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  27. காட்டான் said...
    வாழ்த்துக்கள் உங்களால் வித விதமான கீரை வகைகள் கேள்விப்படுகிறேன்.. எல்லாவற்றையும் சாப்பிட்டதில்லை இங்கு இரண்டு மூன்று வகையான கீரைகளே வருகின்றது இந்தியா வந்திருக்கும்போது அதிகமான கீரைகளை பாத்திருக்கின்றேன்.. சாப்பிட்டது குறைவே..

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. hanmugavel said...
    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  29. சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செல்லும்போது வாய்க்கால் ஓரம் உள்ள வல்லாரை கீரைகளை பச்சையாக சாப்பிட்ட ஞாபகம்....அருமை

    ReplyDelete
  30. கோவை நேரம் said...
    சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க செல்லும்போது வாய்க்கால் ஓரம் உள்ள வல்லாரை கீரைகளை பச்சையாக சாப்பிட்ட ஞாபகம்....அருமை

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  31. மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்..நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  32. செங்கோவி said...
    மிளகு, சீரகம் சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்..நன்றி ரமேஷ்.

    அப்பொழுது தான் பக்க விளைவுகளான ஒவ்வாமை ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்கள் நண்பரே

    ReplyDelete
  33. சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து ஆவலுடன் படித்துக்கொண்டு இருக்கின்றேன் நன்றி நண்பா

    ReplyDelete
  34. K.s.s.Rajh said...
    சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.தொடர்ந்து ஆவலுடன் படித்துக்கொண்டு இருக்கின்றேன் நன்றி நண்பா

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  35. வணக்கம் நண்பா,
    வீக்கெண்டில் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    அதான் வர முடியலை,
    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான பகிர்வு,

    இரும்புச் சத்தினை அதிகப்படுத்தும் கீரைகள் பற்றிய இனிமையான விளக்கப் பகிர்விற்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  36. கீரையைப்பற்றி அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  37. நலமிக்க தகவல்களைப் பகிர்நதமைக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  38. தூதுவளைக்கீரை கஷாயம் குடிச்சா இருமல் உடனடியாக குண்மாகும். மும்பையில் முள்ளங்கியும் கீரையுடந்தான் கிடைக்கும் கொஞ்சம் துவர்ப்புச்சுவையுடன் இருக்கு, வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து செய்தால் நல்லா இருக்கும்.முள்ளங்கி கீரையும் நிறைய சத்துக்கள் நிறைந்தது.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே