Monday, September 19, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -4

கருவிகள் இன்றி உடற்பயிற்சி செய்யலாம் வாங்க
பாகம் -4

நண்பர்களே தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி

இதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யலாம் வாங்க
பதிவில் இரண்டு பயிற்சி சொல்லி இருந்தேன்

பயிற்சி செய்து கொண்டு இருப்பீர்கள் என
நினைக்கிறேன்

அந்த பதிவுகள் படிக்காதவர்கள் கீழே
உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளலாம் .

பயிற்சி -1

பயிற்சி-2




இன்று பார்க்க போவது

பயிற்சி 3

இடது கை மணிக்கட்டை ,வலது கையால் இறுகப்
பிடிக்க வேண்டும்.

சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து தம் கட்ட வேண்டும்.

இப்பொழுது வலது கையின் முழு பலத்தையும் செலுத்தி
இடது கையை கீழ் நோக்கி அழுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இடது கையினை முழு பலத்தோடு மேல்
நோக்கி செலுத்த வேண்டும்.(அதாவது வலது கையின் செயலை
எதிர்த்து அதன் எதிர் திசையில் தள்ள வேண்டும்.)

இடது கையால் நல்ல பலமாக தள்ளி ,இடது கையானது
மடங்கி இடது தோளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இடது கை இடது தோளை சென்றடைந்த உடன் அடக்கிய
சுவாசத்தை தளர்த்த வேண்டும்.

மடக்கிய இடது கையை வலது கையால் பிடித்த வண்ணமே
தளர்த்தி நீட்டி முன்போல் பழைய நிலைக்கு கொண்டு
வர வேண்டும் .

பிறகு இதே பயிற்சியை வலது கைக்கும் செய்ய வேண்டும் .

வலது கைக்கு செய்யும் பொழுது
வலது கை மேல் நோக்கி தள்ளவும் .இடது கை வலது கையின்
மணிக்கட்டை பிடித்து கீழ் நோக்கி தள்ள வேண்டும்.

வலது கை வலது தோள் பட்டையை அடைந்த வுடன் மூச்சை
தளர்த்தி ,கைகளை முன் நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

இதே போல கைகள் தளர்ந்து போகும் வரை செய்ய வேண்டும்.

கவனம்:-

     கைகளை மேல் நோக்கி கொண்டு செல்லும் பொழுது
மூச்சை உள்ளுக்கு இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும்.


கைகள் அதற்கான தோளினை அடைந்த உடன் மூச்சினை
தளர்த்த வேண்டும்.


கைகளை கீழ் நோக்கி தளர்த்தும் பொழுதும் மணிக்கட்டை
பிடித்த மாதிரியே தளர்த்த வேண்டும்.


இடது கைக்கு பயிற்சி குடுக்கும் பொழுது ,இடது கை மேல்
நோக்கி தள்ளவும்.வலது கை கீழ் நோக்கி தள்ளவும் .


வலது கைக்கு பயிற்சி குடுக்கும் பொழுது, வலது மேல்
நோக்கியும் ,இடது கை கீழ் நோக்கியும் தள்ள வேண்டும்.

மேலுள்ள பயிற்சி செய்முறைகளை நன்றாக புரிந்து கொள்ளும்
வரை ஒருதடவைக்கு பல தடவைகள் படித்த பின்
பயிற்சியை தொடரவும்.

பயன்கள் :-

    இதனால் கைகளின் தசைகள் முறையாக திரண்டு ,உருண்டு
நரம்பு குழாய்கள் பருத்து முறுக்கேறி வலிமை அடைகிறது.

இவ்வுடற் பயிற்சி செய்யும் பொழுது மனம் ஒருமுக படுத்தி
அதாவது உங்கள் எண்ணம் முழுதும் கைகளில் ,அதன் தசைகளில்
கவனம் செலுத்துங்கள் .

நாளடைவில் கைகளில் ஏற்படும் மாற்றங்கள் நீங்கள் உணர்வீர்கள்

என்ன நண்பர்களே பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா .

பயிற்சி தொடரும்.......


நன்றி


30 comments:

  1. தொடர்ந்தும் வருகிறேன்
    பயிற்சி செய்தும் வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு... தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரைட்டு..
    நாளையிலிருந்து பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடுவோம்...

    ReplyDelete
  4. சரி நாளையில இருந்து தொடன்கிற வேண்டியதுதான்

    ReplyDelete
  5. நண்டு@நொரண்டு -ஈரோடு said...
    தொடர்கிறோம் ...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. Ramani said...
    தொடர்ந்தும் வருகிறேன்
    பயிற்சி செய்தும் வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. மதுரன் said...
    அருமையான பதிவு... தொடர வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ரைட்டு..
    நாளையிலிருந்து பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடுவோம்...

    ஆரம்பித்து விடுங்கள் நண்பரே

    அப்பிடியே பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்

    ReplyDelete
  9. வைரை சதிஷ் said...
    சரி நாளையில இருந்து தொடன்கிற வேண்டியதுதான்

    சந்தோசம் தொடங்குங்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உடற்பயிற்சிக்கு அருமையான டிப்ஸ் குடுத்திருக்கீங்க சார்! ரொம்ப நன்றி!

    ReplyDelete
  11. உபயோகமான பதிவு தொடரட்டும்...!!

    ReplyDelete
  12. இந்த பயிற்சியை பெண்களும் செய்யலாமா?

    ReplyDelete
  13. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    உடற்பயிற்சிக்கு அருமையான டிப்ஸ் குடுத்திருக்கீங்க சார்! ரொம்ப நன்றி!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ said...
    உபயோகமான பதிவு தொடரட்டும்...!!

    தொடர்கிறேன் நண்பரே

    ReplyDelete
  15. RAMVI said...
    இந்த பயிற்சியை பெண்களும் செய்யலாமா?

    கைகளுக்கு பலம் கிடைக்க ஒன்றிரண்டு தடவை செய்யலாம் சகோதரி .

    மற்ற படி வீட்டு வேலைகலான கூட்டுதல் ,துணி துவைத்தல், சமைத்தல் ,மாவாட்டுதல் ?, போன்றவைகளே சிறிய உடற்பயிற்சியை சேர்ந்தது தானே சகோதரி .

    இதனை ரெகுலராக செய்யும் பொழுது அது தேவை இல்லை சகோதரி

    ReplyDelete
  16. அருமையான பதிவு... தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நல்ல தொடர்!
    நடக்கட்டும்!

    ReplyDelete
  18. எல்லா வீட்டு வேலைகளும் நானே செய்து வருவதால் கைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைத்து விடுகிரது.

    ReplyDelete
  19. பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

    ReplyDelete
  20. பயனுள்ள உடற்பயிற்சி பற்றிய பகிர்வு நன்றி சகோ

    ReplyDelete
  21. இதைப் படிச்சாப் போதாதா..கண்டிப்பா செஞ்சாத்தான் பலன் இருக்குமா..#சோம்பேறித்தனம்

    ReplyDelete
  22. அருமையான பதிவு... தொடர வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  23. பகிர்வுக்கு நன்றிகள் ,

    ReplyDelete
  24. வணக்கம் பாஸ்
    கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    வர முடியலை...

    எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

    மன்னிக்க வேண்டும்!

    ReplyDelete
  25. எமது கைகளைச் சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்குச் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகள் பற்றிய அருமையான டிப்ஸ்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.

    மிக்க நன்றி.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே