Sunday, September 18, 2011

செம்பருத்தி பூவுக்கும் உண்டு மருத்துவ குணம்

செம்பருத்திப் பூ



  இப்பூவில் தங்கச்சத்து உள்ளது.
இரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை 
புரிவதாகும்.


இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும்.
தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள் 
ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும் 
பலத்தையும் பெறுவான்.



பெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,
வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,
இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன்
கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.
பெண்மை வளரும்.

பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி
நினைவாற்றல்,புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும்.

சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை
நீக்கி விட வேண்டும்.


செம்பருத்தி இலைகளை அரைத்து சீயக்காய்த் தூளுடன்
சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுதல் ,
பொடுகு யாவும் தீரும். ஒருநாள்விட்டு மறுநாள் இவ்விதம்
நாலைந்து முறை குளிக்க வேண்டும்.


மருத்துவ டிப்ஸ் :-

அடிக்கடி பேதியாகிக் கொண்டிருந்தால் , எலுமிச்சம் 
பழத்தைக் குளிர்ந்த நீரில் பிழிந்து ,உள்ளுக்குச் சாப்பிடுங்கள்
பேதி நின்று விடும்.



நல்ல பசியில்லாமல் இருக்கும்பொழுது சீரகத்தை லேசாக 
வறுத்து போடி செய்து , அதில் பனை வெல்லத்தையும் 
அளவோடு கலந்து சாப்பிடுங்கள் .உடனே குணமாகும் 
.

ஞாபக சக்தி அதிகமாக பாதாம் பருப்பையும்,தேங்காயும் 
அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள் .அவற்றுள் மாங்கனீஸ் 
சத்து நிறைய உள்ளது .மாங்கனீஸ் நினைவாற்றலை 
பெருக்கும்.

வயிற்றில் ,வாயில் புண் இருந்தால் ,தேங்காய் பாலில்
சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டு வாருங்கள் . சில 
நாட்களில் புண் குணமாகி விடும் .

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட வேண்டும்.
அது பசியை தூண்டி விடும்.குடலில் கோளாறு இருந்தாலும்
அது குணமாக்கும் .

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் ஒரு வேளை
சாப்பிட வேண்டும் . 

நன்றி நண்பர்களே 


18 comments:

  1. ஒரு நல்ல மருத்துவ மலரைப்
    படித்தது போல ஒரு நிறைவு
    தொடர்ந்து தர அன்பு வேண்டுகோள்
    த.ம 2

    ReplyDelete
  2. செம்பருத்தி மலரின்
    மருத்துவ குணங்கள் மகத்தானவை..
    எளிதில் கிடைக்கக் கூடிய
    எந்த வித மண்ணிலும் வளரக்கூடிய
    இந்த பூவில் அத்தனை பெரிய மருத்துவங்கள்
    ஒளிந்திருக்கின்றன.
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே...
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. செமபருத்தி பூ வை தண்ணியில் ஊறவைத்து குடித்தால் உடம்புக்கு குளிர்மை

    ReplyDelete
  4. தொடர்ந்து பயனுள்ள தகவல்களை பகிர்வதற்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு .பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. தமிழ்மணம் ஏழு குத்திட்டேன்..

    ReplyDelete
  8. நல்ல மருத்துவக் குறிப்புகள்.

    ReplyDelete
  9. நல்ல மருத்துவக்குறிப்பு..பாஸ்

    ReplyDelete
  10. நலம் தரும் குறிப்புகளை நான் கண்டு கொண்டேன்.

    ReplyDelete
  11. உபயோகமான பதிவு.மேலும் செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தண்ணீரிலிட்டு டீ’க்கு பதிலாக அருந்தலாம்.

    ReplyDelete
  12. அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்...

    பகிர்வுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. அருமையான மருத்துவக் குறிப்பு மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  14. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. வணக்கம் நண்பா,

    செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்களைச் சொல்லியிருக்கிறீங்க.

    சின்ன வயசில எனக்கு அம்மா செம்பருத்திப் இலையினைச் சாறாக்கித் தலைக்கு தேய்த்து முழுக வைப்பா..

    அந்த நினைவுகளையும் இப் பதிவு மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே