Monday, September 12, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -1

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்



என்ன இது வெறும் பலமொழியாகவே இருக்குன்னு
பார்க்கறீங்களா !



இந்த அவசர காலத்துல வெந்தும் வேகாமலும் ,பற்களால்
அரைத்தும் ,அரைக்காமலும் (அப்பிடியே விழுங்குதல் )
சாப்பிட்டோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம் .

உடல் ஆரோக்கியத்திற்காக நாளின் சில மணித்துளிகளை
ஒதுக்கினால் உடலும் ஆரோக்கியமாகும் .

அதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற் பயிற்சி
செய்ய ஜிம் போகணும் அதற்கு எங்கே நேரம் உள்ளது .
என்று நீங்கள் எண்ணலாம் .

ஏன் வீட்டிலேயே செய்யலாமே என்றால் அதற்கான
கருவிகள் வீட்டில் வாங்கி வைக்க பணமும் ,இடமும்
வேண்டும்.

வேண்டாமே கருவிகள் ஏதும் வேண்டாமே .
கருவிகள் உதவி இல்லாமல் நாம் உடற் பயிற்சி
செய்வோம் வாருங்கள் .

நமது உடலில் இருவகை தசைகள் உண்டு .அவை
மனதிர்கேற்றப்படி அசையும் தசைகள் ,மனதிற்கு
இசையாத தசைகள் அதாவது தற்செயலாக செயல்படும்
தசைகள் என்று உண்டு.


உடலில் சுமார் நாலாயிரத்து நூற்றிருபத்தாறு தசை நாறுகள்
இருப்பதாக உடற்பயிற்சி நூல்களில் குறிப்பிட்டுள்ளதாக
சொல்வார்கள் .

இந்த உடற்பயிற்சி மூலம் நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்
சோம்பல் ,நோய் போன்றவைகள் கிட்டே அண்டவிடாமல்
தடுப்பதோடு அல்லாமல் உடலும் பார்க்க அழகாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்யும்பொழுது மனதை சந்தோசமாக
வைத்துகொள்ளுங்கள் .

உடற்பயிற்சி செய்யும்பொழுது மிகவும் களைப்பாக இருந்தால்
சிறிது ஓய்வெடுத்து விட்டுத்தான் பின் தொடரவேண்டும் பயிற்சியை .

உடல் நலிந்தவர்கள் கடுமையான பயிற்சியை செய்யாமல் முதலில்
மூச்சுபயிற்ச்சி போன்ற சுலபான பயிற்சி செய்தால் போதும்.



காலையில் எழுந்ததும் -வாய் கொப்பளித்து பின் ஒரு குவளை
தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது.
(காப்பி குடிப்பது வேண்டாமே ,அது நல்லதல்ல )

காலை உணவு செரிமானம் ஆககூடியதாக மிகவும் இலகுவான
உணவையே எடுத்துக் கொள்ளுங்கள் (உதா: இட்லி போன்றவை )

மதியம் உணவை நன்கு பசித்த பின் உண்க.அப்பிடி சாப்பிடும்
பொழுது இடையிடையே நீர் அருந்தாமல் சாப்பிட்டு முடித்த
பின் தண்ணீர் அருந்தவும்.

உண்டபின் பகலில் உறங்குதல் வேண்டாம் .
(குட்டி தூக்கம் ஓ.கே. கும்பகர்ணன் தூக்கம் நோ)
குட்டித்தூக்கம் =மேக்ஸிமம் அரைமணி நேரம் )

மாலையில் சிற்றுண்டிக்கு பதிலாக ஏதேனும் சத்துள்ள
பானங்கள் அருந்தலாம் .

இரவில் உண்ட உடனே படுக்காமல் சிறிது நடந்து ,அல்லது
நண்பர்களுடன் உரையாடல் ,புத்தகம் படித்தல் இப்பிடி கொஞ்ச
நேரம் சென்ற பிறகே உறங்குதல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம்
அதிகாலையே .நேரமில்லை என்றால் மாலை செய்யலாம் .

ஆரம்ப உடற்பயிற்சி செய்பவர்கள் ஏதேனும் ஒரு நேரம்
மட்டுமே செய்யலாம் ,செய்யணும்.

நிலைக்கண்ணாடி முன் நின்று சிலர் உடற்பயிற்சி செய்வது
அவர்கள் செய்யும் பயிற்சியில் தவறு உள்ளதா என அறிய .

மட்டுமன்றி பயிற்சியின் போது தசை நார்கள் சுருங்கி
விரிவதை நிலைகண்ணாடியில் பார்க்குபொழுது மனம்
ஒருமுக பட்டு உவகையில் சீக்கிரம் தசைகள் வடிவுகள்
பெறுகின்றன .

ஆரம்பிக்கும்பொழுது சிறிது சிறிதாக ஆரம்பித்து போக போக
அதிகமாக்க வேண்டும் நேரத்தையும் ,பயிற்சிகளின் எண்ணிக்கையும்.

