Tuesday, September 13, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -2




நண்பர்களே உடற்பயிற்சி செய்யும் காலை நேரத்தில் 
சுவாசத்தை வாயினால் உள்ளிழுக்கவும் வெளியில் 
விடுவதும் தவறு.


அதே போல் சுவாசத்தை மிகுதியாக அடக்குதலும் தவறு.
முதலில் சுலபாமான உடற்பயிற்சியிலிருந்து ஆரம்பிப்போம்.



பயிற்சி -1

முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும்.

பிறகு குதிக்கால்களை மாத்திரம் உயர்த்தவும்.

பிறகு இரு கைகளையும் மார்புக்கு நேராக விறைப்பாக நீட்டவும்.

பிறகு சுவாசத்தை மெதுவாக உள்ளுக்கு இழுத்து அடக்கிக்
கொண்டு உட்கார வேண்டும்.

அப்பிடி உட்காரும் பொழுது நீட்டிய கரங்களை தலைக்கு
மேல் உயர்த்த வேண்டும்.

பிறகு எழுந்து முதல் நிலைக்கு வந்த பின் ,சுவாசத்தை
வெளியில் விட்டு ரிலாக்ஸ் ஆகவும்.

குதிகால் உயர்த்திய படியே இருக்கட்டும் .இப்பொழுது
கைகள் பழையபடி மார்புக்கு நேராக நீட்டியபடி இருக்கும்.

பிறகு மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு
உட்கார வேண்டும்.

பழையபடியே உட்காரும்பொழுதே கைகளை தலைக்கு
மேலே உயர்த்தவும்.

பிறகு பழைய படி எழுந்து மூச்சை விட்டு ரிலாக்ஸ் செய்யவும்.
இப்பிடியே பத்திலிருந்து இருபது தடவைகள் செய்யவும்.

ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டிரண்டாக எண்ணிக்கையை
கூட்டவும்.

அவரவர் உடல் பலத்தை பொறுத்து நூறு வரை செய்யலாம்.

குறிப்பு :-

உட்காரும் முன் மூச்சை உள்ளுக்கு இழுத்து கொள்ளவும்.

பிறகு எழுந்த பின்தான் மூச்சை வெளியில் விட வேண்டும்.

உட்காரும் பொழுது மார்புக்கு நேராக நீட்டிய கைகளை
தலைக்கு மேலே உயர்த்த வேண்டும் .

எழும்பொழுது மீண்டும் கைகளை மார்புக்கு நேராக
கொண்டு வரவேண்டும்.

உட்கார்ந்து எழும்பொழுது குதிகால் உயர்த்தியே இருக்க
வேண்டும்.

பயன்கள் :-

   இந்த உடற்பயிற்சியால் வரும் பயன்கள்
இதனால் கண்டைத்தசை,கைகளின் தசை நார், நரம்புகள்
முதலியவை நன்கு முறுக்கேறும்.

உடலில் இரத்த வோட்டம் நன்றாக பரவி சுறுசுறுப்பை
உண்டு பண்ணுகிறது.

38 comments:

  1. நன்றி பகிர்வுக்கு ரமேஷ். தொடர்ந்து மற்ற உடற்பயிற்சி பற்றியும் சொல்லுங்க நாங்களும் பயன் பெறுகிறோம்.நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா,
    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான பதிவு.

    நன்றி.

    ReplyDelete
  3. இதெல்லாம் சரி மாப்ள...ஆமா இது என்ன நண்பிகளுக்கான பதிவா...ஏன்னா படமெல்லாம் அப்படி இருக்கேன்னு கேட்டேன் ஹிஹி!

    ReplyDelete
  4. கண்டிப்பா பின்பற்றலாம்

    ReplyDelete
  5. ஆஹா... இந்தக்காலத்தில் அனைவருக்கு தேவையான விஷயம், எளிமையா சொல்லி இருக்கீங்க, தொடருங்கள்!

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவிற்கு நன்றி..
    தம-7

    ReplyDelete
  7. கடவுளே உடற்பயிற்சி செய்யாதுவிட்டால் விட மாட்டீங்கபோல இருக்கே அவ்வ்வ்வ்:)). இனி ஆரம்பிக்கத்தான் வேண்டும்.

    நல்ல விளக்கமாக எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete
  8. வணக்கம் M.R சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

    அருமையாக சொல்லியிருக்கீங்க சார்! அனைவரும் உடற்பயிற்சி செய்வோம்!

    ReplyDelete
  9. படமும் பதிவும் மிக எளிதாக
    புரிந்து கொள்ளும் படி உள்ளது
    குறிப்பு எனக் கொடுப்பது மீண்டும்
    மிகச் சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பிரயோசனமான பகிர்வு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. எளிமையான உடல்பயிற்சி சொல்லி தந்துட்டீங்க நன்றிங்க...

    ReplyDelete
  12. அருமையான சுவாரஸ்யம் மிகுந்த ஆரோக்கியமான பதிவு.அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash said...

    பயனுள்ள பதிவு...

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    அருமையான பதிவு .

    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. RAMVI said...

    நன்றி பகிர்வுக்கு ரமேஷ். தொடர்ந்து மற்ற உடற்பயிற்சி பற்றியும் சொல்லுங்க நாங்களும் பயன் பெறுகிறோம்.நன்றி.

    நன்றி சகோதரி

    தொடர்ந்து வரும் சகோதரி
    தங்கள் அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  16. நிரூபன் said...

