வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, June 12, 2011

கீரைகள்


                                                   கொத்தமல்லி கீரை 

 கொத்துமல்லிக் கீரையுண்ணிற் கோர வரோசகம்போம் 

பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண் - சத்துவமாம் 

வெச்செனவே போகம் விளையுங் சுரந்தீருங் 

கச்சுமுலை மாதேநீ காண்.

  கொத்துமல்லிக் கீரையை புளி, வரமிளகாய் , தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் வாத அரோசகம் , பித்த சுரம் போகும் . வன்மையும் , சுக்கிலமும் விருத்தியாகும். இரத்தத்தை விருத்தி செய்யும் . பித்த சம்பந்தமான வியாதியை குணப்படுத்தும் . உடலை வளர்க்கும் . தாதுவை விருத்தி செய்யும் .
   கொத்தமல்லிக் கீரையைச் சுத்த படுத்தி தண்ணீர் சேர்க்காமல் , தகுந்த புளி, வரமிளகாய் , உப்பு சேர்த்து குத்து உரலில் போட்டு இடித்து கொத்துமல்லித் துவையலை கட்டியாக எடுத்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இத்துவையல் ஒரு மாதம் வரை கெடாது .

 குறிப்பு :- உடல் வளர்ச்சிக்கு உத்தமமான கீரை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out