வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, June 30, 2011

வலைப்பூவில் படம் விழும் காட்சி

நண்பர்களே நமது வலைப்பூவில் நமக்கு பிடித்த படம் நமது வலைப்பக்கத்தில் மேலிருந்து கீழே விழுவது போல் செய்தால் வலைப்பூவில் வருபவர்களுக்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
அதை எப்படி நிறுவுவது என்று சொல்கிறேன் .பிடித்திருந்தால் வலைப்பூவில் நிறுவிக்கொள்ளுங்கள் , இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்திருப்பார்கள் .தெரியாதவர்களுக்காக ..

இதில் பயன்படுத்த PNG  இமேஜ் (படம் ) மட்டுமே பயன்படுத்த வேண்டும் .மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் ,

ஸ்டெப் :-1

அதில் என்டர் யுவர் இமேஜ் யு ஆர் எல் என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான படத்தின் (பி என் ஜி ) யு ஆர் எல் கோடு பேஸ்ட் செய்யவும்

ஸ்டெப் :-2

ஸ்டெப் 2 என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் ஜெனரேட் கோட் (generate code ) என்பதை கிளிக் செய்யவும் .அதற்க்கு கீழே காலி பெட்டியில் HTML கோட் வரும் . அதனை காப்பி செய்து உங்கள் ப்ளாகில் design >>ADD GADGET >> HTML/Javascript செலக்ட்  செய்தால் வரும் பெட்டியில் paste செய்து சேவ்(save) செய்யவும் .பிறகு அந்த கட்ஜெட்டை( gadget) சைடு பாரில் இருந்து எடுத்து மேலே டாப்பில் பொருத்தவும் .பிறகு சேவ்  செய்து ப்ளாக் ஓபன் செய்து பார்த்தால் நீங்கள் பதிவு செய்த படம் அழகாக உங்கள் ப்ளாக்கில் விழுவதை பார்க்கலாம் 

 .பயன் படுத்தி பாருங்கள் .பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்கள்.
                                                                                                   
 உதாரணத்திற்கு ஒரு பி என் ஜி படத்தின் யு ஆர் எல் கோட் http://www.allblogtools.com/MiSc/falling/images/falling-sample.png  

                                                                                                   உங்கள் 

                                                                                            

ஜோக்ஸ் -3


கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு  நாய்க்கு சோறு வச்சியா ?

மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?

கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது .      அதான் கேட்டேன் .

மனைவி :- ??? 
================================================================

பெரியவர் :- உனக்கு இரட்டை குழந்தைகளா பிறந்திருக்கு !!!

    பெண் :- அமாம் , இரண்டுமே ஆண் குழந்தைகள்

பெரியவர் :-இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே ,எப்படி இவர்களை உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ?

பெண் :- முதல் குழந்தை இங்கே இருக்கிறது . இரண்டாம் குழந்தை பக்கத்தில் இருக்கிறது .அடையாளம் கண்டுபிடிக்க இதில் என்ன குழப்பம் இருக்கிறது .

பெரியவர் :- இப்ப சரி . மற்ற சமயங்களில் எப்படி அவர்கள் இருவரையும் அடையாளம் கணடுபிடிப்பாய்?

பெண் :- ஒரு குழந்தையை ஒரு அறையிலும் இன்னொரு குழந்தையை வேறொரு அறையிலும் படுக்க வைப்போம் .இருவருக்கும் வித்தியாசம் தெரியபோகிறது .

பெரியவர்:- எந்த அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?.

பெண் :-ஒரு அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று பார்ப்பேன் . அடுத்த அறையில் இன்னொரு குழந்தை உள்ளது என்று தெரிந்து கொள்வேன் .

பெரியவர் :- அட அதில்லம்மா ...ஒரு குழந்தை வீட்டில் இருக்கிறது ,மற்றொரு குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருக்கிறது . எந்த குழந்தை வீட்டில் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ?

பெண் :- அதிலே என்ன சிக்கல் இருக்கிறது ?. எனக்கு இரண்டு குழந்தைதானே உள்ளது .வீட்டில் இருக்கின்ற குழந்தையைப் பார்த்த உடன் இன்னொரு குழந்தை வெளியே உள்ளது என்று அடையாளம் கண்டு கொள்வேன் .

பெரியவர் : (தலையை பிய்த்துக்கொண்டே போகிறார் ).?????//?????????????
===============================================================

மூன்றாம் வகுப்பு மாணவன் :- " டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .

  அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?

  யாருமே பதில் பேசவில்லை .

ஆசிரியை :- (பெருமையாக ) தன கண்டுபிடித்த விடையை சொல்ல 

மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா 

ஆசிரியை :- ?????????????????

===========================================================

குடிகாரனின் ஆராய்ச்சி 


தண்ணியும் விஸ்கியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது .தண்ணியும் பிராந்தியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது . தண்ணியும் ஜின்னையும் கலந்து குடித்தான் போதை இருந்தது , இறுதியாக அவன் தண்ணீருக்கு  போதை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான் .

==============================================================    Photobucket     சிரிங்கப்பா , ஜோக்கடிச்சா சிரிக்கனும்ல , நானெல்லாம் சிரிப்பே வரலன்னா கூட சிரிக்கல .சும்மா ஆக்ட் குடுங்கப்பா .
செலவில்லாமல் வீடு கட்டநம் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும் .
ஆனால் எல்லோராலும் வீடு கட்ட முடிகிறதா , இல்லையே .ஏன் ? விக்கிற விலை வாசி அப்பிடி .சிமென்ட் மணல் ,ஜல்லி ,கம்பி,ஆள் சம்பளம் அப்படி,இப்பிடி என்று முடிகிற காரியமா ?

அதனால் தான் காசு இல்லாம வீடு கட்டறது எப்பிடி என்று சொல்லியிருக்கேன் .பார்த்துக்கோங்க .
ஹி ....ஹி....அது சரி முடி இல்லாதவங்க என்ன செய்றதுன்னு கேட்காதிங்க .ஹி....ஹி...சீரியசாக வந்தவங்க கோச்சிக்காதிங்க .இது ஒரு கலைங்கோ (ஆர்ட் ).முடி அலங்காரம்கோ.. ஒரு விஷயம் நல்லா இருந்தா ரசிக்கினும் தானுங்களே .
அதனால நான் ரசிச்ச இந்த படம் உங்களக்கு பிடிச்சிருந்தா கமென்ட் போடுங்களேன் .

                                                                                                        உங்கள் 

Wednesday, June 29, 2011

மனம்போல் வாழ்க்கை

Photobucket


  டென்சன்..... டென்சன்..... டென்சன்......                                                                             
    மனம் அமைதியாகவும் நிம்மதியான வாழ்க்கையும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க்கை .
   காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை டென்சன் வாழ்க்கை தான் ,
    எல்லாம் இருந்தாலும் , எதுவுமே இல்லை என்றாலும் ஆளுக்கு ஒரு பிரச்சனை தான் வாழ்க்கையில் .
     பிரச்சனைகளை கையாளும் விதத்தில் தான் நம் வாழ்க்கை இன்பமாகவோ , துன்பமாகவோ மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    வெள்ளை சுவற்றில் ஒரு சிறு கருப்பு புள்ளி இருந்தால் நம் கவனம் எல்லாம் அந்த கருப்பு புள்ளி மீது தான் இருக்கும் .அது போல தான் வாழ்வில் ஆயிரம் நல்லது இருந்தாலும் மனம் ஏதாவது ஒரு துன்பத்தை சுற்றி சுற்றி தான் வரும்.

      மனம் எரிச்சல் பட்டால் சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சனையாக தெரியும் .  ஒரு அறையில் தேவையில்லாத பொருட்கள் நிரம்பி இருந்தால் புதியதாக அத்தியாவசமான ஒரு பொருளை வைக்க இடமிருக்காது .அதே போலத்தான் மனமும் , தேவையில்லாத பிரச்சனைகளால் மனம் நிரம்பி இருந்தால் புதிய நல்ல விஷயங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது .
        மனதை குப்பை தொட்டி போல் வைக்காமல் புதிய விசயங்களுக்கு இடம் கொடுக்க காலியாக வைத்திருங்கள் .எதையும் தொலைநோக்குடன் பாருங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள் .
       வாழ்க்கை இன்பமாக மாற சில வழிமுறைகள் உண்டு .அதை கடைப்பிடித்தால்  சந்தோசமாக வாழலாம் .அதைப்பற்றி பின் வரும் பதிவுகளில்  பார்ப்போம் .
உங்கள்
  ஹி..... ஹி....... தமாசு


Monday, June 27, 2011

ஹார்ட்வேர் டிப்ஸ்

என் பார்வையில் பட்டதை உங்கள் பார்வைக்காக 

இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . இருந்தாலும் இதைப்பற்றி தெரியாதவர்களுக்காக :1.கம்ப்யுட்டரில் மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிந்தால் அதற்க்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்டால்  ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒலியில்

ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக இருந்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை இருக்கும் . இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் டிஸ்ப்ளே கார்டை  மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில் இருந்தால் : பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் -ல் பிரச்னை இருக்கும் . ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி கேட்டால் : கீ போர்டில் பிரச்னை இருக்கலாம் . எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக் கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.அதை சரி பார்த்தால் சரி ஆகிவிடும் .
6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிந்தால்.... டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் இருக்கலாம்  கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை என்றால்  ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப் பட்டுள்ளது என்று அர்த்தம் . சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும். 
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை என்றால்  மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது என்றால்  மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும். 
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வந்தால்  பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும். 
                                                                  
                                                                                                                                                                                   உங்கள் 
 

Sunday, June 26, 2011

ஜோக்ஸ் .2

" என் மனைவி பணம் பணம் என்று கேட்டு என் உயிரையே எடுக்கிறாள் "

 " ஏன் அப்படி சொல்றே ? "

 " மூன்று மாதத்திற்கு முன்னால் 10000 ருபாய் கேட்டாள். அடுத்த மாதம் 20000 ரூபாய் கேட்டாள் . போன மாதம் 30000 ரூபாய் கேட்டாள் . இன்னைக்குக் காலையில் புறப்படும் போது 50000 ரூபாய் வேண்டும் என்று கேட்கிறாள் "

 " பைத்தியக்காரத்தனமாக  இருக்கே . அவ இந்த பணத்தை எல்லாம் என்ன செய்யறான்னு தெரியுமா ?"

 எனக்கு எப்படித் தெரியும் . நான்தான் இதுவரை அவளுக்கு பணம் ஏதும் கொடுத்தது இல்லையே " .
  ============================================
முப்பது வயதான ஒருவன் தன் நண்பனிடம் சொன்னான் . " எனக்கு திருமணமே நடக்காது என்று நினைக்கிறேன் '
 " ஏன் "

 " எந்த பெண்ணோட படத்தைக் காட்டினாலும் எங்கம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை "
  " உங்கம்மா மாதிரியே இருக்கின்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவள் படத்தை உங்கம்மாவிடம் காட்ட வேண்டியதுதானே "

 " அப்படியும் செய்து பார்த்தேன் . அதனால் பயன் ஏதும் இல்லை "

 "ஏன் ?"

 " எங்கப்பா அந்த பெண் வேண்டவே வேண்டாம் என்கிறார் . என்ன செய்வது ? "
======================================================

                                       பாட்டி வைத்தியம் -2

       வயிற்று வலி , வயிற்று புண் குணமாக 

        ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து , அதில் ஒரு டம்ளர் அளவு கற்றாளை துண்டுகளைப் போட்டு , அத்துடன் சாம்பார் வெங்காயம் , நறுக்கிப் போட்டு ௩௦௦
 கிராம் சிற்றாமணக்கு எண்ணெய் , ௩௦௦ கிராம் பனங் கற்கண்டு இவைகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் எல்லாம் ஒன்றாக சேர்ந்து லேகியம் போல இறுகி வரும் . இந்த சமயம் பாத்திரத்தை இறக்கி வைத்து , .ஆறிய பின் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் , வயிற்றுப் புண் , வயிற்று வலி குணமாகும்.

===================================================

  அதிமூத்திரம் அடங்க 

       வாலைப் பூவை ஆய்ந்து தினசரி பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் அதிக அளவில் நீர் இறங்குவது கட்டுப்பட்டு இயற்கை அளவில் வெளியேறும் .

    வாலைப் பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் நீரிழிவுக் காரரின் நீரில் இறங்கும் சர்க்கரையை முறித்து விடும் .
==============================================================

 ஹைய்யா ஜாலி , இன்னிக்கு ஞாயிற்று கிழமை . பள்ளிக்கூடம் இல்லை , பாடம் இல்லை , ஹோம்வொர்க் இல்லை , ஹைய்யா ஜாலி ஜாலி
Photobucket

Saturday, June 25, 2011

கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகள்

படித்தறிந்த தகவல்கள் உங்கள் பார்வைக்காக                 கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகளை கிலோ பைட், மெகா பைட் என்று சொல்கிறோம். மோடம் தகவல் அனுப்பும் வேகத்தை பிட்களில் சொல்கிறோம். இவை குறிப்பாக எதைக் குறிக்கின்றன என்றும், சில அடிப்படை வேறுபாடுகளையும் இங்கு காணலாம். 
Bit:   கம்ப்யூட்டர் சார்ந்த அளவு கோலில் மிகக் குறைந்த அளவு இதுவே.  பிட்களின் அடிப்படையில் எந்த பைலின் அளவும் இருக்க முடியாது. இதனுடைய மதிப்பு 0 அல்லது 1 ஆகும்.  
Byte  இது 8 பிட்கள் இணைந்த ஒரு அலகு. ஒரு பைட் அளவிலும் பைலை உருவாக்குவது கடினம். Kilobyte(KB)   கிலோ பைட். ஏறத்தாழ 1000 பைட்கள் (துல்லிதமாக என்றால் 1024 பைட்) கொண்டது ஒரு கிலோ பைட். ஒரு  சிறிய பைலை டவுண்லோட் செய்கையில் அந்த பைலின் அளவினை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள். 
Megabyte (MB)  = 1,048,576  பைட்கள் அல்லது 1,024 கிலோபைட்கள் . Gigabyte  (GB)  கிகா பைட் 1024 மெகா பைட்.  ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள்.   சரி, இந்த அலகுகளை சில சாதனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாமா! 
* ஒரு 3.25 அங்குல பிளாப்பியில் 1.44 மெகா பைட் தகவல்களைப் பதியலாம். (1,474 கிலோ பைட்)
* ஒரு சிடியில் 650 முதல் 700 மெகா பைட்கள் அளவில் தகவல்களைப் பதியலாம். ஆனாலும் முழு அளவில் எந்த சிடியும் எழுதப் படுவதில்லை. 3.25 பிளாப்பி அளவில் சொல்வதென்றால் ஒரு சிடியில் 450 பிளாப்பிகளை அடக்கலாம். 
* 20 கிகா பைட் ஹார்ட் டிரைவில் 31 சிடிக்களில் உள்ள தகவல்களை அதாவது 14,222 பிளாப்பியில் உள்ள தகவல்களை அடக்கலாம். 
 * சாதாரணமாக ஒரு பக்க அளவில் டெக்ஸ்ட் ஒன்றை உருவாக்கி அதனைப் பைலாக மாற்றினால் அது 4 கேபி அளவில் இருக்கும். 
 ஒரு பைலின் அளவு தெரிய அதன் பெயரில் மீது ரைட் கிளிக் செய்து அதன் கீழாக வரும் மெனுவில் Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 


Friday, June 24, 2011

Kirupa -Style - Stylea O Stylea -¬ Www.Live-Mp3Tamilmaalai.Com.mp3

ஓடி விளையாடு பாப்பாநிலா நிலா ஓடி வா 

Monday, June 20, 2011


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

  பாடகர் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது 


பாடகர் திரு உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது  


பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடியது நான் ரசித்த இப்பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 
நீங்கள் நினைக்கலாம் இது எத்தனயோ தடவை கேட்டது தானே என்று , எத்தனை தடவை கேட்டாலும் இனிமை தானே நண்பர்களே .

Sunday, June 19, 2011

குழந்தை டான்ஸ்ஒரு வயசு குழந்தை என்னமா டான்ஸ் ஆடுது . ஹ்ம்ம் ... நானெல்லாம் ஒரு வயசா இருக்கும் போது டான்ஸ் ஒழுங்கா ரசிக்க கூட தெரியாது . நான் பொறாமையிலே சொல்லவில்லைங்கோ . நெஜமாலுமே கொழந்த நல்லா டான்ஸ் ஆடுதுங்கோ . நீங்க என்னா சொல்றிங்கோ நண்பர்களே .

                                                                                                                         உங்கள் 

Saturday, June 18, 2011

Photobucket

ஜோக்ஸ்

     '' என்ன உங்க கைக்குட்டையில் முடிச்சு போட்டு இருக்கு ''
  
   '' என் மனைவி தான் முடிச்சு போட்டாள்''

    ''ஏன்? ''

    '' அவள் என்னிடம் கொடுக்கிற கடிதத்தை மறக்காம போஸ்ட் செய்யணும் என்று நினைவூட்டுவதற்காக ''

    '' நீங்க அந்த கடிதத்தை மறக்காம போஸ்ட் பண்ணிட்டீங்களா ? ''

    '' எப்படி முடியும் ? என் மனைவி என்னிடம் கடிதத்தை கொடுக்கவே மறந்து விட்டாள் . ''

-----------------------------------------------------------------------------------------------------------------   
  
     பத்திரிக்கை நிருபர் :  நீங்கள் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனீர்கள் ?

      செல்வர் :    அது பெரிய கதை . சொல்லிமுடிக்க நீண்ட நேரம் ஆகும் . இந்த விளக்கு ஏன் அது வரை வீணாக எரிந்து கொண்டிருக்க வேண்டும் . அனைத்து விடுகிறேன் .

  பத்திரிக்கை நிருபர் :  நீங்கள் சொல்ல வேண்டாம் . நானே புரிந்து கொண்டேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

 மாணவர்கள் சோதனை செய்து கொண்டிருந்த பரிசோதனை சாலைக்கு கிராமத்தான் ஒருவன் வந்தான் .

  அங்கிருந்த மாணவர்களை பார்த்து ,  '' நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? '' , என்று கேட்டான் .

  '' எந்த பொருளாக இருந்தாலும் அதைக் கரைக்கக் கூடிய திரவம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் '' என்று பெருமையாகச் சொன்னான் ஒரு மாணவன் .

    '' எல்லாவற்றையும் கரைக்கக் கூடிய திரவத்தை எதில் போட்டு வைப்பீர்கள் ? '' என்று கேட்டான் கிராமத்தான் .

------------------------------------------------------------------------------------------------------------

                                             தெரிஞ்சிக்கோங்க 

     
நமது நாடு சுதந்திரம் அடைந்த 1947ஆகஸ்ட் 15-ந் தேதி என்ன கிழமை  

 தெரியுமா ?

        வெள்ளிக்கிழமை 

உலகில் முதன்முதலாக தோன்றிய தாவரம் எது ?

      நீலப் பசும்பாசிகள் 

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருக்கிறது ?

      நியுயார்க் 

ஒரு கண்ணை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பிராணி எது ?

        டால்பின் 

'' மாபியா '' என்ற சர்வதேச சமூக விரோத கும்பல் எந்த நாட்டில் முதன்முதலாக தோன்றியது ?

          சிலி 

------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         பாட்டி வைத்தியம்
    வாய்வு தொல்லையா கவலை வேண்டாம் . இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் . எதற்கு எடுத்தாலும் ஆங்கில வைத்தியம் என்று இருக்கும் இக்காலத்தில் நாட்டு வைத்தியம் , பாட்டி வைத்தியம் என்று பழங்காலம் முறையா என்று நினைக்க வேண்டாம் . 

   கத்தி போய் வாள் வந்த கதையாக ஆக கூடாது அல்லவா . பக்க விளைவுகள் தராத வைத்தியம் நல்லது அல்லவா ? . அவசரத்திற்க்கும் , அத்தியாவசத்திர்க்கும் மட்டுமே ஆங்கில வைத்தியம் .மற்ற நேரங்களில் பழமை வாய்ந்த சுலபமான பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம் சிறந்தது அல்லவா .சரி இனி வாரம் வாரம் சிறிது சிறிதாக நாட்டு வைத்தியம் பார்ப்போம் .

   ஒரு கரண்டி துளசிச்சாருடன் ஒரு கரண்டி இஞ்சிச்சாறு கலந்து காலை , மாலை இருவேளையாக எழு நாட்கள் அருந்த சகல வித வாயுக் கோளாறுகளும் தீரும்.

   
   இஞ்சிச்சாருடன் கருப்பட்டி (பனைவெல்லம் ) சேர்த்துக் காய்ச்சி ஏலம் , கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி 
அளவு உண்டுவர வாயுத்தொல்லை அறவே நீங்கும் .


     திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால் ஒரு கரண்டி சுக்குப்போடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

ஹி... ஹி.. தமாசு .Photobucket வாடா வா .. எவ்வளவு தூரம் தொரத்திட்டு வரேன்னு

 பார்க்கிரேண்டா......நாயே ..வா வா ...

( ஹ்ம்ம்.... நானும் எவ்வளவு நேரம் தான் தாக்குபிடிக்கிறது ,

பயபுள்ள உடாம தொரத்திரானே .....

நான் என்ன பண்ணுவேன் ......)

மைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்

தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் (Malware Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்னைக் கான தீர்வுகள் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆகிய வற்றை கூடுமானவரை தவிர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் சி.டி. அல்லது யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்து இயக்கப்படக் கூடிய, மால்வேர் நீக்கும் புரோகிராம் (malware recovery tool) ஒன்றை இலவசமாகத் தந்துள்ளது. இதனை சிஸ்டம் ஸ்வீப்பர் (System Sweeper) என மைக்ரோசாப்ட் பெயரிட் டுள்ளது. 
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்ய முடியா தவர்கள், இன்டர்நெட் இணைப்பு இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாதவர்கள், இதனைப் பயன்படுத் தலாம். மேலும் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்பட முடியாமல், முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடு களையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 
சிஸ்டம் ஸ்வீப்பர் விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் வகைகளுக்கெனத் தனித்தனியே தரப்பட்டுள்ளது. தேவைப் படுபவர்கள் தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ற வகையில் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் இஞ்சின் தான், ஸ்வீப்பர் விண்டோஸ் புரோகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. 
சென்ற மாதம், மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் சேப்டி ஸ்கேனர் என்ற புரோகிராமினை வைரஸ், ஸ்பைவேர் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிய வெளியிட்டது. இந்த சேப்டி ஸ்கேனர், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டது. 
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் கூறும் இரண்டு மால்வேர் எதிர்ப்பு சாதனங்களும், மைக்ரோசாப்ட் தன் பணியினைக் குறைத்துக் கொள்வதற்காக என வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
சிஸ்டம் ஸ்வீப்பர் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தள முகவரிhttp://connect.microsoft.com/ systemsweeper 

புதிய வேர்ட் ஷார்ட்கட்ஸ்

Ctrl + Shift + D:தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் கீழாக இரு அடிக்கோடுகள் இடப்படும்.
Ctrl + ] : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் அதிகரிக்கப்படும்
Ctrl + [ : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் குறைக்கப்படும்.
Ctrl + Shift + A: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதும் கேபிடல் எழுத்துக்களாக மாற்றப்படும். மீண்டும் அதில் பயன்படுத்தினால், முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.
Ctrl + =: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ் சப்ஸ்கிரிப்டாக மாற்றப்படும். மீண்டும் பயன்படுத்துகையில் முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும். 
Ctrl + +: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் சூப்பர் ஸ்கிரிப்டாக மாற்றப்படும். மீண்டும் பயன்படுத்துகையில் முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.
Ctrl + Shift + Q: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் சிம்பல் எழுத்து வகைக்கு மாற்றப் படும். சிம்பல் எழுத்து வகைக்கு மாற்றியதை, மீண்டும் பொதுவான ஸ்டைலில் அமைக்க Ctrl + Shift + N பயன்படுத்த வேண்டும்.
ஒரு பத்தி முழுவதையும் Heading 1 styleக்குக் கொண்டு வர Ctrl + Alt + 1 அழுத்தலாம். இப்படியே இரண்டாவது, மூன்றாவது வகை ஸ்டைலுக்குக் கொண்டு வர 2,3 (Ctrl + Alt + 2, Ctrl + Alt + 3) என மாற்றி அழுத்த வேண்டும். 
வரிகளில் புல்லட் ஸ்டைல் கொண்டு வர Ctrl + Shift + L அழுத்தவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out