வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, September 5, 2011

உங்களுக்கு "இந்த " பிரச்சனை இல்லையே

நட்புகளே உங்களை நீங்களே சுய பரிசோதனை 
செய்து கொள்ளுங்கள்.


1.நீங்கள் பயணம் செய்யும்பொழுது திடீரென சில 
 நிமிடங்கள் எண்ண நடந்ததுஎன்று குழம்பியதுண்டா?


2.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,அவர்   பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உங்கள் சிந்தனை 
எங்கோ பறந்து விட்டு என்ன பேசினார் என்று தெரியாமல்
குழம்பிபோய் இருக்கிறீர்களா?

3.இங்கு எப்பிடி வந்தோம் என்று சில இடங்களுக்கு 
 சென்றபின் யோசித்ததுண்டா?

4.உடுத்திக் கொண்ட உடையைப் பற்றி வேலைக்கு 
 சென்ற பின்தான் தெரிய வந்ததுண்டா ?

5.உங்கள் அருகிலேயே நீங்கள் நிற்பதுபோன்ற 
 உணர்வை பெற்றதுண்டா?

6.நீங்கள் செய்யும் காரியத்தை பிறர் செய்வது போன்ற
 உணர்வை பெற்றதுண்டா?

7.உங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும்,அது 
 வேறு நபர் என்ற உணர்வு தோன்றியதுண்டா?

8.கடந்த கால அனுபவங்களில் மூழ்கி இன்று நடப்பது 
 போல் உணர்ந்த அனுபவம் பெற்றதுண்டா?

9.மிகவும் பழகிய இடத்தில் இருந்தும் ,புதிய இடம் 
 போன்ற உணர்வை பெற்றதுண்டா.

10.பகல் கனவு,கற்பனையில் மூழ்கி,அவை உண்மையில்
  நடப்பது போன்ற உணர்வை பெற்றதுண்டா ?


11.தனிமையிலே இருக்கும்பொழுது உங்களிடமே நீங்கள் 
 கத்தி பேசிய அனுபவம் உண்டா?

12.பிற மக்களையும், சுற்றுப் புறத்தையும் ஏதோ கண்ணாடிக்குப்
 பின் நின்று பார்ப்பது போல ஒரு உணர்வை பெற்றதுண்டா?

13.அப்போதுதான் கதவைப் பூட்டி விட்டு ,பின் கதவை 
 பூட்டினோமா இல்லையா என்று குழம்பியது உண்டா?

14.உங்கள் உடம்பு உங்களுடையது இல்லை என்பது போன்ற 
  உணர்வைப்பெற்றதுண்டா?

15.சினிமா, டிவி பார்த்துக் கொண்டு சுற்றி நடப்பதைப் பற்றிய
  உணர்வு இல்லாமல் இருந்ததுண்டா?

தொடர்பு அடர்ந்த நிலை என்றும்,உடல் சார்ந்த மனக் கோளாறு என்றும் ஹிஸ்டீரியாவில் பிரிவு இருக்கிறது.

மேலே சொன்னவற்றில் ஒன்று அல்லது இரண்டு 
செயல்கள் இருப்பது சாதாரணம் தான்.
ஆனால் அதில் நிறைய உணர்வுகளை "அடிக்கடிப்" பெற்றிருந்தால் ,
உங்களுக்கு ஏதோ மனப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் உடனே அந்த மனப்பிரச்சனையை முழுவதும் நீங்கிட 
அதனை எதிர்கொண்டு மனதிடத்தை (தெளிவை)பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.


 

44 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு .பகிர்வுக்கு நன்றி .

M.R said...

நண்பர் ராஜசேகர் அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்க்கும் நன்றி .

rajamelaiyur said...

நல்ல வேல எனக்கு ஏதும் இல்ல

rajamelaiyur said...

என்று என் வலையில்

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

Anonymous said...

///உங்களுக்கு ஏதோ மனப்பிரச்சினை// என்று தீர்வு சொல்வதுக்கா இவ்வளவு கேள்விகள்??!!

இப்படி கேள்விகளை கேட்டு முடிக்கும்போது அதற்குரிய தீர்வு ஒன்றையும் இணணயத்தில் தேடி பதிந்தீர்களானால் பதிவு பயனுள்ளதாய் முடியும்..

நன்றி நண்பரே!

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல வேல எனக்கு ஏதும் இல்ல


ரொம்ப சந்தோசம் ராஜா ,வாழ்த்துக்கள்

M.R said...

ஷீ-நிசி said...
///உங்களுக்கு ஏதோ மனப்பிரச்சினை// என்று தீர்வு சொல்வதுக்கா இவ்வளவு கேள்விகள்??!!

இப்படி கேள்விகளை கேட்டு முடிக்கும்போது அதற்குரிய தீர்வு ஒன்றையும் இணணயத்தில் தேடி பதிந்தீர்களானால் பதிவு பயனுள்ளதாய் முடியும்..


என்ன சகோ பண்றது தலைவலின்னா கூட நிறைய டெஸ்ட் எடுக்கும் இந்த காலத்துல பைசா செலவில்லாமல்
நம் மனதை டெஸ்ட் செய்வது நல்லது தானே !

மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே வாழும் வாழ்க்கையில் தெளிவான முடிவுகள் எடுத்து சந்தோசமாக வாழமுடியும் .

கருத்துக்கு நன்றி சகோ

Unknown said...

தனிமையில் இருக்கும் மனிதர்களுக்கு இந்தப்பிரச்சனை அதிகமாக இருக்கும் மாப்ள....பகிர்வுக்கு நன்றி!

M.R said...

விக்கியுலகம் said...
தனிமையில் இருக்கும் மனிதர்களுக்கு இந்தப்பிரச்சனை அதிகமாக இருக்கும் மாப்ள....பகிர்வுக்கு நன்றி!

தங்கள் கருத்துக்கு நன்றி மாம்ஸ்

செங்கோவி said...

இதன்மூலம் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலியே..

RAMA RAVI (RAMVI) said...

படித்தவுடன் இந்த மாதிரி ஏதும் வரக்கூடாதே என்று பயமாக இருக்கு.நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.

கூடல் பாலா said...

அப்படி வந்தால் பார்ப்போம் ...

M.R said...

செங்கோவி said...
இதன்மூலம் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலியே..

அதாவது மனக்குழப்பங்கள் இருக்கான்னு
பார்க்க சொல்கிறேன்

இருந்தால் தெளிவான முடிவு எடுக்க முடியாது இல்லையா .அதனால தான் .

நன்றி வருகைக்கு நண்பா

M.R said...

AMVI said...
படித்தவுடன் இந்த மாதிரி ஏதும் வரக்கூடாதே என்று பயமாக இருக்கு.நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.

பயம் தேவையில்லை சகோதரி

வருகைக்கு நன்றி

M.R said...

oodal bala said...
அப்படி வந்தால் பார்ப்போம் ...

அப்பிடியான உணர்வுகள் யாருக்கும் வர வேண்டாம் நண்பரே.

கவி அழகன் said...

பகிர்வுக்கு நன்றி தல

மகேந்திரன் said...

மாம்ஸ் விக்கி சொன்னதுபோல தனிமையில் இருப்பவர்களுக்கு
இந்த பிரச்சனைகள் வருவது சாதாரணம்...
சிலநேரங்களில் சில சமையங்களில் நீங்கள் இங்கே கூறிய பிரச்சனைகளில்
ஏதாவது வந்து வந்து தான் செல்கிறது....
ஆனால் எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை...
அடுத்த காட்சி மாறிவிடும்.
அழகிய பதிவு நண்பரே.
ஓட்டளித்தாயிற்று நண்பரே.

M.R said...

நண்பர் கவி அழகன்

அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

மகேந்திரன் said...
மாம்ஸ் விக்கி சொன்னதுபோல தனிமையில் இருப்பவர்களுக்கு
இந்த பிரச்சனைகள் வருவது சாதாரணம்...
சிலநேரங்களில் சில சமையங்களில் நீங்கள் இங்கே கூறிய பிரச்சனைகளில்
ஏதாவது வந்து வந்து தான் செல்கிறது....
ஆனால் எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை...
அடுத்த காட்சி மாறிவிடும்.
அழகிய பதிவு நண்பரே.
ஓட்டளித்தாயிற்று நண்பரே.

அழகான கருத்துக்கு நன்றி நண்பா

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,

எம் மனதில் ஏற்படும், சந்தேகங்கள், மறதி, குழப்பங்கள் முதலியவற்றால் உண்டாகும் கேள்விகளைச் சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தந்திருக்கிறீங்க.
பகிர்விற்கு நன்றி.

உங்கள் பெயர் மேகலட்சுமி தானே?

நாளைய பதிவில் உங்கள் வலையினை அறிமுகப்படுத்தலாம் என்று உள்ளேன்.

M.R said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா,

காலை வணக்கம் நண்பரே

எனது பெயர் ரமேஷ்

M.R said...

நிரூபன் said...


எம் மனதில் ஏற்படும், சந்தேகங்கள், மறதி, குழப்பங்கள் முதலியவற்றால் உண்டாகும் கேள்விகளைச் சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தந்திருக்கிறீங்க.
பகிர்விற்கு நன்றி.


வாழ்த்துக்கு நன்றி நிருபன்

குறையொன்றுமில்லை. said...

நல்ல வேளை இதுபோலல்லாம் எதுவும் எனக்கு நடந்ததில்லே. நானும் கடந்த 20 வருடமாக தனியாதான் இருந்து வரேன்.

M.R said...

Lakshmi said...
நல்ல வேளை இதுபோலல்லாம் எதுவும் எனக்கு நடந்ததில்லே. நானும் கடந்த 20 வருடமாக தனியாதான் இருந்து வரேன்.

வாங்க அம்மா ,சந்தோசம்

தனிமரம் said...

காத்திரமான விடயத்தைச் சொல்லி இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றி+வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் 8!
நல்ல வேலை எதுவுமே இல்லை!(பின்னூட்டம் இடுவது நானா,வேறு யாராவதா?!)

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னது எல்லாமே பயமுத்தலா இருக்கே...

K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு

மாய உலகம் said...

பயனுள்ள பகிர்வு...இதில் சில விடயங்கள் மனதினுள் இடை இடை வந்து செல்பவைதான்... பகிர்வுக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

தமிழ் மணம் 10

M.R said...

நண்பர் நேசன் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

===================================

நண்பர் கருன் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

சென்னை பித்தன் said...
தமிழ்மணம் 8!
நல்ல வேலை எதுவுமே இல்லை!(பின்னூட்டம் இடுவது நானா,வேறு யாராவதா?!)

ஹா ஹா நீங்களே தான்

வருகைக்கு நன்றி ஐயா

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
என்னது எல்லாமே பயமுத்தலா இருக்கே...

பயப்படாதீங்க தொடர்ந்து வாங்க நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
நல்ல பகிர்வு

நன்றி நண்பரே

M.R said...

மாய உலகம் said...
பயனுள்ள பகிர்வு...இதில் சில விடயங்கள் மனதினுள் இடை இடை வந்து செல்பவைதான்... பகிர்வுக்கு நன்றி சகோ


தமிழ் மணம் 10

வருகைக்கும்,வாழ்த்துக்கும்,வாக்கிற்க்கும்நன்றி சகோ

Unknown said...

நல்ல பகிர்வு...
கொஞ்சம் கவ்கானமாய் தான் இருக்கணும் பாஸ்!

தமிழ் வண்ணம் திரட்டி said...

எனக்கு 2 உள்ளது. வித்தியசமான பகிர்வு

RIPHNAS MOHAMED SALIHU said...

ஐயோ.. இதில் இரண்டு மூன்று எனக்கும் இருக்குதே... ஒரு வேளை எனக்கும் ஹிஸ்டீரியா இருக்குமோ....

Anonymous said...

மனக்குழப்பங்கள் இருக்கான்னு
பார்க்க சொல்றீங்க...

பார்த்துருவோம்..

-:)

M.R said...

வாங்க மைந்தன் சிவா

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க வண்ணம் திரட்டி நண்பரே

தங்களை வரவேற்கிறேன்

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

RIPHNAS MOHAMED SALIHU said...
ஐயோ.. இதில் இரண்டு மூன்று எனக்கும் இருக்குதே... ஒரு வேளை எனக்கும் ஹிஸ்டீரியா இருக்குமோ....

தங்களை வரவேற்கிறேன் நண்பரே

இதில் ஒன்றிரண்டு இருப்பது தவறில்லை
நண்பரே யதார்த்தம் தான்

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

M.R said...

ரெவெரி said...
மனக்குழப்பங்கள் இருக்கான்னு
பார்க்க சொல்றீங்க...

பார்த்துருவோம்..


பார்த்துருங்க நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out