வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, June 2, 2011

செல்போனே கதியா? புற்றுநோய் தாக்கலாம்! : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
பாரீஸ்: செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் மூலம் புற்றுநோய் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச ஏஜென்சியின் சார்பில் செல்போனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது. 14 நாடுகளை சேர்ந்த 31 விஞ்ஞானிகள் அதற்கான குழுவில் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனை வாரிய உறுப்பினரும், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி டாக்டருமான ஜோனாதன் சாமெட் இந்த குழுவுக்கு தலைமை வகித்தார்.

செல்போன் வெளியிடும் கதிரியக்கத்தால் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து இதுவரை வெளியான அனைத்து ஆய்வுகளையும் இந்த குழு தீவிரமாக ஆராய்ந்தது. செல்போன் வெளியிடும் ரேடியோ அலைவரிசை காந்த சக்தியால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுவதை உறுதி செய்தது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் அதிக கதிரியக்கம் வெளியாகி, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்களை உடலுக்குள் ஏற்படத்தக்கூடும் என்று இந்த குழு உறுதி செய்தது.

13 நாடுகள் பங்கேற்று கடந்த ஆண்டில் இன்டர்போன் என்ற பெயரில் வெளியான ஆய்வில், செல்போன் பயன்படுத்துவதால் மூளையில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அபாய அளவுக்கு இல்லாவிட்டாலும் செல்போனை அதிகளவில் பயன்படுத்தாதவர்களைவிட 40 சத வீத வாய்ப்பு அதிகம் என்று கூறியிருந்தது. அதை ஜோனாதன் சாமெட் தலைமையிலான உலக சுகாதார அமைப்பின் குழு உறுதி செய்தது. அமெரிக்க புற்றுநோய் சங்கம், தேசிய புற்றுநோய் தடுப்பு நிறுவனம் உட்பட இந்த விஷயத்தில் ஆய்வு நடத்திய உலகின் பெரும்பாலான மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள், செல்போன் வெளியிடும் கதிரியக்கத்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவே கூறியுள்ளதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, துப்புரவுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், பூச்சி கொல்லிகளால் மனித உடலுக்கு எவ்வளவு தீங்கு ஏற்படுமோ அதே பிரிவில் செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தையும் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

ஆபத்தை தவிர்ப்பது எப்படி?

*செல்போனில் நேரடியாக பேசாமல் 'ஹெட்செட்' அணியலாம்.

*முடிந்தவரை செல்போனை காதில் வைக்காமல் 'ஸ்பீக்கர் போன்' பயன்படுத்தலாம்.

*கதவுகள் அடைக்கப்பட்ட பகுதியில் செல்போனில் பேசுவதை தவிர்க்கலாம். திறந்தவெளியில் பேசுவதால் கதிரியக்கம் காற்றில் மறையும்.

*உடலில் இருந்து சிறிது தள்ளி வைத்து பேசுவது நல்லது.

*செல்போனில் அதிகம் பேசுவதை தவிர்த்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out