ஆண்--பெண் ---சிறுவர் சிறுமியர் யாவரும் அவரவர்களுக்கு ஏற்ற
உடற்பயிற்சி செய்யலாம் .

இனி வரும் பதிவுகளில் கருவிகள் உதவியின்றி உடற்பயிற்சி
செய்வது எப்பிடி என்பதை பார்ப்போம் நண்பர்களே .


தொடரும்....

என்ன நட்புகளே இந்த சப்ஜெக்ட் பிடித்திருக்கா அதாவது
இதனைப் பற்றி எழுதட்டுமா வேண்டாமா என்பதை
உங்கள் ஆதரவும் ,ஆர்வமும் தீர்மானிக்கும் நண்பர்களே .

தங்கள் கருத்தினை சொல்லுங்கள் நண்பர்களே

நன்றி



 



நடை பயிற்சி நல்லது உடலுக்கு .

அதிகாலையில் நடை பயிலுங்கள்

உடல் சீரடையும் ,சுவாசம் சீரடையும் .

இரத்தவோட்டம் தடையின்றி இருக்கும்.

தேவையற்ற கொழுப்பு சேராது .

உடல் ஆரோக்கியமாகும் .

45 comments:

  1. வணக்கம் மருத்துவரே .....அருமை ..

    ReplyDelete
  2. கோவை நேரம் said...
    வணக்கம் மருத்துவரே .....அருமை ..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. stalin said...
    சூப்பர் .......

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. உறுதியாகப் பிடித்திருக்கிறது
    நிச்சயம் தொடரவும்
    த.ம 2

    ReplyDelete
  5. Ramani said...
    உறுதியாகப் பிடித்திருக்கிறது
    நிச்சயம் தொடரவும்
    த.ம 2

    நன்றி நண்பரே தங்கள் அன்பான கருத்துக்கு

    ReplyDelete
  6. ஆரோக்கியமான பயனுள்ள பதிவு நண்பா

    ReplyDelete
  7. உடற்பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் வலுசேர்க்கும்.... ஆரோக்கிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு.கருவிகள் இன்றி உடல் பயிற்சி பற்றி அறிய காத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  9. இனிய காலை வணக்கம் நண்பா,
    உடற் பயிற்சி செய்வதன் முக்கியத்துவம்,
    உடற் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என அசத்தலான இடுகையினைத் தந்திருக்கிறீங்க.
    நன்றி நண்பா.

    ReplyDelete
  10. K.s.s.Rajh said...
    ஆரோக்கியமான பயனுள்ள பதிவு நண்பா


    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  11. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Super post . . Very useful

    வாழ்த்துக்கு நன்றி ராஜா

    ReplyDelete
  12. மாய உலகம் said...
    உடற்பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் வலுசேர்க்கும்.... ஆரோக்கிய பகிர்வுக்கு நன்றி

    தமிழ் மணம் 2

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  13. RAMVI said...
    பயனுள்ள பதிவு.கருவிகள் இன்றி உடல் பயிற்சி பற்றி அறிய காத்திருக்கிறேன். நன்றி.

    காத்திருப்பை பூர்த்தி செய்வேன் சகோதரி

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  14. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் நண்பா,
    உடற் பயிற்சி செய்வதன் முக்கியத்துவம்,
    உடற் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என அசத்தலான இடுகையினைத் தந்திருக்கிறீங்க.
    நன்றி நண்பா.

    காலை வணக்கம் நண்பரே

    தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. உடற் பயிற்சி பதிவு நல்லாயிருக்கு ரமேஸ்...
    நான் வாழைப்பழ சோம்பேறி...
    பொண்ணோட விளையாடரோதொட சரி...
    தொடருங்கள்...

    ReplyDelete
  16. நல்ல விஷயம்..இதைத் தொடர்வதில் என்ன யோசனை?

    ReplyDelete
  17. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் நண்பா,
    உடற் பயிற்சி செய்வதன் முக்கியத்துவம்,
    உடற் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என அசத்தலான இடுகையினைத் தந்திருக்கிறீங்க.
    நன்றி நண்பா.

    காலை வணக்கம் நண்பரே

    தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    September 12, 2011 9:04 AM
    Blogger ரெவெரி said...

    உடற் பயிற்சி பதிவு நல்லாயிருக்கு ரமேஸ்...
    நான் வாழைப்பழ சோம்பேறி...
    பொண்ணோட விளையாடரோதொட சரி...
    தொடருங்கள்...

    முயற்ச்சி செய்து பாருங்கள் நண்பரே

    ReplyDelete
  18. Blogger செங்கோவி said...

    நல்ல விஷயம்..இதைத் தொடர்வதில் என்ன யோசனை//

    தொடற்கிறேன் நண்பரே

    ReplyDelete
  19. TM 7 பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  20. அழகாகச் சொல்லிட்டீங்க. இப்படி எங்காவது படிக்கும்போது, மனதில் ஒரு வேகம் வரும், 2,3 நாட்கள் செய்துபோட்டு, பின் அலுப்பாக இருக்கும், இன்றுவிட்டு நாளை செய்வோமே என நினைப்பது... பின்பு அப்படியே விட்டுவிடுவது... இப்படியே காலம்போகுது:))).

    ReplyDelete
  21. Blogger விக்கியுலகம் said...

    TM 7 பகிர்வுக்கு நன்றி!

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  22. athira said...

    அழகாகச் சொல்லிட்டீங்க. இப்படி எங்காவது படிக்கும்போது, மனதில் ஒரு வேகம் வரும், 2,3 நாட்கள் செய்துபோட்டு, பின் அலுப்பாக இருக்கும், இன்றுவிட்டு நாளை செய்வோமே என நினைப்பது... பின்பு அப்படியே விட்டுவிடுவது... இப்படியே காலம்போகுது:)))//

    ஹாஹா உங்கள் பதிலில் ரமேஸை பார்க்கிறேன்

    ReplyDelete
  23. த.ம.8

    உடல் நலம் சார்ந்த பதிவுகளாக எழுதி வருகிறீர்கள்.வாழ்த்தும்,நன்றியும்,ரமேஷ்!

    ReplyDelete
  24. நண்பா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் சிரமம் பார்க்காது.அது எவ்வாறு செயவது அந்த கோடிங்கை எனது மெயிலுக்கு அனுப்ப முடியுமா?

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...
    த.ம.8

    உடல் நலம் சார்ந்த பதிவுகளாக எழுதி வருகிறீர்கள்.வாழ்த்தும்,நன்றியும்,ரமேஷ்!

    வாழ்த்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  26. K.s.s.Rajh said...
    நண்பா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் சிரமம் பார்க்காது.அது எவ்வாறு செயவது அந்த கோடிங்கை எனது மெயிலுக்கு அனுப்ப முடியுமா?

    உங்கள் மெயில் ஐடி நண்பரே

    ReplyDelete
  27. உடற்பயிற்சி செய்வதினால்

    புலன்களும் பலனாகும்

    பலன்களும் புலனாகும் ....

    தொடருங்கள் நண்பரே..

    ReplyDelete
  28. டாக்டர் அருமையான வழிகள் சொல்லிபுட்டீங்க, நானும் இனி நாளையில இருந்து வீட்டுலையே பயிற்ச்சி செய்யப்போறேன் நன்றி..

    ReplyDelete
  29. உபயோகமான பதிவு,,

    த,ம 12

    ReplyDelete
  30. பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  31. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  32. மகேந்திரன் said...
    தமிழ்மணம் 10

    உடற்பயிற்சி செய்வதினால்

    புலன்களும் பலனாகும்

    பலன்களும் புலனாகும் ....

    தொடருங்கள் நண்பரே..



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  33. MANO நாஞ்சில் மனோ said...
    டாக்டர் அருமையான வழிகள் சொல்லிபுட்டீங்க, நானும் இனி நாளையில இருந்து வீட்டுலையே பயிற்ச்சி செய்யப்போறேன் நன்றி..



    செய்யுங்கள் நண்பரே ! சந்தோசம்.

    ReplyDelete
  34. Raazi said...
    உபயோகமான பதிவு,,


    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  35. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  36. நானும் கடந்த 20- வருடங்களாக என் வயதுக்குத்தகுந்தபடி ரெகுலராக உடற்பயிற்சி செய்து வருகிரேன். நீங்க சொல்லி இருப்பது முற்றிலும் உண்மைதான். ஹெல்த் கேர் எல்லாருமே எடுத்துக்கொள்வது நல்லதுதான்.அரைமணி நேரம் நடைப்பயிற்சி, 15 நிமிடம் பிரானாயாமம், 15 நிமிடம் யோகா 10 நிமிடம் மெடிடேஷன் என்று செய்து வருகிரேன்.

    ReplyDelete
  37. Lakshmi said...
    நானும் கடந்த 20- வருடங்களாக என் வயதுக்குத்தகுந்தபடி ரெகுலராக உடற்பயிற்சி செய்து வருகிரேன். நீங்க சொல்லி இருப்பது முற்றிலும் உண்மைதான். ஹெல்த் கேர் எல்லாருமே எடுத்துக்கொள்வது நல்லதுதான்.அரைமணி நேரம் நடைப்பயிற்சி, 15 நிமிடம் பிரானாயாமம், 15 நிமிடம் யோகா 10 நிமிடம் மெடிடேஷன் என்று செய்து வருகிரேன்.

    ஆஹா அருமை அம்மா அருமை

    இப்பிடித்தான் இருக்க வேண்டுமம்மா

    சந்தோசமாக இருக்கு

    ReplyDelete
  38. ஆரோக்கியm பேண பயனுள்ள பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. ஆதிரா said...
    ஆரோக்கியm பேண பயனுள்ள பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்.

    தங்களை வரவேற்கிறேன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  40. யோகா படிக்கலாம் வாங்கவும், உடற்பயிற்சி செய்வொம்-1ம் இன்று வாசித்தேன் மற்றவை பின்பு வாசிப்பேன் மிக்க நன்றி. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www. kovaikkavi.wordpress.com

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே