வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, September 15, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -3

நண்பர்களே பயிற்சி -1 -ல் சொன்னதை முயற்சி செய்து
பார்த்தீர்களா !

இன்று

பயிற்சி -2

நேராக நிற்கவும் .கால்களை இடைவெளி விட்டு சற்று
அகற்றி வைக்கவும் .

இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக் கொள்ளவும்.





பிறகு இடுப்புக்கு மேலே மட்டும் பின்புறமாக வளைக்கவும் .
எந்த அளவுக்கு வளைக்க முடியுமோ அந்த அளவுக்கு
வளைக்கவும்.

அப்பிடி வளைக்கும் பொழுது கால்கள் வளையாமல்
அப்பிடியே நேறாக நிற்கவேண்டும்.

உடலை வளைக்கும் பொழுது உங்கள் முகம் மேலே
பார்க்க வேண்டும் .

உங்கள் கைகள் காதின் பக்கத்தில் தான் இருக்க வேண்டும்.
முகம் மேலே பார்க்க வேண்டும் என்பதற்காக தலையை
மட்டும் வளைத்து மேலே பார்க்க கூடாது .

இதில் கவனிக்க வேண்டியது அப்பிடி வளையும் பொழுது
மூச்சை இழுத்து தம் பிடித்துக் கொண்டு வளைதல்
வேண்டும்.

கொஞ்ச நேரம் அந்த நிலையில் இருந்து விட்டு பிறகு
பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

அப்பொழுது மூச்சை சீராக வெளியில் விடவேண்டும்.

பிறகு அப்பிடியே முன்புறமாக வளைந்து உங்கள் உள்ளங்கைகள்
கால்களின் பாதங்கள் அருகில் தரையில் படுமாறு வைக்கவும்.

இப்பொழுது உங்கள் முகம் முட்டிகால்களை பார்த்துக்
கொண்டிருக்கும்

இப்பிடி செய்யும் பொழுது கால்களை சிறிது கூட வளைக்க
கூடாது. கால்கள் வலையத்தான் செய்யும்.

நாம்தான் கவனமாக சிரத்தையோடு கால்கள் வளையாமல்
கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

அப்பொழுது தான் முழு பயனும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் ஆரம்ப பயிர்ச்சி
யாளர்களுக்கு முன்புறம் வலையும்பொழுது கைகள்
தரையை தொடாது.

பழக பழக நாளடைவில் கைகள் தரையை தொடும்.

இந்த பயிற்சி செய்யும் பொழுது முழங்கால்கள் இரண்டும்
வலிக்கும் .

பிறகு பழக்கத்தில் அதுவும் மாறும்.

தரையில் கைகள் தொட்டபின் சிறிது நேரம் அதே நிலையில்
இருந்து விட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

பிறகு சிறிது நேரம் அதே நிலையில் இருந்து விட்டு பின்புறமாக
வளையவும் .

இப்பிடியே முன்னும் ,பின்னும் வளைந்து செய்யுங்கள்
எட்டு அல்லது பத்து தடவைகள் செய்யுங்கள் .

கவனிக்க வேண்டிய விஷயம்.(கவனம்)

பின்புறம் வளையும் பொழுது மூச்சை உள்ளுக்கு இழுத்து தம்
பிடித்துக் கொள்ளவேண்டும்.

முன்புறம் வளையும் பொழுது மூச்சை சீராக வெளியில்
விடவேண்டும்.

முன்புறம் வளையும் பொழுது கால்கள் வளைய கூடாது.

பயன்கள் :-

இதனால் நரம்புகளுக்கும் ,உள் உறுப்புகளுக்கும் அநேக
நன்மைகள் ஏற்படுகின்றன.

பின்குறிப்பு.

இப்பயிற்சியின் பொழுது உடலில் அங்கும் இங்கும்
லேசாக வலிக்க செய்யும். அதைப் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து பயிற்சி செய்யவும்.

பிறகு நாளடைவில் வலி ஏற்படாது .

ஆரோக்கிய உடம்பு வேண்டு மெனில் லேசான வலியை
பொறுத்து தானே ஆகணும்.

சரி நண்பர்களே

கவனமாக படித்து பயிற்சி செய்யுங்கள் .

பயிற்சி தொடரும்......

 

36 comments:

stalin wesley said...

நல்ல தொடர் .....

தொடரட்டும் .......

நன்றி

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றி சகோ..

Samantha said...

gud post..waiting for the next

M.R said...

stalin said...
நல்ல தொடர் .....

தொடரட்டும் .......

நன்றி

அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகவும் பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றி சகோ..

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றி

M.R said...

இராஜராஜேஸ்வரி said...
மிகவும் பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றி

நன்றி மேடம்

M.R said...

Samantha said...
gud post..waiting for the next

thanks for joining and kindly comment

please visit again

மகேந்திரன் said...

இலகுவான முறையில் நீங்கள் விளக்கிய விதம்
அருமை.

முற்றும் அறிந்த அதிரா said...

பழகப் பழகப் நாளடைவில் கைகள் தரையைத் தொடும்//////

அவ்வ்வ்வ்வ்வ்வ் இடுப்பொடிஞ்சுதானே?:)))))))...

முடியல்ல ரமேஸ் முடியேல்லை... தரையைத் தொட முடியேல்லை:)).

M.R said...

மகேந்திரன் said...
இலகுவான முறையில் நீங்கள் விளக்கிய விதம்
அருமை.

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

athira said...
பழகப் பழகப் நாளடைவில் கைகள் தரையைத் தொடும்//////

அவ்வ்வ்வ்வ்வ்வ் இடுப்பொடிஞ்சுதானே?:)))))))...

முடியல்ல ரமேஸ் முடியேல்லை... தரையைத் தொட முடியேல்லை:)).

மெது மெதுவாகத்தான் தரையை தொட முடியும் சகோதரி

ஒரே நாளில் தொட முயற்சி செய்தால்
சிலருக்கு முடியும் ,பலருக்கு
நீங்கள் மேலே சொல்லியிருப்பது போல்தான்

ஹா ஹா

முயற்சி செய்யுங்கள் முயற்சி திருவினையாக்கும்.

Unknown said...

எனக்கு தேவையான பதிவு

நானும் 10 வருடங்களாய் முயற்சி செய்கிறேன் இன்னும் தரை எட்டவில்லை!!

கடைசியாக குனித்து தரையை தொட்டது நினைவில் கூட வரவில்லை

MANO நாஞ்சில் மனோ said...

உபயோகமான உடலுக்கு தேவையான பதிவு, பகிர்வுக்கு நன்றி...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

K.s.s.Rajh said...

தொடர்கின்றேன்.அசத்தல்

RAMA RAVI (RAMVI) said...

பயிர்சி ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் கூறியுள்ளது போல மிகவும் வலி இருக்கிறது.2/3 முறைக்கு மேல் செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

காட்டான் said...

 வணக்கமையா நான் உடல் பயிற்சி செய்வதில்லையா.. ஏன்னா ஒரு நாளைக்கு 10கிலோ மீற்றர்கள் சைக்கிளில்தான்யா வேலைக்கு சென்று வருகிறேன்.. 

சென்னை பித்தன் said...

உடல் நலம் காப்போம்,அன்பு உலகம் காட்டும் வழியில்!

Anonymous said...

நல்ல பயனுள்ள தொடர்...அருமை...
தொடரட்டும்...

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

எனக்கு தேவையான பதிவு

நானும் 10 வருடங்களாய் முயற்சி செய்கிறேன் இன்னும் தரை எட்டவில்லை!!

கடைசியாக குனித்து தரையை தொட்டது நினைவில் கூட வரவில்லை

தங்களை வரவேற்கிறேன்

தொடர்ந்து வாருங்கள்

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...

தொடர்கின்றேன்.அசத்தல்

வரவேற்கிறேன் நன்றி

M.R said...

RAMVI said...
பயிர்சி ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் கூறியுள்ளது போல மிகவும் வலி இருக்கிறது.2/3 முறைக்கு மேல் செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

மெதுவாகவும் ,சிறிது சிறிதாகவும் செய்யுங்கள் சகோதரி ,
நன்றி சகோதரி

M.R said...

காட்டான் said...

வணக்கமையா நான் உடல் பயிற்சி செய்வதில்லையா.. ஏன்னா ஒரு நாளைக்கு 10கிலோ மீற்றர்கள் சைக்கிளில்தான்யா வேலைக்கு சென்று வருகிறேன்

இதுவும் ஒரு பயிற்சி தான் நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...

உடல் நலம் காப்போம்,அன்பு உலகம் காட்டும் வழியில்!

அன்பான கருத்துக்கு நன்றி ஐயா

M.R said...

ரெவெரி said...

நல்ல பயனுள்ள தொடர்...அருமை...
தொடரட்டும்...

நன்றி சகோ

M.R said...

நாஞ்சில் மனோ said...

உபயோகமான உடலுக்கு தேவையான பதிவு, பகிர்வுக்கு நன்றி...//

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

Unknown said...

மிகவும் பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

Unknown said...

உங்கள் friend connect-ல் 101-வது(மொய்)நான்
அருமையான தொடர்

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நரம்புகளுக்கும், உள் உறுப்புக்களுக்கும் சீரான இயக்கத்தினைக் கொடுக்கும் அப்பியாசம் பற்றிய அருமையான பகிர்வு.

M.R said...

வைரை சதிஷ் said...
மிகவும் பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி

நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்

M.R said...

வைரை சதிஷ் said...
உங்கள் friend connect-ல் 101-வது(மொய்)நான்
அருமையான தொடர்


நன்றி நண்பரே

M.R said...

நிரூபன் said...
வணக்கம் நண்பா,
நரம்புகளுக்கும், உள் உறுப்புக்களுக்கும் சீரான இயக்கத்தினைக் கொடுக்கும் அப்பியாசம் பற்றிய அருமையான பகிர்வு.

நன்றி நண்பரே தங்கள் அன்பான கருத்துக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த தொடரை மொத்தமா சேவ் பண்ணி வச்சுக்கனும்..... நல்லாருக்கு நண்பா....!

Jaleela Kamal said...

அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out