    வணக்கம் நண்பா,
    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான பதிவு.

    நன்றி.

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  17. விக்கியுலகம் said...

    இதெல்லாம் சரி மாப்ள...ஆமா இது என்ன நண்பிகளுக்கான பதிவா...ஏன்னா படமெல்லாம் அப்படி இருக்கேன்னு கேட்டேன் ஹிஹி!

    இல்ல மாம்ஸ் பொதுவானது தான்

    இதுக்கு தகுந்த படம் வேணுமே அதுக்கு தான்

    ReplyDelete
  18. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    கண்டிப்பா பின்பற்றலாம்

    பின்பற்றுங்கள் நண்பரே

    ReplyDelete
  19. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆஹா... இந்தக்காலத்தில் அனைவருக்கு தேவையான விஷயம், எளிமையா சொல்லி இருக்கீங்க, தொடருங்கள்!

    தொடர்கிறேன் நண்பரே

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  20. வேடந்தாங்கல் - கருன் *! said...

    பயனுள்ள பதிவிற்கு நன்றி..
    தம-7

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. இப்போதெல்லாம் உடல்நலக்குறிப்புகள் என்றதும் உடனே நினைவுக்கு வருவது தங்கள் வலைப்பக்கம் தான் அன்பரே.

    ReplyDelete
  22. athira said...
    கடவுளே உடற்பயிற்சி செய்யாதுவிட்டால் விட மாட்டீங்கபோல இருக்கே அவ்வ்வ்வ்:)).
    இனி ஆரம்பிக்கத்தான் வேண்டும்.

    செஞ்சிடுங்க ஹா ஹா

    நல்ல விளக்கமாக எழுதியிருக்கிறீங்க.

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  23. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் M.R சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

    அருமையாக சொல்லியிருக்கீங்க சார்! அனைவரும் உடற்பயிற்சி செய்வோம்!

    வணக்கம் மணி சார்

    தங்கள் ஆதரவிற்கு நன்றி

    ReplyDelete
  24. Ramani said...
    படமும் பதிவும் மிக எளிதாக
    புரிந்து கொள்ளும் படி உள்ளது
    குறிப்பு எனக் கொடுப்பது மீண்டும்
    மிகச் சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  25. மதுரன் said...
    பிரயோசனமான பகிர்வு
    பகிர்வுக்கு நன்றி

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  26. MANO நாஞ்சில் மனோ said...
    எளிமையான உடல்பயிற்சி சொல்லி தந்துட்டீங்க நன்றிங்க...


    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே


    தமிழ்மணம் பத்து...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. K.s.s.Rajh said...
    அருமையான சுவாரஸ்யம் மிகுந்த ஆரோக்கியமான பதிவு.அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

    கண்டிப்பாக.... வாங்க நண்பரே

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. முனைவர்.இரா.குணசீலன் said...
    இப்போதெல்லாம் உடல்நலக்குறிப்புகள் என்றதும் உடனே நினைவுக்கு வருவது தங்கள் வலைப்பக்கம் தான் அன்பரே.

    தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  29. எளிமையா சொல்லி இருக்கீங்க ரமேஷ்... தொடருங்கள் நண்பரே...

    ReplyDelete
  30. ரெவெரி said...
    எளிமையா சொல்லி இருக்கீங்க ரமேஷ்... தொடருங்கள் நண்பரே...

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  31. எனக்கு ஆர்த்தரைட்டீஸ் ப்ராப்லம் இருப்பதால் கீழ உக்காந்து எழுந்து போல உடற் பயிற்சிகள் எதுவும் செய்ய முடியாது அதுக்காகல்லாம் சும்ம இருந்துட மாட்ட்டேன் சேர்லயோ கட்டில்லயோ உக்காந்து என்னால முடிஞ்ச் உடற்பயிற்சி செய்து விடுவேன் என்ங்காவது வெளி ஊர் போனா உடற்பயிற்சி செய்ய முடியாமப்போகும் அப்பல்லாம் என்னமோ குறை யாகவே தோனும்.

    ReplyDelete
  32. Lakshmi said...

    எனக்கு ஆர்த்தரைட்டீஸ் ப்ராப்லம் இருப்பதால் கீழ உக்காந்து எழுந்து போல உடற் பயிற்சிகள் எதுவும் செய்ய முடியாது அதுக்காகல்லாம் சும்ம இருந்துட மாட்ட்டேன் சேர்லயோ கட்டில்லயோ உக்காந்து என்னால முடிஞ்ச் உடற்பயிற்சி செய்து விடுவேன் என்ங்காவது வெளி ஊர் போனா உடற்பயிற்சி செய்ய முடியாமப்போகும் அப்பல்லாம் என்னமோ குறை யாகவே தோனும்


    பரவாயில்லை அம்மா ,நம்மலால் முடிந்த உடற்பயிற்சி செய்தால் போதும்.நமக்கு தேவை உடல் சுருசுருப்பு மட்டுமே,சோம்பல் கூடாது என்பதர்க்கு தானே உடற்பயிற்சி நீங்கள் நடை பயிற்சி மேற்கொண்டாலே போதும்மா.

    ReplyDelete
  33. பயனுள்ள பதிவு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  34. உடல்நலம் பேணுதல்
    ஆரோக்கிய வாழ்விற்கு
    உடற்பயிற்சி அவசியம் ...
    பதிவு மிக எளிமையா இருக்கு நண்பரே.
    தொடருங்கள்..

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே