Tuesday, September 20, 2011

பூவிற்குள் இருக்கும் ரகசியம்

பூக்களின் பலன்கள் -பாகம் -4

பூக்களில் ரோஜா ,மல்லி ,செம்பருத்தி இவைகளின்
பலன்கள் தெரிந்து கொண்டோம் ,நண்பர்களே
இவற்றினை தொடர்ந்து நாம் பார்க்க போவது ..



வெள்ளை அல்லிப்பூ :-



இதுவும் உடல் சூட்டை தணிக்கும் .
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு தொடர்பாக ஏற்படக்
கூடிய பிணிகளை இது ஆற்றும்.
கண்களில் தோன்றும் நோய்களுக்கு அல்லிப்பூவை அரைத்து
கட்டலாம் .

அல்லி சர்பத்:-

   வெள்ளை அல்லி 50 கிராம் ,ஆவாரம்பூ 50 கிராம் இரண்டையும்
இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு
லிட்டராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி ,அன்நீருடன் ஒரு
கிலோ சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி பாகு பதம் வந்ததும்
இறக்கி ஆறவைத்து பாட்டில்களில் ஊற்றி மூடி வைக்க
வேண்டும்.

இந்த சிற்பத்தை காய்ச்சி ஆற வைத்து நுறு மில்லி பாலில்
இரண்டு அவுன்ஸ் அளவு கலந்து காலை மாலை சாப்பிட்டு
வர சிறுநீரக கோளாறுகள் ,நீரிழிவு ,மற்றும் ஆண்களின்
பிறப்புறுப்பு ரணங்கள் ,உஷ்ண நோய்கள் யாவும் தீரும்.

ஒரு அவுன்ஸ் அல்லிமலர் சாருடன் இரண்டு கிராம் செந்தூரம்
கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எல்லா வகையான
காச நோய்களும் தீரும்.

தாமரை பூ:-


வெள்ளை தாமரை :-



  வெள்ளை தாமரை பூவை பறித்து வந்து,சுத்தம் செய்து நீரிலிட்டு
காய்ச்சி கசாயமாக்கி காலை,மாலை இருவேளை அரை தம்ளர்
வீதம் குடித்து வர தலையிலுள்ள செம்பட்டை முடி கருத்த
நிறமாக மாறும்.

இரத்த கொதிப்பு அடங்கும்.இருதயம் பலப்படும்.

இம்மலரை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்தும் குடிக்கலாம் .
இதில் வெள்ளிச் சத்துள்ளது .மூளைக்கு பலம் தரும்.

செந்தாமரைப்பூ :-



   இது தங்க சத்துடையது .இரத்தத்தை சுத்தி செய்யும்.
இதய பலம் உண்டாகும்.இதுவும் இரத்த கொதிப்பு ,
மாரடைப்பு நீக்கும்.



அகத்திப் பூ :-

    இப்பூவை சமைத்து உண்டால் வாய்ப்புண் ,வயிற்றுப் புண்
குணமாகும்.உடலின் வெப்பம் தணிந்து உடல் தேரும் .

ஜீரண சக்தி ஏற்படும்.

இப்பூவை நிழலில் உலர்த்தி வைத்தும் பயன்படுத்தலாம் .





எங்கேயும் எப்போதும் பட பாடல் ஒன்று


30 comments:

  1. பூவைப்பற்றி பூவான பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வழக்கம்போல பிரயோசமான தகவல்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. பூவுக்குள் இருக்கும் ரகசியங்கள் அருமை நண்பரே

    ReplyDelete
  4. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. மாப்ள பூப்பூவாய் பூத்த பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  6. மென்மையான பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. மணமணக்கும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பூப்பூவான மருத்துவத்துக்கு நன்றி மக்கா...!!!

    ReplyDelete
  10. கண்ணுக்கு மட்டுமன்றி
    உடலுக்கும் நன்மை பயக்கும்
    பூக்கள் பற்றிய தங்கள் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 4

    ReplyDelete
  11. மலர்களின் மருத்துவகுணங்கள்
    மனதை மயக்குகிறது நண்பரே.....

    ReplyDelete
  12. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கோவிந்தா....
    கோவிந்தா...:))
    அல்லிப்பூ, தாமரைப்புவெல்லாம் சாப்பிட முடியுமோ? அவ்வ்வ்வ்வ்வ்:)). எனக்கிது முழுக்க முழுக்க புதுத் தகவல்.

    மிக நல்ல பகிர்வு.

    ReplyDelete
  14. மாய உலகம் said...
    பூவைப்பற்றி பூவான பதிவு பகிர்வுக்கு நன்றி

    நன்றி சகோ..

    ===========================

    மதுரன் said...
    வழக்கம்போல பிரயோசமான தகவல்
    பகிர்வுக்கு நன்றி

    நன்றி நண்பரே

    -----------------------------
    K.s.s.Rajh said...
    பூவுக்குள் இருக்கும் ரகசியங்கள் அருமை நண்பரே

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மீண்டும் ஒரு பயனுள்ள பதிவை தந்ததற்கு நன்றிகள்..

    நன்றி நண்பரே

    ===========================

    விக்கியுலகம் said...
    மாப்ள பூப்பூவாய் பூத்த பதிவுக்கு நன்றி!

    நன்றி மாம்ஸ்
    ========================


    அரசன் said...
    மென்மையான பகிர்வுக்கு நன்றிங்க

    நன்றி நண்பரே

    =========================
    RAMVI said...
    மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  16. செங்கோவி said...
    மணமணக்கும் பகிர்வுக்கு நன்றி.

    நன்றி நண்பரே

    =========================
    MANO நாஞ்சில் மனோ said...
    பூப்பூவான மருத்துவத்துக்கு நன்றி மக்கா...!!!

    நன்றி நண்பரே

    ===========================

    amani said...
    கண்ணுக்கு மட்டுமன்றி
    உடலுக்கும் நன்மை பயக்கும்
    பூக்கள் பற்றிய தங்கள் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 4

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  17. மகேந்திரன் said...
    மலர்களின் மருத்துவகுணங்கள்
    மனதை மயக்குகிறது நண்பரே.....

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    =============================

    Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    நன்றி ஐயா

    ==============================

    athira said...
    கோவிந்தா....
    கோவிந்தா...:))

    திருப்பதி போனீங்களா !

    அல்லிப்பூ, தாமரைப்புவெல்லாம் சாப்பிட முடியுமோ? அவ்வ்வ்வ்வ்வ்:)). எனக்கிது முழுக்க முழுக்க புதுத் தகவல்.

    சாப்பிடலாமே


    மிக நல்ல பகிர்வு.

    நன்றி சகோ...

    ReplyDelete
  18. பூவை பற்றி சுவையான செய்தி .வாழ்த்துக்கள் .ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  19. தொடர்ந்து கலக்கரிங்களே

    ReplyDelete
  20. புதிய தகவல்கள்....

    அறிந்துக்கொண்டேன்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  21. kobiraj said...
    பூவை பற்றி சுவையான செய்தி .வாழ்த்துக்கள் .ஓட்டு போட்டாச்சு

    மிக்க நன்றி நண்பரே

    ==============================
    தமிழ்வாசி - Prakash said...
    தொடர்ந்து கலக்கரிங்களே

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ===============================

    # கவிதை வீதி # சௌந்தர் said...
    புதிய தகவல்கள்....

    அறிந்துக்கொண்டேன்...
    பகிர்வுக்கு நன்றி...

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  22. கோவிந்தா கோவிந்தா பாடலைக் கேட்டவாறு பின்னூட்டத்தை டைப் பண்றேன்..

    பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  23. பூக்களின் மருத்துவ குணங்களை அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  24. நிரூபன் said...
    கோவிந்தா கோவிந்தா பாடலைக் கேட்டவாறு பின்னூட்டத்தை டைப் பண்றேன்..

    பகிர்விற்கு நன்றி..

    நன்றி நண்பரே பாடல் நல்லா இருக்கு இல்ல

    ReplyDelete
  25. நிரூபன் said...
    பூக்களின் மருத்துவ குணங்களை அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  26. கோவிந்தா கோவிந்தா...:) திருப்பதிப் படி இன்னும் ஏறவில்லை...

    பூ இருந்தபோது சாப்பிடலாம் எனத் தெரியாது, இப்போ சாப்பிடலாம் என அறியும்போது பூவில்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  27. athira said...

    பூ இருந்தபோது சாப்பிடலாம் எனத் தெரியாது, இப்போ சாப்பிடலாம் என அறியும்போது பூவில்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).

    அடடா என்னால் மெயிலிலும் அனுப்ப முடியாதே !

    என்ன பண்ணலாம் ?

    சரி சரி விடுங்க ,
    நீங்க இங்க வரும்பொழுது நான் நிறைய பறித்து தருகிறேன் .

    ReplyDelete
  28. அனைத்துமே பயனுள்ள தகவல்கள் நண்பரே..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  29. வழக்கமாக நல்ல தகவல்கள். நன்றி

    ReplyDelete
  30. பூவைப்பற்றி பூவான பதிவு...நன்றி நண்பரே...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே